பூக்கி – திரை விமர்சனம்
காதலர்கள் பிரிவதும், பிரிந்தபின் இணைவதும் உலக வழக்கம். ஆனால் காலத்துக்கு காலம் பிரிவுகளை எதிர்கொள்ளும் பாணி மாறிக்கொண்டே தான் இருக்கிறது. அந்த மாற்றங்களை நாயகனும் நாயகியும் எப்படி சந்திக்கிறார்கள் என்பதே பூக்கி படத்தின் மையக் கருத்து. நாயகனாக Ajay Dishan நடித்துள்ளார். அவரிடம் எந்த “மீட்டர்” தேவையோ அதை துல்லியமாகப் பிடித்து நடிப்பை வாங்கியுள்ளார் இயக்குநர் Ganesh Chandra. ஹீரோவும் முழு ஒத்துழைப்புடன் நல்ல ரிசல்ட் கொடுத்துள்ளார். நாயகி Thanusha தனது நடிப்பில் ஒரு மெச்சூரிட்டி காட்டியுள்ளார். சில காட்சிகளில் அவரது எமோஷனல் எக்ஸ்பிரஷன்கள் கணிசமாக ஸ்கோர் செய்கின்றன. Adithya Kathir அடிக்கும் பன்ச்கள் ஜென்சி கிட்ஸை சிரிக்க வைக்கும் வகையில் இருக்கின்றன. Vivek Prasanna தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஒரு எமோஷனல் சீனில் Pandiarajan சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும் செயல்பட்டுள்ளார் கணேஷ் சந்திரா. நல்ல லைட்டிங் சென்ஸ் கொண்டவர் என்பதைக் காட்டும் விதமாக, குட்டி குட்டி காட்சிகளுக்கே க்யூட்டான ஷாட்ஸை கம்போஸ் செய்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் அதிக தாக்கத்...