யெல்லோ – திரைவிமர்சனம்
வாழ்க்கை வண்ணங்கள் மாறுவது போல மனிதர்களின் உணர்வுகளும் மாறும் என்பதையே மையமாகக் கொண்டு நகரும் இனிமையான எமோஷனல் பயணம் தான் யெல்லோ.
கதை
அம்மா, தங்கை, உடல்நிலை சரியில்லாத அப்பா—இவர்கள் நடுவே வாழும் பூர்ணிமா ரவிக்கு காதல் தோல்வி ஒரு பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து மீள தன் சிறுவயது உறவுகளை தேடி ஒரு பயணம் செல்கிறாள். அந்தப் பயணத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தி, பின்னர் வைபவ் முருகேசன் ஆகியோரை சந்திக்கிறார்.
பூர்ணிமா – வைபவ் இருவரின் இணைப் பயணத்தில் நிகழும் எமோஷனல் மற்றும் லைட் ஜாலியான தருணங்களே முழுப் படம்.
நடிப்பு
பூர்ணிமா ரவி – படம் முழுவதையும் தாங்கும் பெரும் ஸ்ட்ரெங்க்த். வீக் ஆன மனநிலையை முகபாவனைகளில் மிகச்சரியாக காட்டியுள்ளார். எதிர்காலத்தில் இன்னும் பெரிய கதைகளை எளிதில் தாங்கிடும் திறன் தெரிகிறது.
வைபவ் முருகேசன் – கேரக்டரில் இருக்கும் positivity-யை அழகாகப்படுத்தியுள்ளார். அவர் வரும் சீன்ஸ் அனைத்தும் குளிர்ச்சியான vibe கொடுக்கிறது.
நமிதா கிருஷ்ணமூர்த்தி, டெல்லி கணேஷ், பிரபு சாலமன் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை neat-ஆக செய்துள்ளார்கள்.
தொழில்நுட்பம்
ஒளிப்பதிவு – அபி ஆத்விக்: இந்தப் படத்தின் மறைமுக ஹீரோ. காட்சிகள் எல்லாம் postcard quality-யில்.
இசை:
பின்னணி இசை – ஆனந்த் காசிநாத்: காட்சிகளுக்கு தேவையான feel-ஐ கச்சிதமாக தந்துள்ளார்.
பாடல்கள் – சிப்பி கிரிஷ்: எல்லாம் ok range; சில songs double ok.
இயக்கம்
ஹரி மகாதேவன் எழுதிய சில வசனங்கள் செம்ம punch:
“உன்னை வீக் ஆக்குற பவரை இன்னொருத்தருக்கு கொடுக்காத.”
“ஒரு டைம்ல வாழ்க்கையை திரும்பிப் பார்த்தா நம்ம வாழ்க்கையில நாமளே இருக்க மாட்டோம்.”
பூர்ணிமாவின் பயணத்துக்கு இன்னும் ஸ்ட்ராங் justification இருந்திருக்கலாம். சில காட்சிகள் மீண்டும் மீண்டும் சொல்வது போல தோன்றியது.
முடிவாக
வாழ்க்கை நின்றுவிடக்கூடாது, கடந்து செல்லவேண்டும் என்ற அழகான மெசேஜை சொல்ல முயலும் படம் யெல்லோ. சிறிய குறைகளைக் கடந்து சென்று ஒரு warm feel கொடுக்கும் படம்.
யெல்லோவுக்கு நிச்சயமாக “Hello” சொல்லலாம்.
Comments
Post a Comment