போஸ் வெங்கட், கானா உலகநாதன், மற்றும் ஆடுகளம் முருகதாஸ் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் “ஐயம்”. இலங்கையிலிருந்து வாழ்வாதாரத்திற்காக நம் நாட்டை நாடி வரும் ஒரு குடும்பம் இங்கு எதிர்கொள்ளும் அநீதியை மையமாகக் கொண்ட உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது. செந்தில் ஆண்டவர் மூவிஸ் சார்பில் ஈஸ்வரன் விஜயன் தயாரிப்பில், ந. வசந்த் இயக்குகிறார். படத்தில் பாலாஜி மற்றும் ரெய்னா கரட் கதாநாயகன் – நாயகியாக அறிமுகமாகின்றனர். மேலும் போஸ் வெங்கட், கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் தீபா சங்கர், KPY வினோத், மிப்பு, ரஞ்சன், விஜய் கணேஷ், கிரேன் மனோகர், யாசர், சுப்ரமணி, DNA விஜயலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 🎥 தொழில்நுட்பக் குழு: ஒளிப்பதிவு – கமலக்கண்ணன் இசை – கார்த்திக் பாடல்கள் – கானா உலகநாதன், லிகரன், ந. வசந்த் படத்தொகுப்பு – சயான் சண்டை அமைப்பு – நாக் அவுட் நந்தா கலை – வேலு மக்கள் தொடர்பு – வெங்கட் தயாரிப்பு மேற்பார்வை – குமார் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ந....
FMS மீடியாஸ் சார்பில் சக்திவேல் நாகப்பன் தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘ராட்ட’ . லாப நோக்கமின்றி, நம் சமுதாயத்தை நோக்கி ஒரு நேர்மையான பார்வையுடன், விசைத்தறி தொழிலை மையமாக வைத்து உருவான ஒரு வாழ்வியல் திரைப்படம் இது. முழுக்க முழுக்க குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக இயல்பாக படமாக்கப்பட்டுள்ள இந்த படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம். படத்தின் கதையின்படி, நாயகன் சக்திவேல் விசைத்தறி தொழிலில் தேர்ந்து விளங்கும் ஒரு உழைப்பாளி. அவர் வேலை செய்யும் தறிப்பட்டறையிலேயே சிறந்த தொழிலாளி என்ற பெயரை வாங்கும் அளவுக்கு உழைப்பை நேசிப்பவர். மகனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக அவரது அம்மா கோவில் கோவிலாக சென்று வேண்டிக் கொள்கிறார். இதற்கிடையில், அதே தறிப்பட்டறையில் வேலைக்கு சேரும் நாயகி ஹெலன் , சக்திவேல் வீட்டுக்கு அருகிலேயே குடியேறுகிறார். ஒருவரை ஒருவர் காதலித்தாலும், அதை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த தறிப்பட்டறையின் முதலாளி சித்தா (தர்ஷன்) , நாயகியை திருமணம் செய்ய விரும்பி தனது ஆசையை தெரிவிக்கிறார். அதை நாயகி மறு...
கதைச் சுருக்கம்: சண்முக பாண்டியன் (வேலு) மற்றும் கஸ்தூரி ராஜா (வெள்ளைச்சாமி) ஒரு யானையை (மணியன்) குடும்ப உறுப்பினராக பாசத்துடன் வளர்க்கின்றனர். ஆனால், யானைக்கு மதம் பிடித்து ஆபத்தை ஏற்படுத்த, நீதிமன்ற உத்தரவால் அதை முகாமுக்கு அனுப்புகின்றனர். முகாமில் யானை காணாமல் போக, வேலு அதைத் தேடி அலைவதே படத்தின் மையக் கதை. நடிப்பு: சண்முக பாண்டியன்: ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார். 'பொட்டு வெச்ச தங்கக்குடம்' பாடலில் அவரது ஆக்ஷன் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், இயக்குநர் அவரை முழுமையாகப் பயன்படுத்தவில்லை; சில காட்சிகளில் மேலோட்டமாகவே இருக்கிறார். கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், அருள்தாஸ்: தங்கள் பங்களிப்பை ஓரளவு சிறப்பாக வழங்கியுள்ளனர். ஆனால், மற்ற நடிகர்கள் கதையுடன் ஒட்டாமல், வெறும் கடந்து போவதாக உள்ளனர். AI விஜயகாந்த்: ரமணாவாக வரும் AI விஜயகாந்த் ரசிகர்களைக் கண்கலங்க வைத்தாலும், தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ளது. தொழில்நுட்ப அம்சங்கள்: 👉இசை: இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஆனால், பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. 👉திரைக்கதை & இயக்கம்: ...
7G ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக உள்ளது.. இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா, எம்.எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமானுஷ்ய திரில்லர் ஜேனரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வரும் பிப்-28 (நாளை) இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த படத்தின் நாயகன் ஆதி தனது கதாபாத்திரம் குறித்தும் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். *பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நடிகர் ஆதி பேசும்போது,* “’ஈரம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் உடன் இணைந்துள்ள படம் இது. எனது இரண்டாவது படமே அறிவழகன் சாருடன் தான். அந்த படம் உருவான சமயத்தில் அவரது எண...
Comments
Post a Comment