Posts

Showing posts with the label Elayaraja Sekar

பிரபல பாடகர் டார்க்கி நாகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ‘AKU DARKKEY’ திரைப்படத்தின் ஃகிளிம்ஸை வெளியிட்டார் ஜி.வி. பிரகாஷ்;

Image
 இசை சார்ந்து உருவாகும் டார்க்கி நாகராஜின் பயோ-பிக் திரைப்படமான “AKU DARKKEY”; மலேசிய இந்திய இசைத் துறையின் தலைசிறந்த புரட்சியாளராக திகழும் டார்க்கி நாகராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு, புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், பலரும் எதிர்பார்த்திருந்த ‘AKU DARKKEY’ திரைப்படத்தின் முதல் ஃகிளிம்ஸை வெளியிட்டார். Poketplay Films நிறுவனம் தயாரிக்க, விக்ரம் லட்சுமணம் இயக்கும் இந்த திரைப்படம், மலேசிய இந்திய சுயாதீன இசையின் களத்தில் ஒரு வரலாற்றுச் செயல்பாட்டாகும். சாம்பாராக் எனும் தனித்துவமான இசைமுறையை உருவாக்கிய டார்க்கியின் வாழ்க்கையை  மையமாகக் கொண்ட இந்த சினிமா பயோபிக் (musical biopic), அவரின் வாழ்க்கைப் பயணத்தையே திரைபடமாகக் கொண்டு வருகிறது. “Aku” என்பது மலாய் மொழியில் “நான்” என்று பொருள்படும் – ஆகவே, ‘AKU DARKKEY’ என்பது ஒரு வலிமையான அடையாளமும், பெருமைமிக்க மரபும் கொண்ட தலைப்பாகும். டார்க்கியின் துணிச்சலான குரல் மற்றும் அழியாத பார்வையை இந்த பெயர் பிரதிபலிக்கிறது. கோலா லிப்பிஸிலிருந்து கோலா லம்பூருக்குள் வெறும் கனவுகளோடு வந்த டார்க்கி, பின்னாளில் “The Keys” என்ற புகழ்பெற்ற ...