Posts

Showing posts with the label with love

வித் லவ் – விமர்சனம்

Image
‘வித் லவ்’ படம் இன்றைய இளம் தலைமுறையின் காதல், பழைய உறவுகளை மீண்டும் சந்திக்கும் தருணங்கள், அவற்றில் உருவாகும் குழப்பங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ஒரு சிம்பிள் காதல் கதை. இயக்குநர் மதன், பெரிய திருப்பங்கள் இல்லாமல், உணர்ச்சிகளை முன்னிலைப்படுத்தி கதையை நகர்த்த முயற்சி செய்துள்ளார். அபிஷான் ஜீவித் தனது கதாபாத்திரத்தை அமைதியான, இயல்பான நடிப்பில் வெளிப்படுத்துகிறார். சில காட்சிகளில் அவரது body language நன்றாக வேலை செய்கிறது. அனஸ்வரா ராஜன் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான முதிர்ச்சியையும் உணர்ச்சியையும் அளிக்கிறார்.  இருவருக்கிடையேயான கெமிஸ்ட்ரி சில இடங்களில் இயல்பாக இருந்தாலும், அந்த காதல் உறவு பார்வையாளரின் மனதில் ஆழமாக பதிய வேண்டிய அளவுக்கு வளரவில்லை. திரைக்கதை படத்தின் முக்கிய குறையாக தெரிகிறது. முதல் பாதி மெதுவாக நகர்வதால் சில இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது. இரண்டாம் பாதியில் உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் இருந்தாலும், அவை எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கதையின் போக்கு பெரும்பாலும் முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாக உள்ளது. சீன் ரோல்டனின் இசை படத்திற்...

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ பிரம்மாண்ட அறிவிப்பு!

Image
தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு பலமுனைகளில் பல புதுமையான விளம்பரங்களைச் செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாக...

வித் லவ் ( With Love )” திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழா

Image
Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது  இந்நிகழ்வினில்..,  உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி பேசியதாவது..,   இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. அபிஷன், அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடும்பம் போல இருந்த குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.  எடிட்டர் சுரேஷ் பேசியதாவது.., வித் லவ் படத்தில் என்னை அறிமுகப்படுத்தி வைத்தது மதன், வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்க...