Posts

Showing posts from October, 2025

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

Image
போஸ் வெங்கட், கானா உலகநாதன், மற்றும் ஆடுகளம் முருகதாஸ் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் “ஐயம்”. இலங்கையிலிருந்து வாழ்வாதாரத்திற்காக நம் நாட்டை நாடி வரும் ஒரு குடும்பம் இங்கு எதிர்கொள்ளும் அநீதியை மையமாகக் கொண்ட உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது. செந்தில் ஆண்டவர் மூவிஸ் சார்பில் ஈஸ்வரன் விஜயன் தயாரிப்பில், ந. வசந்த் இயக்குகிறார். படத்தில் பாலாஜி மற்றும் ரெய்னா கரட் கதாநாயகன் – நாயகியாக அறிமுகமாகின்றனர். மேலும் போஸ் வெங்கட், கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் தீபா சங்கர், KPY வினோத், மிப்பு, ரஞ்சன், விஜய் கணேஷ், கிரேன் மனோகர், யாசர், சுப்ரமணி, DNA விஜயலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 🎥 தொழில்நுட்பக் குழு: ஒளிப்பதிவு – கமலக்கண்ணன் இசை – கார்த்திக் பாடல்கள் – கானா உலகநாதன், லிகரன், ந. வசந்த் படத்தொகுப்பு – சயான் சண்டை அமைப்பு – நாக் அவுட் நந்தா கலை – வேலு மக்கள் தொடர்பு – வெங்கட் தயாரிப்பு மேற்பார்வை – குமார் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ந....

முதல்முறையாக அட்லீ மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில், ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் இணைய “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” இப்போது உலகளவில் ஸ்ட்ரீமிங்காகிறது!

Image
ஜவான், பிகில், மெர்சல் போன்ற வெற்றிப் படைப்புகளைத் தந்த  ப்ளாக்பஸ்டர் இயக்குநர் அட்லீ, தற்போது மிகப்பெரிய விளம்பர காம்பெயினாக உருவான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” என்ற விளம்பரபடத்தின் மூலம் தனது விளம்பர அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளார். இந்த விளம்பரத்தில் சிங்ஸ் மாஸ்காட்டாக தோன்றியிருக்கும் ரன்வீர் சிங், முன்னணி நட்சத்திரங்களான ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் அட்லியின் பிரத்தியேகமான ஸ்டைலில்  பிரமாண்டம், இதுவரை காணாத விஷுவல் எபெக்ட்ஸ், அதிரடி காட்சிகள் என அனைத்தும் கலந்த இந்தப் படைப்பை,  ஒரு சிறந்த குழு இணைந்து, இணையத்ததையே வைரலாக கலக்கும்  அளவுக்கு உருவாக்கியுள்ளது! இது குறித்து இயக்குநர் அட்லீ கூறுகையில்.., “அன்பு தான் என் படைப்புகளின் அடிநாதம்.  சிங்ஸ்  இந்தியாவில் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு விசயத்தை உருவாக்க விரும்பவில்லை,  இந்திய மக்கள் பார்த்தவுடன் விரும்பும் வகையிலான ஒன்றை உருவாக்கவே நினைத்தார்கள்.  அதனால்தான் நான் என் முதல் விளம்பரத்துக்கு ஒப்புக்கொண்டேன். ர...

நடிகர் ரவி மோகன் எழுதிய என் வானம் நீயே பாடல் வெளியானது

Image
இதயத்தை தொட்டுவரும் பாடல் வீடியோ “என் வானம் நீயே” இன்று வெளியீடு; “என் வானம் நீயே” பாடல் ஒரு தாயின் அன்பின் ஆழத்தையும், சொலப்படாத உணர்ச்சிகளையும் கொண்டாடும் ஒரு பாடல். இது வெறும் ஒரு இசை அல்ல, ஒரு உணர்ச்சி. https://youtu.be/VkY8P-js6Pw ஒவ்வொரு தாயும் நம் வாழ்க்கையில் ஊற்றும் அந்த அமைதியான ஆசீர்வாதங்களின் பிரதிபலிப்பு “என் வானம் நீயே”. பாடலின் கரு பற்றி, “என் வானம் நீயே என்பது ஒரு தாய் நமக்குக் கொடுக்கும் பேராசீர்வாதங்களில் ஒரு சிறிய துளி. தாய்மார்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல அழகான பாடல்கள் இதுவரை வந்துள்ளன, அவற்றில் நாங்களும் ஒரு துளி சேர்க்க விரும்பினோம்.” இந்தப் பாடல் ஒவ்வொரு தாய்க்கும் அர்ப்பணிப்பு, “அம்மா, இது உனக்காக ♥️” மனதை நெகிழவைக்கும் இசை படைப்பின் சிறப்பு அம்சமாக, நடிகர் ரவி மோகன் முதன்முறையாக பாடலாசிரியராக அறிமுகமாகிறார். திரையில் தனது உணர்வூட்டும் நடிப்புகளால் அறியப்பட்ட அவர், இப்போது சொற்களின் உலகில் தனது தனிப்பட்ட உணர்வுகளால் நிரம்பிய ஒரு புதிய கலைப் பயணத்தை தொடங்குகிறார். இசையமைப்பாளர் மற்றும் பாடகி கேனீஷா கூறுகையில், “இந்தப் பாடல் என் இதயத்திலிருந்து வந்தது...

நவம்பர் 7ல் வெளியாகும் 'அதர்ஸ்'

Image
கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'. மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.  அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தினில், ஜிப்ரான் இசையமைப்பையும், ராமர் படத்தொகுப்பையும், பிரதீப் சண்டை காட்சிகளையும், சந்தோஷ் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர். இப்படத்தினில் முக்கிய கதபாத்திரங்களில் 'முண்டாசுபட்டி' ராமதாஸ், 'நண்டு' ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.   கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்ப்பினை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படம் நவம்பர் 7ம் தேதியன்று வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

வரவேற்பைக் குவித்து வரும் “ரஜினி கேங்” ஃபர்ஸ்ட் லுக்

Image
MISHRI ENTERPRISES  திரு செயின்ராஜ் ஜெயின் அவர்களின் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற “ஜெய்ஹிந்த்” (முதல் பாகம்) மற்றும் சமீபத்தில் வெளியான “அஷ்டகர்மா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில் கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம்  “ரஜினி கேங்”.   நேற்று வெளியான இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.  மறைந்த எஸ். செயின்ராஜ் ஜெயின் அவர்களால் நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட பைனான்ஸ்,  விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஜெய் ஹிந்த், அஷ்டகர்மா ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி கேங் அவர்களின் மூன்றாவது பெரிய தயாரிப்பாக, பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில்,  அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள்,...

சன் நெக்ஸ்ட் தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ராம்போ”

Image
தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி OTT வெளியீடாக “ராம்போ” திரைப்படத்தை, வரவிருக்கும் தீபாவளி சிறப்பு படமாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுகிறது. அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள “ராம்போ” நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன்,  ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் முத்திரை இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன், அதிரடி, ஆக்சன் நிரம்பிய அழுத்தமான படமாக இப்படம் வெளிவரவுள்ளது.  படம் குறித்து இயக்குநர் முத்தையா கூறியதாவது..,...