மாஸ்க் – திரைவிமர்சனம்
மாஸ்க் அணிந்து நடத்தப்பட்ட கொள்ளையை, கமர்ஷியல் மாஸ் அணிந்து நமக்கு எப்படி கடத்தியிருக்கிறார்கள்? பார்ப்போம்.
ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் மாஸ்க் அணிந்த குழு 440 கோடி ரூபாய் கொள்ளையடிக்கிறது. அந்த கொள்ளையைச் சுற்றி மூன்று முக்கியர்:
விசாரணையில் இறங்கும் டிடெக்டிவ் கவின்
நாடு கடக்க வேண்டும் என்ற கனவு கொண்ட ஆண்ட்ரியா
தனிக்கழத்தில் வெற்றி காண ஆசைப்படும் அரசியல்வாதி பவன்
இவர்களை ஒன்றிணைக்கும் பின்னணி என்ன? அதுவே படத்தின் மையம்.
நடிப்பு
கவின் – ஜாலி, கேலி, எமோஷன்… எந்த mood-ஐ கொடுத்தாலும் effortless-ஆ handle செய்து, லைக் வாங்கும் performance.
ஆண்ட்ரியா – மீண்டும் ஒருமுறை தானொரு நடிப்பு சுரங்கம் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறார்.
பவன் – அவருக்குக் கொடுக்கப்பட்ட களத்தைப் புரிந்து smart-ஆ விளையாடியிருக்கிறார்.
கிங்ஸ்லி மற்றும் மற்ற supporting cast—அனைவரும் தங்களுடைய space-ல solid.
மேலும் நெல்சனின் voice-over படத்துக்கு energy-யை கொட்டுகிறது.
டெக்னிக்கல் டீட்டெயில்ஸ்
ஜிவி பிரகாஷ் – பாடல்களும் BGM-மும் இரண்டும் positive vibe-ஐ தூக்கி நிறுத்தும் வகையில்.
ஆர்.டி. ராஜசேகர் – அனுபவம் பேசும் அளவுக்கு grand & stylish visuals.
ஒட்டுமொத்தமாக technical side-ல் strong.
இயக்கமும் திரைக்கதையும்
இயக்குநர் நச்-ஆக கதையையும், மகிழ்ச்சி தரும் ஐடியாக்களையும் பிடித்திருக்கிறார்.
ஒவ்வொரு ட்விஸ்டும் “அட!” என்று சொல்ல வைக்கும் அளவுக்கு work out ஆகிறது.
ஆனா… நேர்த்தியான, டைட்டான திரைக்கதை மட்டும் சற்று miss.
அதான் படம் “classic thriller” ஆக மாறல.
இருப்பினும்—
படம் ஒருபோதும் slow ஆகவோ, bore ஆகவோ விடறது இல்லை.
சில solid மொமண்ட்ஸ்கள், engaging scenes சேர்ந்து படம் overall enjoyable ஆகி விடுகிறது.
தீர்ப்பு
பல இடங்களில் எஞ்சாய் செய்ய வைக்கும் மாஸ்க், முடிவில் ‘பாஸ்’ ஆகிறது.
Comments
Post a Comment