Posts

Showing posts with the label Santhanam

"டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தினை விளம்பரப்படுத்த ZEE5 நடத்திய “கோஸ்ட் ஆன் வீல்ஸ்” சிறப்பு புரமோ நிகழ்ச்சி !!

Image
இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும்  Zee5 தளத்தில்,  சமீபத்தில் வெளியான "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படம்,  ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5.  சந்தானம் நடிப்பில் "டிடி நெக்ஸ்ட் லெவல்" படம்   Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை மேலும் மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 ஒரு பஸ்ஸில் படத்தின் தீமை மையமாக வைத்து,  படத்தின் போஸ்டர்களுடன் படத்தின் கருவை மையமாகக் கொண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் பேய் வேடமிட்ட ஒருவர் உலாவும் வகையில் உருவாக்கி, சென்னை முழுக்க  மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறது.  முதல் முறையாக இந்த பஸ் மக்கள் அதிகம் புழங்கும், கிண்டி சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகை யாஷிகா...

Devil’s Double Next Level - திரை விமர்சனம்

Image
கதைக்களம் கிஷா என்ற பெயரில் சந்தானம், சினிமாக்களை கலாய்த்து விமர்சனம் செய்ய, அவரது விமர்சனங்களால் பல படங்கள் தோல்வியடைகின்றன. இதனால், இயக்குநராக இருந்த ஒருவர் கொலை செய்யப்பட்டு, தியேட்டர் ஒன்றில் பேயாக மாறுகிறார். அந்தப் பேய், விமர்சகர்களை "ஸ்பெஷல் ஷோ" என்ற பெயரில் அழைத்து கொல்கிறது. சந்தானத்தின் குடும்பத்தையும் அந்த தியேட்டருக்கு வரவழைத்து, திரையில் ஓடும் படத்திற்குள் அவர்களை சிக்க வைக்கிறது. அந்தப் படத்தில் சைக்கோ கில்லர், பேய் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் தோன்ற, சந்தானம் தன் குடும்பத்தை காப்பாற்றி, படத்திலிருந்து உண்மை உலகத்திற்கு திரும்பினாரா என்பது மீதிக்கதை. படம் எப்படி இருக்கு ? சந்தானம் தனது வழக்கமான காமெடி வண்டியை ஓட்டி வருகிறார், ஆனால் இந்த முறை அந்த வண்டி பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டது போல உணர்கிறது. படத்திற்குள் சந்தானம் மாட்டிக்கொள்ளும் தருணத்தில் திரைக்கதை சுவாரஸ்யமாகத் தொடங்கினாலும், பின்னர் வரும் காட்சிகள் "இதுதானா அடுத்து நடக்கப்போகிறது?" என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன. தில்லுக்கு துட்டு படத்தில் முதல் பாதி மந்தமாக இருந்தாலும், இரண்டாம் பாதி காமெடியா...