Posts

Showing posts with the label Aazhi

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ – இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது

Image
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஒரு கிரைம் திரில்லராக தயாராகியுள்ளது. ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. படம் பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இசை வெளியீட்டு விழாவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் ரவி கொட்டரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ.ஜெ., ஹரி உத்ரா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரவி கொட்டரக்கரா ப...