Posts

Showing posts with the label Thaman Akshan

ஜென்ம நட்சத்திரம் திரைவிமர்சனம்

Image
கதைக்களம்: நடிகர் தமன் குமார் நடிப்பில் வெளிவந்துள்ள ஜென்ம நட்சத்திரம் ஒரு திகில்-நாடகத் திரைப்படம். கர்ப்பிணியான கதாநாயகி (மல்வி மல்ஹோத்ரா) அமானுஷ்ய அனுபவங்களை எதிர்கொள்கிறார். அதே சமயம், கதாநாயகன் ஒரு வெற்றிகரமான இயக்குநராக வேண்டும் என்று போராடுகிறார். இன்னொரு பக்கம், காளி வெங்கட் ஒரு அரசியல்வாதியிடம் வேலை செய்யும் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். அவரது மகளின் அறுவை சிகிச்சைக்காக 40 லட்சம் ரூபாய் தேவைப்பட, அரசியல்வாதியின் கருப்பு பணத்தை திருடி, புதுச்சேரி அருகே உள்ள பழைய கட்டிடத்தில் மறைத்து வைக்கிறார். ஆனால், அவர் அரசியல்வாதியின் ஆட்களால் கொல்லப்படுகிறார். இறப்பதற்கு முன், தமன் குமாரிடம் பணத்தைப் பற்றி சொல்லி, மகளைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறார். கதாநாயகனும் நண்பர்களும் அந்த பணத்தை எடுக்க பழைய கட்டிடத்திற்குச் செல்கையில், அங்கு அமானுஷ்ய சம்பவங்களால் ஒவ்வொருவராக உயிரிழக்கின்றனர். இந்தக் கொலைகளுக்குக் காரணம் யார்? பணம் கிடைத்ததா? குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதா? என்பது மீதிக்கதை. படத்தின் அலசல்:  நடிப்பு: தமன் குமார், மல்வி மல்ஹோத்ரா, காளி வெங்கட், தலைவாசல் விஜய...