Posts

Showing posts with the label Saravanan

லீடர் - திரைவிமர்சனம்

Image
லீடர் லெஜண்ட் நடித்த விஜய் படம்” எனச்சொல்லும் படி ஒரு தெறி சம்பவத்தை செய்துள்ளனர் இயக்குநர் துரை செந்தில்குமாரும், லெஜண்ட் சரவணனும் தூத்துக்குடி ஹார்பரிலிருந்து சர்வீஸுக்காக வரும் கார்களை ரிப்பேர் செய்து கொடுக்கும் வேலை செய்கிறார் ஹீரோ சரவணன். அவருக்கு செவித்திறன் குறைபாடுள்ள ஒரு மகள். மகள் என்றால் அவருக்கு உயிர். ஒருபுறம் தூத்துக்குடி ஹார்பரில் கண்டெய்னர் மூலம் நாட்டிற்கு அச்சுறுத்தலான ஒரு பொருளை கடத்த திட்டுமிட்டுள்ளது வில்லன் சந்தோஷ்பிரதாப் டீம்! சாதா மெக்கானிக், எப்படி இம்மாம் பெரிய ட்ராபுக்குள் செல்கிறார் என்பதும், அப்படிச் சென்றபின் அவர் யாராக இருக்கிறார் என்பதும் தான் லீடரின் மீதி திரைக்கதை கதாநாயகனாக லெஜண்ட் படத்தில் அறிமுகமான சரவணன், இந்தப்படத்தில் கதையின் நாயகனாக வந்துள்ளார். சிற்சில எமோஷ்னல் காட்சிகளில் கூட குறை தெரியாதபடி நடித்துள்ளார். ஆக்சன் காட்சிகளில் நிஜமாகவே அதகளம் செய்துள்ளார். ஆண்ட்ரியா கேரக்டர் வலுவாக எழுதப்பட்டுள்ளது. அவரும் சிறப்பாக நடித்துள்ளார். ஷாம் நல்ல ரோலில் பரிணமித்துள்ளார். சந்தோஷ் பிரதாப் பெரிய கேரக்டரைச் சரியாகச்செய்து ஸ்கோர் வாங்கியுள்ளார்....

மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ் – லெஜெண்ட் சரவணன் இப்போது ‘லீடர்’

Image
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் R.S. துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் இந்த படம், முழுக்க முழுக்க மாஸ்-ஆக்ஷன்-திரில் அனுபவமாக உருவாகியுள்ளது. நிழல் உலகத்துக்கும் காவல் துறைக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில், ஒரு சாமானியன் சிக்கிக்கொள்கிறான். அந்த தீவிரமான சூழலில் இருந்து, தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அவன் எவ்வாறு காப்பாற்றிக் கொள்கிறான் என்பதே ‘லீடர்’ படத்தின் மையக் கரு. இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்று, சென்னையில் நிறைவடைந்துள்ளது. மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப்...

‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் வெற்றி விழா !!

Image
“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது.  உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் மக்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, வெளியான வேகத்தில் ZEE5ல் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.   இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  இந்நிகழ்வினில்  “18 கிரியேட்டர்ஸ்” சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் பேசியதாவது…  எல்லோருக்குமே மிகப்பெரிய நன்றி. உங்களால் தான் இந்த சீரிஸ் மிகப்பெர...

Z5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் 72 மணிநேரத்தில் 51 மில்லியன் நிமிடங்களை கடந்து சாதனை !

Image
இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில் அடுத்தடுத்து பல தரமான படைப்புகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. ZEE5 வெளியீடாக 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ்,fசீரிஸில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் சரவணன். அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.  கடந்த ஜூலை 18 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸ் வெளியான வேகத்தில் … மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ZEE5 இன் புதுமையான, தனித்துவமான விளம்பரங்கள், மக்கள் மத்தியில் சீரிஸ் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மக்களை பார்க்கத் தூண்டும் வகையில், ZEE5 ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல்...

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ் - ‘சட்டமும் நீதியும்’ வரும் ஜூலை 18 முதல் ஸ்ட்ரீமாகிறது !

Image
 இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில்,  விலங்கு, அயலி, கூசே முனுசாமி வீரப்பன், ஐந்தாம் வேதம் போன்ற ஹிட் தமிழ் ஓரிஜினல்களுக்குப் பிறகு,  தனது அடுத்த அதிரடி கோர்ட் டிராமா சீரிஸான  *‘சட்டமும் நீதியும்’* சீரிஸை  வரும்  ஜூலை 18, 2025 அன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, சென்னை மாநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. திரையுலகில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் நடிகர் சரவணன்,  தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் அவரது  சாதனை இந்நிகழ்வினில் கொண்டாடப்பட்டது.  முன்னாள் ஹீரோவாகவும், பின்னர் பல வலிமையான கேரக்டர் ரோல்களால் ரசிகர்களின் மனங்களில் தனி இடம் பிடித்தவர் சரவணன், தற்போது தீவிரமும், உணர்வுகளும் கலந்த நுணுக்கமான நடிப்புடன் மீண்டும் நாயகனாகத் திரும்புகிறார். நடிகர் சரவணனுடன்  உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV  நடித்தி...