தக் லைஃப் - முதல் பாடலை கமல் ஹாசன், மணி ரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், சிலம்பரசன் டி.ஆர், மற்றும் த்ரிஷா வெளியிட்டார்கள்.
ஜிங்குச்சா - வெட்டிங் ஆந்தம் (கல்யாணப் பாட்டு) பாடல் வரிகள் கமல் ஹாசன், இசை ஏ.ஆர். ரஹ்மான். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் முதல் பாடலான, 'ஜிங்குச்சா' கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டபோது சென்னை மாநகரமே இசையும் கொண்டாட்டமுமாக முழங்கியது. திரையுலக ஜாம்பவான்கள் கமல் ஹாசன், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வெளியிட, முன்னணி நட்சத்திரங்கள் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் அசோக் செல்வன் பங்கேற்ற இந்நிகழ்வு, இந்திய சினிமாவின் துணிச்சலான புதியதோர் அத்தியாயத்தின் தொடக்கமாகத் திகழ்ந்தது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ஆர். மகேந்திரன், மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் சிவா ஆனந்த் இணைந்து தயாரிக்க, 'தக் லைஃப்' திரையிலும் திரைக்குப் பின்னும் புதிய, வலுவான கூட்டணியுடன் உருவாகி வருகிறது. கல்யாணக் கொண்டாட்டம் என்னும் விறுவிறுப்பான பின்னணியில், கமல் ஹாசனும், சிலம்பரசன் டி.ஆரும், இணைந்து ஆடியிருக்கும் இந்தப் பாடல், ரஹ்மானுக்கே உரித்தான பாணியில் நா...