Posts

Showing posts from March, 2025

ஜூலையில் வெளியாகிறது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 'மாரீசன்'

Image
*பஹத் பாசில் - வடிவேலு இணைந்து மிரட்டும் 'மாரீசன்' திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு* *'மாமன்னன்' வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீசன்' பட அப்டேட்* நடிகர்கள் பஹத் பாசில் - வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் 'மாரீசன்' எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாரீசன்' எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். டிராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயார...

“சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு !!

Image
பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.  இந்நிகழ்வினில்..,  நடிகர் கார்த்தி பேசியதாவது…  சர்தார் பெயர் வைத்ததிலிருந்தே அந்தப்படத்தின் மீது, எனக்கு நிறைய பிரியம் இருந்தது. நம் கிராமத்தில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து, அவனுக்கு டிரெய்னிங் தந்து, உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். இது உண்மையில் நடந்தது. அதை அருமையான கதையாக்கி படமெடுத்தார் மித்ரன். இப்போது அந்த பாத்திரம் திரும்ப வருவது மகிழ்ச்சி. எல்லோரும் முதன் முறையாக ஒரு உளவாளி தனக்காக இல்லாமல், நாட்டுக்காக போராடுகிறான் என இந்தப்படத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது....

ராமேஸ்வரத்தில் ரம்யா நம்பீசன் சமுத்திரக்கனியின் புதிய திரைப்படம் பூஜை

Image
இயக்குநர் கே.வீர குமார் இயக்கத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் ரம்யா நம்பீசன் நடிக்கும் 'பைலா' திரைப்படத்தின் பணிகள் இன்று ராமேஸ்வரத்தில் பாரம்பரிய பூஜையுடன் தொடங்கியது. வணிக ரீதியாக வெற்றி பெற்ற 'ராசய்யா' மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'காதல் நிஜம்' படங்களை தயாரித்ததற்காக மிகவும் பிரபலமான 'ராசய்யா' கண்ணன் தயாரிக்கும் இந்தப் படம், இப்போது கலா தியேட்டர்ஸ்  பேனரின் மூலம் 'பைலா' படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் உள்ள உத்திரகோச மங்கை அம்மன் கோயில் மற்றும் வழி விடு முருகன் கோயில்களில் தொடங்கியது. தற்போது ராமேஸ்வரம் மற்றும் இலங்கை ஆகிய இரு இடங்களிலும் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தின் மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார் என்றும், சமுத்திரக்கனியின் சகோதரராக ராஜ்குமார் நடிக்கிறார் என்றும் படத்தின் யூனிட்டுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இலங்கையைச் சேர்ந்த நடிகை மைக்கேலா இந்த தமிழ் படத்தில் ஒரு முக்கிய வேடத்...

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் "படையாண்ட மாவீரா"விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து

Image
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா.  மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பின் நெருப்பு தகிக்கும் ஐந்தாவது பாடலை இயக்குநர் வ.கௌதமனிடம் தந்ததோடு அப்பாடலைப் பற்றி ஆகப் பெரும் நெகிழ்வோடு தனது எக்ஸ் தளப் பதிவில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார். கௌதமன் இயக்கும் புரட்சிப் படம் படையாண்ட மாவீரா  அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறேன் ஒவ்வொரு பாடலையும் வந்து வாங்கிச் செல்வார்; வாசித்து வழங்கச் சொல்வார் இந்தப் பாடலை வாசிக்கும் பொழுது குளமான கண்களோடு கும்பிட்டுக்கொண்டே எழுந்தார் அவர் கைகளில் பாட்டுத்தாளை ஒப்படைத்தேன் நல்ல ரசிகனுக்கு நல்ல பாடல் அமையும்  இசை: ஜி.வி.பிரகாஷ் பல்லவி: "மாவீரா மாவீரா வாவா வீரா மாவீரா! நதியில் குளித்தது போத...

’டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Image
 எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'டெஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.  நிகழ்வில் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் வைஸ் பிரெசிடெண்ட் மோனிகா ஷெர்கில், "தமிழ் சினிமாவில் திறமையான கதைகள் பல வெளியாகி இருக்கிறது. இதில் 'டெஸ்ட்' திரைப்படமும் ஒன்று. இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா கதை குடும்பம், முக்கிய கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசும். இயக்குநர் சஷிகாந்த் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் என திறமையான நடிகர்கள் அனைவரும் முதல் முறையாக இந்த படத்திற்காக ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். இந்த வருடம் எங்களுடைய முதல் ஒரிஜினல் தமிழ் திரைப்படம் 'டெஸ்ட்'. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்" என்றார். நடிகர் மாதவன், “ஒரு கதாபாத்திரம் எடுத்து வந்தால் நல்லவராக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி அதை எந்த அளவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் தான் கவனமாக இருப...

சீயான் விக்ரம் நடிக்கும் 'வீரதீர சூரன் பார்ட் 2 ' ஹைதராபாத் ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு

Image
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீரதீர சூரன் பார்ட் 2 ' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது.  எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'வீரதீர சூரன் - பார்ட் 2' வெளியாகிறது . இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் - மதுரை - திருச்சி - கோயம்புத்தூர் - உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப் படுத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக நேற்று ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.  இந்நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர் என் வி ஆர் சினிமாஸ் என். வி. பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.  விந...

யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Image
*ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  “டாக்சிக் -  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” 2026 மார்ச் 19 அன்று வெளியாகிறது !!* ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  “டாக்சிக் -  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”, வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி, உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் படம் உகாதி, குடி பட்வா, சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும் நாளில் வெளியாகவுள்ளதால், இந்தியாவில் நான்கு நாட்கள் நீடிக்கும் விடுமுறை வார இறுதி மூலம் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு மார்ச் 20/21 ஆம் தேதி இஃப்தார் பண்டிகையும் வருவதால்,  ரசிகர்கள் கொண்டாட இது ஏதுவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் கன்னட சினிமாவுக்குப் புதிய உயரங்களைத் தரவுள்ள அதே சமயத்தில், உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. கன்னட மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டு வரும் முதல் பெரிய இந்தியத் திரைப்படம் என்...

EMI படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளீட்டுவிழா கலகலப்பாக நடைபெற்றது

Image
நானே என் முதல் படத்திற்கு மொக்கை கதையை தான் வைத்திருந்தேன் EMI  பட  விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் கலகலப்பு.. சபரி புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் " EMI " மாதத் தவணை ". இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது.   தற்போதைய உலகில், 20,000 ரூபாயில ஒரு மொபைல் வாங்கவேண்டுமானால் கூட,  அதை முழு பணத்தைக் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை,  எல்லோரும்  இஎம்ஐ ல போட்டுத் தான் வாங்குகிறார்கள். இப்போது லோ கிளாஸ்,  மற்றும் மிடில் கிளாஸ், ஹைகிளாஸ் என அவங்க அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி ஏதோ ஒன்னு, காரோ, பைக்கோ, இஎம்ஐ  போட்டு தான் வாங்குகிறார்கள்.  இந்த மாதிரி இஎம்ஐ வாங்கவேண்டுமானால் அவங்களுக்கு சூருட்டி கையெழுத்து ஒருத்தர் போடவேண்டும், அப்போதான் தான் அவர்களுக்கு இஎம்ஐ -ல ஈசியா லோன் கிடைக்கும். இந்த மாதிரி லோன் எடுத்துட்டு போயிட்டு  ரெண்டு மூணு மாசம் தவணை கட்டவில்லையென்றால் மேனேஜ...

சரத்குமார் வெளியிட்ட 'தி வெர்டிக்ட்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Image
 கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக  உருவாகி உள்ள திரைப்படம் தான் 'தி வெர்டிக்ட்'. இப்படம்  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளது . இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். 'தி வெர்டிக்ட்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்  கிருஷ்ணா சங்கர்.  அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அவர் படம் பற்றிக் கூறும்போது,   '' மர்மங்களும் எதிர்பாராத முடிச்சுகளும் யூகிக்க முடியாத திருப்பங்களும் நிறைந்த திரில்லர் படமாக  இந்த 'தி வெர்டிக்ட்' திரைப்படம் உருவாகி இருக்கிறது.இது நிச்சயமாக சிலிர்க்கும் உணர்வோடு பார்வையாளர்களை  இருக்கை நுனியில் அமர வைக்கும் "என்கிறார். படத்தை எழுதி இயக்கியுள்ள  அறிமுக இயக்குநர்   கிருஷ்ணா சங்கர்  படத்தைப் பற்றி பேசும்போது,  "ஒரு பணக்கார அமெரிக்க பெண் கொலை ஆகிறாள். அவளுடன் நட்பு பாராட்டி வந்த இன்னொரு பெண் அந்தக் கொலை வழக்க...

ரசிகர்களின் பாராட்டு மழையில் 'ஸ்வீட் ஹார்ட் ' படக் குழு

Image
ரசிகர்களை சந்தித்து அன்பை பகிர்ந்து வரும் 'ஸ்வீட் ஹார்ட்' படக் குழு 'மாடர்ன் மாஸ்ட்ரோ ' யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான 'ஸ்வீட் ஹார்ட்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு வழங்கி வருகிறார்கள்.  உறவுகள் குறித்த உளவியல் சிக்கலில் தவிக்கும் காதலர்- அவரை காதலிக்கும் காதலி- இந்த ஜோடி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ரசனையாகவும், உணர்வுபூர்வமாகவும் விவரிக்கும் படைப்பாக 'ஸ்வீட் ஹார்ட்' இருந்ததால்... ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவினை வழங்கி வருகிறார்கள்.  அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் வசீகரிக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் கவரப்பட்ட ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையரங்கத்திற்கு வந்து தங்களின் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.  ரசிகர்களின் வரவேற்பினை கண்டு சந்தோஷமடைந்த படக் குழு, கடந்த 19 ஆம் தேதியன்று ஈரோடு - ஸ்ரீ சக்தி திரையரங...

எந்த விசேஷத்தில் எடுத்தது ஷில்பா மஞ்சுநாத்தின் அழகிய புகைப்படங்கள்

Image
நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் சமீபத்திய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல்  Actress Shilpa Manjunath Recent photoshoot 

மீண்டும் கதாநாயகன் அவதாரம் எடுக்கும் வின்டேஜ் ஹீரோ

Image
மலேசியாவை சேர்ந்த ஜி வி இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் மலேசிய ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் டத்தோ கணேஷ், அனித்ரா நாயர், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர் வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான பாத்திரங்களையும் படைத்து அவற்றில் எதிர்பாராத நடிகர்களை நடிக்க வைப்பதில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி, 'தாதா 87' திரைப்படத்தில் சாருஹாசனையும், 'பவுடர்' படத்தில் நிகில் முருகனையும், 'ஹரா' படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் மோகனையும் நடிக்க வைத்தார். தற்போது இன்னுமொரு முற்றிலும் மாறுபட்ட முயற்சியாக 'பன்னீர் புஷ்பங்கள்' மூலம் 80களில் ரசிகர்கள் இதயங்களில் இடம் பிடித்த சுரேஷை தனது புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் விஜய்ஶ்ரீ ஜி.   இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ஒரு பரபரப்பான கதையை பின்னணியாக கொண்டதாகும். மலேசியாவை சேர்ந்த ஜி வி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டத்தோ கணேஷ் மற்றும் விஷால் ஆகியோர் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கின்றனர். சுரேஷை தொடர்ந்து முக்கிய வேடத்தில் மலேசிய ரஜினிகாந்த் என்று ர...

வேம்பு படக்குழு பங்கேற்ற உலக சாதனை விழா

Image
  ஒரு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற நம் பாரம்பரிய கலையான சிலம்பகலையில் ஒன்றான மான் கொம்பு சுற்றும் போட்டியானது நடைபெற்றது, இப்போட்டியில் சிறுவர் சிறுமிகள் பலரும் கலந்து கொண்டனர், அவ்விழாவில் கலந்துகொண்ட வேம்பு படத்தின் நாயகன் ஹரிகிருஷ்ணன் நாயகி ஷீலா மற்றும் இயக்குநர் V. ஜஸ்டின் பிரபு, ஒளிப்பதிவாளர் A. குமரன் பங்கேற்றனர், நடிகர்கள் இருவரும் உலக சாதனை படைத்த சிறுவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர், வேம்பு படம் சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் படம் என்று அவர்கள் முன்னிலையில் பேசினார்கள் மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் வி.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிராமப்புற நாடகக் கலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர்... தனுஷ் நடித்த தங்கமகன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆ.குமரன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்...

சாக்ஷி அகர்வாலின் திரையுலக வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியது!

Image
மலையாளத்தில் அறிமுகமான "பெஸ்டி" திரைப்படத்தின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, சாக்ஷி அகர்வாலின் தமிழ்த் திரைப்படமான "ஃபயர்" குறிப்பிடத்தக்க வகையில் 30 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து, நடிகை சாக்ஷி அகர்வால் திரைத்துறையில் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறார். அவரது பன்முகத்தன்மை மற்றும் திறமை பரவலான பாராட்டைப் பெற்று, தமிழ், மலையாளம் மற்றும் ஓடிடி தளங்களில் அற்புதமான புதிய படங்களில் நடிப்பதற்காக கையெழுத்திட்டுள்ளார். சாக்ஷியின் மலையாள அறிமுக திரைப்படமான "பெஸ்டி" விமர்சகர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல், தொழில்துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகவும் அவரை நிலைநிறுத்தியுள்ளது. இதற்கிடையில், அவரது தமிழ் திரைப்படமான "ஃபயர்" பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியை பதிவு செய்தது மட்டுமல்லாமல், திரையரங்குகளில் 30 நாட்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருப்பதால், குறிப்பிடத்தக்க மைல்கல்லை பதிவு செய்துள்ளது. அவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியால் உற்சாக மிகுதியான சாக்ஷி, பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் திரைத்துறையில் தனக...