தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் ' ஏஸ் ' (ACE ) பட முன்னோட்டம்
Trailer Link 👇 https://www.youtube.com/watch?v=zJVimAeVXk4 *பெரும் வரவேற்பை பெற்று வரும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE) பட முன்னோட்டம்* 'மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ்' ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் - சிவகார்த்திகேயன் - அருண் விஜய் - விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ' ஏஸ்' ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் , ஜாக்கிநாரீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திர...