Posts

Showing posts with the label vangaala virikudaa

வங்காள விரிகுடா’ – விமர்சனம்

Image
தூத்துக்குடி மாவட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள வங்காள விரிகுடா, தனிமை, காதல், குற்ற உணர்வு மற்றும் மனநிலைக் குழப்பங்களை மையமாக வைத்து நகரும் ஒரு உளவியல் த்ரில்லர் படம். மக்கள் செல்வாக்கு மிக்க தொழிலதிபராக வரும் நாயகன் குகன் சக்கரவர்த்தி, இன்பமற்ற திருமண வாழ்க்கையால் மனம் உடைந்து கடற்கரையில் தனிமையை தேடுகிறார். அந்த தருணத்தில், அவரது முன்னாள் காதலி தற்கொலைக்கு முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரை காப்பாற்றுகிறார். முன்னாள் காதலியின் திருமண வாழ்க்கையும் தன்னுடைய வாழ்க்கையைப் போலவே தோல்வியடைந்தது என்பதை அறிந்த நாயகன், அவருடைய வாழ்க்கையை மறுசீரமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கொலை வரை செல்வதும், அவருடன் சேர்ந்து வாழத் தொடங்குவதும் கதைக்கு திருப்புமுனையாக அமைகிறது. கொலை செய்த நபரிடமிருந்து, நாயகியின் செல்போனுக்கு தொடர்ந்து வரும் மிரட்டல் அழைப்புகள் கதையை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கின்றன. இறந்தவன் எப்படி பேச முடியும் என்ற கேள்வி நாயகனையும், பார்வையாளர்களையும் ஒரே நேரத்தில் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. தனிமையில் இருக்கும் நாயகியை அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து...