"எமன் கட்டளை" - கதை சுருக்கம்
இரு நண்பர்களின் தவறான செயலால் ஒரு பெண்ணின் திருமணம் நின்றுவிடுகிறது. இதனால் மனமுடைந்த மணப்பெண்ணும் அவளது தந்தையும் விஷம் குடித்து உயிரிழக்கின்றனர். இதை அறிந்த நண்பர்களில் ஒருவனான அன்பு, மனவேதனையிலும் அவமானத்திலும் தற்கொலை செய்து எமலோகம் செல்கிறான். அங்கு, எமதர்மராஜா, "உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும்" எனக் கூறி, அன்புவுக்கு 60 நாட்களுக்குள் அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்க உத்தரவிடுகிறார்.
பூலோகம் திரும்பிய அன்பு, தன் நண்பனுடன் சேர்ந்து பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடி அலைந்து திரிகிறான். இதற்கிடையில், பெண்ணின் தாய்மாமன் அவளைத் திருமணம் செய்ய முயல்கிறான். அதேவேளை, பெண்ணுக்கு அன்பு மீது காதல் மலர்கிறது. ஆனால், தன் பணியை மட்டுமே கருத்தில் கொண்ட அன்பு அவளிடமிருந்து விலகி ஓடுகிறான். 59 நாட்கள் முடிந்து 60-வது நாள் விடியும் வேளையில், எமன் கட்டளைப்படி அன்பு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தாரா என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் கதைதான் இந்த "எமன் கட்டளை" மேலும் இப்படம் இந்த இமாதத்தில் வெளியாக உள்ளது த...