Posts

Showing posts with the label Arivan

அறிவான் - திரைவிமர்சனம்

Image
அறிவான் – தொடர்கொலைக்கும் திரில்லர் விசாரணைக்கும் இடையிலான முயற்சி தொடர்ச்சியான கொலைகளும் அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையும் மையமாகக் கொண்ட திரில்லர் படம் தான் அறிவான். ஹீரோ ஆனந்த் நாக் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி. சஸ்பென்ஷனில் இருந்த அவர், ஒரு நல்ல நாளில் மீண்டும் பணியில் சேருகிறார். அவர் பொறுப்பேற்கும் இடம் நெய்வேலி. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணைச் சுற்றி நிகழும் இரட்டை கொலை சம்பவங்கள் வழக்கை சிக்கலாக்குகின்றன.  அந்தக் கொலைகளை விசாரிக்கும் ஆனந்த் நாக், விசாரணையின் போக்கில் பல திருப்பங்களை சந்திக்கிறார். அவற்றே படத்தின் மையக் கதையை நகர்த்துகின்றன. ஆனந்த் நாக் கதாநாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் போலீஸ் யூனிஃபார்ம் அவருக்கு சற்றே பொருந்தாதது போல் தோன்றினாலும், கதை நகர்ந்தபின் அது இயல்பாகிறது.  பிக்பாஸ் ஜனனி ஒரு மீடியா நபராக தோன்றி இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கான வேலையைச் செய்துள்ளனர்; பெரிதாக குறை சொல்ல முடியாது. யஸ்வந்தின் ஒளிப்பதிவு இன்னும் தனித்துவம் காட்டியிருக்கலாம். இருப்பினும் ட்ரோ...