Posts

Showing posts from November, 2025

BP180 – சுருக்கமான விமர்சனம்

Image
நேர்மைக்கும் ரவுடியிசத்துக்கும் நடக்கும் மோதலே BB180யின் மையக்கதை. அரசு மருத்துவமனையில் நேர்மையான டாக்டராக பணியாற்றும் தான்யா ரவிச்சந்திரன், பாக்கியராஜின் மகள் விபத்தில் இறந்த பின்னர் விதிமுறையின்படி போஸ்ட் மார்ட்டம் செய்யத் தீர்மானிக்கிறார். அதைத் தடுக்க வரும் டேனியல் பாலாஜியின் ஈகோ வெடிப்பிலிருந்து தொடங்கும் ஹீரோயின்–வில்லன் மோதலே படத்தின் கோர். நடிப்பில், தான்யா ரவிச்சந்திரன் தனது கேரக்டருக்கு முழு நீதி செய்கிறார். டேனியல் பாலாஜியின் வில்லத்தனம் திகழ்கிறது. பாக்கியராஜ் சில காட்சிகளில் ஓவர் எமோஷனுக்கு போனாலும் பாத்திரம் சரியாகவே நிற்கிறது. மற்றவர்கள் ஓகே. வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் டேனியல் பாலாஜியை கண் முன்னே தோன்றச் செய்து  நடிப்பில் சிறப்பாக விளையாடி நம் மனதில் இன்று வரை கூடவே இருக்கிறார்  டெக்னிக்கலாக, ஜிப்ரானின் இசை சில இடங்கள் நன்று ஆனால் கொஞ்சம் லவுட். செவியை பதம் பார்க்கிறது ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு அழகான ஷாட்களால் கவனம் ஈர்க்கிறது. இயக்கத்தில் ஜேபி–மிஷ்கின் ஸ்டைல் ரெபரன்ஸ் நன்றாக தெரிகிறது. அரசு மருத்துவமனையை மையமாக வைத்து கதை பின்னிய விதம் புது ...

ரஜினி கேங் - திரைவிமர்சனம்

Image
திருட்டு தாலியை மையமாக வைத்து ஜாலியாக கதை சொல்ல முயன்றிருக்கும் படம் இது. அமைச்சரின் காரை முனிஷ்காந்த் திருடுகிறார்; அதே காரில் லிப்ட் கேட்டு வரும் காதல் ஜோடி — ரஜினி கிஷன் & திவிகா. காதல் ஜோடியை ஊர் விரட்ட, காரை அமைச்சர் ஆட்கள் தேட, அதே நேரத்தில் அதே காரிலிருந்த நகைகளை திருடிய கல்கியை கும்பல் விரட்ட — எல்லாம் சேர்ந்து காமெடி கலகம். கல்கி திருடிய தாலியை ரஜினி கிஷன் திவிகாவுக்கு கட்டியதால், தாலி ஏற்ற திவிகாவுக்கு பேய் பிடிப்பதும் கதையை வேறொரு ட்ராக்கில் தள்ளுகிறது. பிறகு இது எவ்வளவு ‘சூடு’ பிடிக்கிறது என்பதை தான் படம் தீர்மானிக்கிறது. ரஜினி கிஷன் காமெடியில் ஓரளவு work out. திவிகா க்ளாமர்–ஆக்ஸன்–காமெடி எல்லாம் balance செய்து நடித்துள்ளார். முனிஷ்காந்த் எப்போதும்போல் scene-க்கு சிரிப்பை inject செய்கிறார். கல்கி, மொட்டை ராஜேந்திரனும் காமெடி  முயற்சி செய்கிறார்கள். பாடல்கள் சில சின்ன energy கொடுக்கிறது; ஆனால் ஜோஸ் ரோபர்டின் BGM பழைய படங்களின் flavour-ஐ நினைவூட்டுகிறது. ஒளிப்பதிவாளர் சதிஷ்குமார் — பேய் + காமெடி கலவைக்கு பொருத்தமான lighting செய்து deliver செய்துள்ளார். இயக...

Friday – தமிழ் திரைப்பட விமர்சனம்

Image
“ வினை விதைத்தவன் வினை அறுப்பான் ” என்பதை பல லேயர்களில் சொல்லும் படம் தான் Friday. மைம்கோபி ஒரு அரசியல் பலம் கொண்ட ரவுடி; MLA சீட்டுக்காக எந்த அளவுக்கும் செல்வது அவரது நோக்கம். KPY தீனாவுக்கு தன் அம்மாவின் மரணத்துக்கு காரணமானவர்களை அழிக்க வேண்டும் என்ற தாபம். அனீஷ் மாசிலாமணிக்கு தன் தம்பியை நல்ல பாதைக்கு கொண்டு வர வேண்டும் என்பது டார்கெட். இந்த மூவரின் வேறு வேறு இலக்குகள் ஒரே புள்ளியில் சேருவதுதான் படத்தின் கோர். மைம்கோபி திரையெங்கும் பளிச்சிடுகிறார்; தீனாவும் செம்ம சீரியஸ் கதாபாத்திரத்தில் பிரமாதம்.  ஆனால் ஒரே ஒரு இடத்தில் அதுவும் முக்கியமான இடத்தில் எமோஷன் மிஸ் ஆனது வருத்தம் நாயகி சித்து குமரேசன் நடிப்பால் ஈர்க்கிறார்; ராமச்சந்திர துரைராஜ், கலையரசன் உள்ளிட்டோர் solid support. ஜானி நாஷின் கன்னியாகுமரி visuals eye-catchy. டுமே இசையில் புதிய அணுகுமுறை — குறிப்பாக silent portions நல்லா work ஆகுது. பிரவீன் M. எடிட்டிங் pace-யை செம்ம correct-ஆ வைத்திருக்கிறார். ஒவ்வொரு கேரக்டருக்கும் தனி narrative கொடுத்திருப்பது positive. முதல்பாதி சில இடங்களில் emotional connect குறைவு இர...

NBK 111 பிரமாண்டமாக தொடக்கம்!பாலகிருஷ்ணா – கோபிசந்த் மலினேனி வரலாற்று எபிக் படத்திற்கு மாபெரும் பூஜை!

Image
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பாய்ச்சலுக்குப் பிறகு, இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் மறுபடியும் இணைந்து வரலாற்றைத் துலுக்கும் #NBK111 என்ற பிரம்மாண்ட எபிக் படத்தை தொடங்கி வைத்துள்ளார். வெங்கட சதீஷ் கிலாரு (Viruthi Cinemas) மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் ஜோடியாக இணைந்துள்ளார். சிம்ஹா, ஜெய் சிம்ஹா, ஸ்ரீ ராம ராஜ்யம் படங்களுக்குப் பிறகு, இது இவர்களின் நான்காவது கூட்டணி. ஹைதராபாத்தில் நடைபெற்ற மாபெரும் பூஜை விழாவுடன் படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. AP அமைச்சர்கள் அனகனி சத்ய பிரசாத் மற்றும் கோட்டிப்பட்டி ரவி குமார் திரைக்கதை நகலை வழங்க, இயக்குநர் B. கோபால் க்ளாப் அடிக்க, பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வினி கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தார். முதல் ஷாட்டை போயபாடி ஶ்ரீனு, பாபி, புச்சி பாபு இணைந்து இயக்கினர். படத்தின் சிறப்பு போஸ்டரில் நீண்ட முடியும் பூரண தாடியும் கொண்ட அரச கம்பீரத்தில், வாள் மற்றும் நங்கூரத்துடன் பாலகிருஷ்ணா புதிய அவதாரத்தில் காட்சியளிக்கிறார். வரலாற்று பி...

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்னாத் கூட்டணி #PuriSethupathi படப்பிடிப்பு நிறைவு!

Image
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து உருவாக்கும் #PuriSethupathi திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. Puri Connects மற்றும் JB Motion Pictures தயாரிக்கும் இந்த படம், மாஸ் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, பூரி ஜெகன்னாத் – விஜய் சேதுபதி – சார்மி கௌர் ஆகியோர் இணைந்து ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் சேதுபதி, பூரி மற்றும் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் நினைவில் நிற்கக்கூடியது என்றும், அனைவரையும் மிஸ்ஸ் பண்ணப் போகிறேன் என்றும் கூறியுள்ளார். பூரி, சார்மி ஆகியோரும் தங்களின் உணர்ச்சிகளை பகிர்ந்துள்ளனர். விஜய் சேதுபதி நகைச்சுவையாக பூரியின் ஜாக்கெட்டை பாராட்டியதும் அந்த வீடியோவின் ஹைலைட்களிலொன்றாக அமைந்தது. படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களில் இசையால் கவனம் பெற்ற தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்...

மாஸ்க் – திரைவிமர்சனம்

Image
மாஸ்க் அணிந்து நடத்தப்பட்ட கொள்ளையை, கமர்ஷியல் மாஸ் அணிந்து நமக்கு எப்படி கடத்தியிருக்கிறார்கள்? பார்ப்போம். ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் மாஸ்க் அணிந்த குழு 440 கோடி ரூபாய் கொள்ளையடிக்கிறது. அந்த கொள்ளையைச் சுற்றி மூன்று முக்கியர்: விசாரணையில் இறங்கும் டிடெக்டிவ் கவின் நாடு கடக்க வேண்டும் என்ற கனவு கொண்ட ஆண்ட்ரியா தனிக்கழத்தில் வெற்றி காண ஆசைப்படும் அரசியல்வாதி பவன் இவர்களை ஒன்றிணைக்கும் பின்னணி என்ன? அதுவே படத்தின் மையம். நடிப்பு கவின் – ஜாலி, கேலி, எமோஷன்… எந்த mood-ஐ கொடுத்தாலும் effortless-ஆ handle செய்து, லைக் வாங்கும் performance. ஆண்ட்ரியா – மீண்டும் ஒருமுறை தானொரு நடிப்பு சுரங்கம் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறார். பவன் – அவருக்குக் கொடுக்கப்பட்ட களத்தைப் புரிந்து smart-ஆ விளையாடியிருக்கிறார். கிங்ஸ்லி மற்றும் மற்ற supporting cast—அனைவரும் தங்களுடைய space-ல solid. மேலும் நெல்சனின் voice-over படத்துக்கு energy-யை கொட்டுகிறது. டெக்னிக்கல் டீட்டெயில்ஸ் ஜிவி பிரகாஷ் – பாடல்களும் BGM-மும் இரண்டும் positive vibe-ஐ தூக்கி நிறுத்தும் வகையில். ஆர்.டி. ராஜசேகர் – அனுபவம் ப...

தீயவர் குலை நடுங்க – திரைவிமர்சனம்

Image
தொடர்கொலைகளால் நகரம் நடுங்குகிறது… அந்த கொலைகாரன் யார்? அந்த விசாரணை எப்படி ஒரு ஆசிரியை வாழ்க்கையையே குலைக்கிறது? இதைத்தான் திகில்–டிராமா கலந்த திரைக்கதையால் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன். ஈகிள் அப்பார்ட்மெண்டில் தன் காதலனுடன் வாழும் ஆசிரியை ஐஸ்வர்யா ராஜேஷ். இதே சமயம், முகமூடி அணிந்த மர்ம நபர் தொடர்ச்சியாக கொலைகள் செய்வது நகரத்தை பரபரப்பில் ஆழ்த்துகிறது. அர்ஜுன் அந்த வழக்கின் விசாரணையில் இறங்க, அது எப்படித் தற்செயலாக ஐஸ்வர்யாவின் வாழ்க்கையைத் தொட்டுவிடுகிறது? அதைச் சுற்றிய மர்மமே படத்தின் முதுகெலும்பு. நடிப்பு ஐஸ்வர்யா ராஜேஷ் – டூயெட், கிலேஜ் cliché கதைகளிலிருந்து விலகி, சமூக அக்கறையுடன் கூடிய கதாபாத்திரத்தில் தன்னைத்தானே மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆசிரியை கேரக்டரில் அவர் இரண்டு பரிமாணங்களையும் அழகாக வெளிப்படுத்துகிறார். அர்ஜுன் – ஸ்டைலான விசாரணை அதிகாரி. குறிப்பாக லிஃப்ட் ஃபைட் சீன்—“நான் இன்னும் யங் அண்டு ஃபிட்” என்பதை just-ஆ prove பண்ணிட்டார். அனிகா – சிறப்பு குழந்தை கதாபாத்திரத்தில் மனதை உருக வைக்கும் நடிப்பு. அபிராமி, லோகு, வேல. ராமமூர்த்தி, தங்கத...

யெல்லோ – திரைவிமர்சனம்

Image
வாழ்க்கை வண்ணங்கள் மாறுவது போல மனிதர்களின் உணர்வுகளும் மாறும் என்பதையே மையமாகக் கொண்டு நகரும் இனிமையான எமோஷனல் பயணம் தான் யெல்லோ. கதை அம்மா, தங்கை, உடல்நிலை சரியில்லாத அப்பா—இவர்கள் நடுவே வாழும் பூர்ணிமா ரவிக்கு காதல் தோல்வி ஒரு பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து மீள தன் சிறுவயது உறவுகளை தேடி ஒரு பயணம் செல்கிறாள். அந்தப் பயணத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தி, பின்னர் வைபவ் முருகேசன் ஆகியோரை சந்திக்கிறார். பூர்ணிமா – வைபவ் இருவரின் இணைப் பயணத்தில் நிகழும் எமோஷனல் மற்றும் லைட் ஜாலியான தருணங்களே முழுப் படம். நடிப்பு பூர்ணிமா ரவி – படம் முழுவதையும் தாங்கும் பெரும் ஸ்ட்ரெங்க்த். வீக் ஆன மனநிலையை முகபாவனைகளில் மிகச்சரியாக காட்டியுள்ளார். எதிர்காலத்தில் இன்னும் பெரிய கதைகளை எளிதில் தாங்கிடும் திறன் தெரிகிறது. வைபவ் முருகேசன் – கேரக்டரில் இருக்கும் positivity-யை அழகாகப்படுத்தியுள்ளார். அவர் வரும் சீன்ஸ் அனைத்தும் குளிர்ச்சியான vibe கொடுக்கிறது. நமிதா கிருஷ்ணமூர்த்தி, டெல்லி கணேஷ், பிரபு சாலமன் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை neat-ஆக செய்துள்ளார்கள். தொழில...

இரவின் விழிகள் - திரைவிமர்சனம்

Image
சமூக ஊடகங்களை சுயநலத்திற்காக பயன்படுத்தும் மனிதர்களுக்கு டார்க் உலகை காட்டி எச்சரிக்கிறது இரவின் விழிகள் யூட்யூப் சேனலின் வீவ்ஸுக்காகவும், காசுக்காகவும் கண்டதையும் வீடியோ எடுத்து கன்டென்ட் ஆக்குகிறார்கள் ஹீரோ மகேந்திராவும், ஹீரோயின் நீமாரேயும். இன்னொரு புறம் இப்படியான ஆட்களை கடத்தி வைத்து கொடுமை செய்கிறார் வில்லன் சிக்கல் ராஜேஷ். படத்தின் இயக்குநரும் அவரே! ஒரு கட்டத்தில் அவர் ஹீரோ ஹீரோயினையும் கடத்துகிறார். அதற்காக அவர் சொல்லும் காரணமே படத்தின் மொத்தக்கதையும் ஹீரோ மகேந்திரா தான் படத்தின் தயாரிப்பாளரும் என்பதால் நிறைய காட்சிகளில் அதிக லிபர்டி எடுத்துக்கொண்டார் போல. நிச்சயமாக அவர் இன்னும் நடிப்பில் நிறைய உழைப்பைப் போட வேண்டும். நாயகி நீமா ரே ஒகே ரகம். வில்லனாக வரும் சிக்கல் ராஜேஷ் கூடுமான வரை நல்ல நடிப்பை கொடுக்க முயற்சித்துள்ளார். நிழல்கள் ரவி, மாரிமுத்து உள்பட இன்னும் சில கேரக்டர்கள் படத்தில் இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பாஸ்கர் கூடுமான வரை தனது கேமராவால் படத்தின் தரத்தைக் கூட்ட போராடியுள்ளார். இன்னும் ட்ரெண்டியாக ஷாட்ஸை கம்போஸ் செய்திருக்கலாம். பின்னணி இசையிலும் பாடல்களில...

மிடில் கிளாஸ் – திரைவிமர்சனம்

Image
ஒரு நடுத்தர குடும்பத்தஸ்னின், குடும்பத்தஸ்ரியின் மனநிலையும் வாழ்நிலையும் எவ்வளவு நிஜமாக, எவ்வளவு அழுத்தமாக சொல்லலாம் என்று காட்டியுள்ளார் இயக்குநரும் எழுத்தாளருமான கிஷோர் முத்துராமலிங்கம். எழுத்தில் அவர் outright-ஆக ஜெயித்துள்ளார். கதை சென்னையில் சொந்த வீடு வாங்கும் கனவோடு இடைவிடாது போராடும் விஜயலக்‌ஷ்மி. அவர் கணவன் முனிஷ்காந்த் மனம் மட்டும் சொந்த ஊரிலேயே இருக்கிறது. ‘ஆசை–தேவை’ போராட்டத்தில் தினமும் சிக்கிக்கொண்டிருப்பது தான் middle class life. இந்த குடும்பத்தில் ஒரு அதிசயம் எப்போது நிகழும்? எப்படி நிகழும்? அதுவே படத்தின் second half drive. நடிப்பு முனிஷ்காந்த் – உடல் மொழி, கண்களில் இருக்கும் நொறுக்கம், பயம், நம்பிக்கை, திண்டாட்டம்… எல்லாமே textbook-level realistic. இந்த வருடம் அவருக்கு விருதுகள் கம்பீரமா வரப் போகிறது என்ற level-க்கு performance. விஜயலக்‌ஷ்மி – இந்த படத்தின் strongest surprise. “எதை செய்தால் பணம் வரும்?” என்று மனசு நினைத்தால் உடனே செய்து விடும் middle-class wife mindset-ஐ pure-ஆக carry செய்துள்ளார். கேரக்டர் ஆர்க் செம்ம பிடித்திருக்கிறது. ராதாரவி, காளி வெங்...

கும்கி 2 திராவிமர்சனம்

Image
இசை: நிவாஸ் கே. பிரசன்னா அமைத்திருக்கும் பாடல்கள் காட்சிகளுடன் இயற்கையாக கலக்கின்றன. ஒவ்வொரு பாடலும் படத்தின் உணர்வுகளுக்கும் சூழலுக்கும் சரியாகப் பொருந்தியிருக்கிறது. பின்னணி இசை உணர்ச்சிகளை நன்றாக உயர்த்துகிறது. கதை: மலைப் பிரதேசத்தில் வாழும் மதி சிறுவயது முதலே பாசத்திற்காக ஏங்கும் ஒருவர். மதியின் தாய் (மைய்னா புகழ் சூசன்) சாராயம் விற்பவராக இருப்பதால், மகனிடம் அக்கறை காட்டுவதில்லை. பள்ளியிலும் "சாராயம் விற்பவரின் மகன்" என்ற குற்றம்சாட்டி யாரும் மதியிடம் நெருங்கமாட்டார்கள். மனஉளைச்சலில் இருந்தபோது, ஆசிரியர் ஒருவர் இயற்கையின் அமைதியை உணரும்படி அறிவுறுத்துகிறார். அதே நேரத்தில் பள்ளத்தில் சிக்கிய குட்டி யானையை மதி காப்பாற்றுகிறார். அதன்பின் அந்த யானை மதியுடன் பாசத்தால் இணைகிறது. பாசத்திற்காக துடிக்கும் மதிக்கு இந்த யானை சகோதரன் போல் ஆகிறது. ஒருநாள் யானை திடீரென மாயமாகிவிடுகிறது. அதைத் தேடி மதியின் வாழ்க்கை குழம்பிப் போகும் நிலையில், ஆசிரியர் அவரை தொடர்ந்து படிக்கச் செய்கிறார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்கு திரும்பும் மதிக்கு, யானை மாயமான மர்மம் குறித்து அதிர்ச்சியா...

செகோன் இந்திய விமானப்படை மராத்தான் 2025 இன் தொடக்க விழாவில் ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’ டீசரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டது!

Image
இந்திய விமானப்படையின் துணிச்சலையும் பாரம்பரியத்தையும் கௌரவிக்கும் வகையில், கார்கில் போரின் போது நடத்தப்பட்ட உலகின் மிக உயரமான விமான நடவடிக்கையின் (Air operation) கதையைச் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸின் இந்தத் தொடர். புது தில்லி, நவம்பர் 2, 2025: கார்கில் போரில் இந்திய விமானப்படையின் முக்கிய பங்கை எடுத்து சொல்லும் வகையில் நெட்ஃபிலிக்ஸில் வரவிருக்கும் தொடரான ’ஆபரேஷன் சஃபேத் சாகர்’ இருக்கிறது. புது தில்லியில் முதன்முதலில் நடைபெற்ற செகோன் இந்திய விமானப்படை மராத்தான் 2025 (SIM-25) இல் வெளியிட்டபோது இந்தியாவின் உற்சாகம் உச்சத்தை எட்டியது. அபிஜீத் சிங் பர்மர் மற்றும் குஷால் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் உருவாக்கப்பட்டு ஓனி சென் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சித்தார்த், ஜிம்மி ஷெர்கில், அபய் வர்மா, மிஹிர் அஹுஜா, தாருக் ரெய்னா மற்றும் அர்னவ் பாசின் உள்ளிட்ட பலர் பணியாற்றியுள்ளனர்.  புது தில்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் பணியாற்றும் அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல்- ஏ.பி. சிங் உள்ளிட்ட பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆயிரக்க...

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்

Image
  “45 தி மூவி” — கருநாட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம். சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், அதன் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ்கள் வெளியாகியதிலிருந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், படக்குழு வெளியிட்ட தனித்துவமான, அதிரடி நடனப்பாடல் “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) ரசிகர்களிடையே இன்னும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடல் ஒரு காடு சூழலில்தான் தொடங்குகிறது — இதில் ராஜ் பி ஷெட்டி மீது நாய்கள் தாக்குதல் நடத்துகின்றன, அவர் ஒரு பள்ளத்தில் விழுகிறார். பின்னர் சில ஆப்பிரிக்க பழங்குடி சிறார்கள் அவருக்கு உதவுகிறார்கள்; அவருடைய உடையை மாற்றி மர்மமாக மறைந்து விடுகிறார்கள். இதற்கிடையில் சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா அந்த இடத்துக்குச் செல்கிறார்கள். இந்த பாடலுக்கான வரிகள் மற்றும் பாடல் குரல் தமிழ் கானா கலைஞர் கானா காதர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன. உற்சாகமான கா...

யோகிபாபு, சுரேஷ் ரவிநடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

Image
BR Talkies Corporation  சார்பில் பாஸ்கரன் B,  ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், தயாரிப்பில், இயக்குநர் K பாலையா இயக்கத்தில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க,  கிராமத்து பின்னணியில், கலக்கலான ஃபேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் புதிய திரைப்படத்தின்  படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. முன்னதாக  BR Talkies Corporation தயாரிப்பில், மிக அழுத்தமான படைப்பாக  “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,  இரண்டாவது தயாரிப்பாக, இந்த புதிய படத்தை  அனைத்து அம்சங்களுடன்,  நகைச்சுவை நிறைந்த, முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக  உருவாக்கி வருகிறது. இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் வகையில்,  சமூக அக்கறை கருத்தோடு, கிராமத்து பின்னணியில், கலக்கலான காமெடி டிராமாவாக இப்படத்தினை  இயக்குநர் K பாலையா எழுதி இயக்குகிறார். இப்படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தீபா பாலு, பிரிகிடா சாகா,  தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ர...