'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் ' ஏஸ் ' (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்' ( ACE). வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில், இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … உடை வடிவமைப்பாளர் சப்னா கால்ரா பேசியதாவது… எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படத்தில் விஜய் சேதுபதி சாருக்கு மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் செய்துள்ளேன். மலேசியா சென்று அங்கு இருக்கும் வாழ்க்கைக்கு ஏற்ப ஸ்டைலீஷை இப்படத்தில் கொண்டு வந்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் ஜெயிக்கும், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. எடிட்டர் பென்னி ஆலிவர் பேசியதாவது… என்னை நம்பி இத்தனை பெரிய புராஜக்டை தந்த இயக்குநர் ஆறுமுகத்திற்கு என் நன்றி. எனக்கு தேவையான எ...