Posts

Showing posts from January, 2026

லாக்கடவுன் - திரைவிமர்சனம்

Image
2020 லாக்டவுன் காலத்தில் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் அசம்பாவிதமும், அதற்கான தீர்வும்தான் இந்த படத்தின் மையக் கதைக்களம். குடும்பச் சூழல் காரணமாக கட்டாயமாக வேலை பெற்றே ஆக வேண்டிய நிலைமையில் இருக்கும் நாயகி அனுபமா பரமேஸ்வரன், வேலை தேடி அலைக்கிறார். அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் யாரும் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் அவருக்கு நேர்கிறது. அதை குடும்பத்தினருக்கு தெரியாமல் மறைக்க முயல்கிறார். அந்த அசம்பாவிதம் என்ன? அதைத் தொடர்ந்து திடீரென அறிவிக்கப்படும் லாக்டவுன் காரணமாக அவர் எதிர்கொள்ளும் புதிய சிக்கல்கள் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஒன் வுமன் ஆர்மியாக படத்தை முழுவதும் தூக்கிச் சுமந்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். கண்களில் குறும்புத்தனம் மின்னும் காட்சிகளிலும், அதற்குப் பிறகு சோகமே ததும்பும் காட்சிகளிலும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சார்லி வழக்கம்போல தனது பங்களிப்பைச் சிறப்பாக செய்துள்ளார். சர்ப்ரைஸாக நிரோஷோ, எமோஷனல் காட்சிகளில் பார்வையாளர்களை உலுக்கும் நடிப்பை வழங்கியுள்ளார். தோழியாக வரும் பிரியா வெங்கட் மனதில் நிற்கும் வகையில் தனது கதாபாத்திரத்தை ...

வங்காள விரிகுடா’ – விமர்சனம்

Image
தூத்துக்குடி மாவட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள வங்காள விரிகுடா, தனிமை, காதல், குற்ற உணர்வு மற்றும் மனநிலைக் குழப்பங்களை மையமாக வைத்து நகரும் ஒரு உளவியல் த்ரில்லர் படம். மக்கள் செல்வாக்கு மிக்க தொழிலதிபராக வரும் நாயகன் குகன் சக்கரவர்த்தி, இன்பமற்ற திருமண வாழ்க்கையால் மனம் உடைந்து கடற்கரையில் தனிமையை தேடுகிறார். அந்த தருணத்தில், அவரது முன்னாள் காதலி தற்கொலைக்கு முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரை காப்பாற்றுகிறார். முன்னாள் காதலியின் திருமண வாழ்க்கையும் தன்னுடைய வாழ்க்கையைப் போலவே தோல்வியடைந்தது என்பதை அறிந்த நாயகன், அவருடைய வாழ்க்கையை மறுசீரமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கொலை வரை செல்வதும், அவருடன் சேர்ந்து வாழத் தொடங்குவதும் கதைக்கு திருப்புமுனையாக அமைகிறது. கொலை செய்த நபரிடமிருந்து, நாயகியின் செல்போனுக்கு தொடர்ந்து வரும் மிரட்டல் அழைப்புகள் கதையை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கின்றன. இறந்தவன் எப்படி பேச முடியும் என்ற கேள்வி நாயகனையும், பார்வையாளர்களையும் ஒரே நேரத்தில் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. தனிமையில் இருக்கும் நாயகியை அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து...

திரெளபதி – 2 Movie Review

Image
திரெளபதி – 2 ஒரு வழக்கமான கமர்ஷியல் படம் இல்லை. இது 14-ஆம் நூற்றாண்டு அரசியல், மதம், அதிகாரம் என்பவற்றால் பொதுமக்கள் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள் என்பதைக் ரத்தம் தொய்ந்த வரலாற்று பதிவாக சொல்ல முயற்சிக்கும் படம். 🔥 கதை டில்லியை ஆண்ட துக்ளக், தேவகிரியை ஆண்ட பல்பான், மதுரையை கைப்பற்றிய தம்பானி – இவர்களின் ஆட்சிக் காலத்தில் வட தமிழகத்தை ஆண்ட உள்ளூர் அரசர்களும், சாதாரண மக்களும் எப்படி அடக்குமுறைகளுக்குள் தள்ளப்பட்டார்கள் என்பதே மையம். மதம் மாற மறுத்த மக்கள் சந்தித்த கொடுமைகள், அவமானங்கள், படுகொலைகள் எந்த ஒளிப்பூச்சும் இல்லாமல் காட்டப்படுகின்றன. இதற்கு எதிராக துணிச்சலுடன் எழுந்த வீரர்கள், மக்கள் தலைவர்கள் எப்படி ஒடுக்கப்பட்டார்கள் என்பதும் படத்தின் கனமான பகுதி. 🎭 நடிப்பு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் உணர்ச்சியை கட்டுப்படுத்தி, கண்ணில் கோபமும் வலியும் பேசும் வகையில் நல்ல அளவிலான பர்ஃபார்மன்ஸ் கொடுத்திருக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரங்கள் அதிகாரம் + அஹங்காரம் இரண்டையும் சரியாக வெளிப்படுத்துகின்றன. 🎥 இயக்கம் & திரைக்கதை இயக்குநர் எந்த தயக்கமும் இல்லாமல் controversi...

திரைவிமர்சனம் : ஜாக்கி படம் எப்படி இருக்கு?

Image
மதுரையின் ஒத்தகடை பகுதியை பின்னணியாக கொண்டு, கிடா சண்டை என்ற பாரம்பரிய விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ஜாக்கி, சமூக அடுக்குகளுக்கும் மனித அகம்பாவத்திற்கும் எதிராக நிற்கும் ஒரு நேர்த்தியான கிராமத்து கதையை சொல்லுகிறது. 🐐 கதை மதுரையில் கிடா சண்டையில் தொடர்ந்து வெற்றி பெற்று ‘ஜாக்கி’ பட்டத்தை கைப்பற்றும் பணக்காரர் கார்த்தி, தன் பணமும் அதிகாரமும் தான் வெற்றிக்கான காரணம் என நம்பி இறுமாப்புடன் வாழ்கிறார். அவருக்கு எதிராக, ஷேர் ஆட்டோ ஓட்டும் ஏழை மனிதன் ராமர், தன் வியர்வையும் அன்பும் ஊட்டமாக வளர்த்த ‘காளி’ என்ற கிடாவை சண்டையில் இறக்குகிறார். பணம் vs உழைப்பு, அகம்பாவம் vs அடக்கம் என்பதே படத்தின் மைய மோதல். 🎭 நடிப்பு கார்த்தியாக நடித்த நடிகர், அகம்பாவம், ஆணவம், தோல்வியை ஏற்க முடியாத மனநிலையை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். ராமர் கதாபாத்திரத்தில் வரும் நடிகர், எளிய மனிதனின் அமைதியான தைரியத்தை வார்த்தைகள் இல்லாமலேயே கண்களால் பேச வைக்கிறார். காளி கிடா – இந்த படத்தின் நிசப்தமான நாயகன். அதன் பார்வையும் அசைவுகளும் கதைக்கு உயிர் ஊட்டுகிறது. 🎥 தொழில்நுட்பம் ஒத்தகடை கிராமத்தின் மண்...

இரண்டாவது முறையாக பெற்றோராகும் இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியர்

Image
இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர இயக்குநரும், தொடர் வெற்றியை வழங்கி வரும் தனித்துவமான படைப்பாளியான இயக்குநர் அட்லீ மீண்டும் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.  இயக்குநர் - தயாரிப்பாளர் அட்லீ - திருமதி பிரியா அட்லீ இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார் எனும் மகிழ்ச்சியான செய்தியை.. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே மீர் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக அட்லீ அப்பாவாகி இருக்கிறார்.  இது தொடர்பாக பிரியா அட்லி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், '' எங்களது குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் இணைகிறார். ஆம்! நான் மீண்டும் கருவுற்று இருக்கிறேன். உங்களுடைய வாழ்த்துகளையும், அன்பையும் எதிர்பார்க்கிறேன்'' என பதிவிட்டு, பிரத்யேக புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  இந்த புகைப்படம்-  அட்லீயின் விவரிக்க முடியாத தந்தையின் பாசத்தையும், நேசத்தையும் , புன்னகையுடன் வெளிப்படுவதுடன், தந்தையாக அவரின் பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கிறது. அத்துடன் பிரியா அட்லீ - மீர் இடை...

ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஓராண்டு உழைப்பு : வியக்க வைக்கும் நேதாஜி

Image
தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக 'ஒளடதம்' படத்தின் மூலம் அறிமுகமானார் நேதாஜி பிரபு.மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றிப் பேசியது அந்தப் படம். 'ஒளடதம்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு.  சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும் வகையில் அவர் அட்டகாசமான ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார். தனது தோற்றத்திற்காக உடல் எடையைக் கூட்டி முறுக்கேற்றி,சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து, தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.இந்த போட்டோ ஷூட்டில் எட்டு விதமான ஸ்டைல்களில் எட்டு விதமான மாறுபட்ட தோற்றங்களில் 15 மணி நேரத்தில் 30 உடைகள் மாற்றி எடுத்துள்ளார். இப்படிப்பட்ட தோற்ற மாற்றங்களில் 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து இதுவரை யாரும் செய்யத் துணியாத வகையில் இந்த போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளார். இதன் மூலமாக தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த கணக்கைத் தொடங்குவதற்கு ஆர்வமாக களம் இறங்கி உள்ளார் நேதாஜி பிரபு. எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்கக் கூடிய வகையில் ...

சிறை - திரைப்படம் ZEE5 தமிழில் ஸ்ட்ரீமாகிறது எப்போது தெரியுமா?

Image
ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த சமீபத்திய பொங்கல் பிராண்ட் திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிகரமான ஒரிஜினல் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களுக்குப் பிறகு, தமிழ் ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் பெரும் பாராட்டுகளைக் குவித்த கிரைம் – நீதிமன்ற டிராமா திரைப்படமான "சிறை" திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது. இப்படத்தை இயக்குநர் தமிழ் கதையை மையமாக வைத்து, அவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. Seven Screen Studio சார்பில் S.S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில், விக்ரம் பிரபு, L.K. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் மற்றும் அனந்தா தம்பிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் L.K. அக்ஷய் குமாரின் அறிமுகப் படமாகும். மேலும், தமிழ் இயக்குநராக அறிமுகமான அவரது முந்தைய ‘டாணாக்காரன்’ படத்திற்குப் பிறகு, விக்ரம் பிரபு – தமிழ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘சிறை’...

ZEE5 தமிழ் 2026-ஐ திகிலான பொழுதுபோக்கு வரிசையுடன் தொடங்குகிறது

Image
ZEE5 தமிழ், 2026-ஆம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி பொழுதுபோக்குகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் கதைகளுடன், வலுவான திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களின் வரிசையை கொண்ட ZEE5 தமிழ், இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான கதைகள் மற்றும் முழுமையான பார்வை அனுபவங்களை இந்த ஆண்டு வழங்கத் தயாராக உள்ளது. 2026-க்கான ZEE5 தமிழின் வேகம் ஏற்கனவே துவங்கிவிட்டது. தளபதி விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, ZEE5 உள்ளடக்கங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் நாளில் அதிகமான சந்தாதாரர்களை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடித்த “மாஸ்க்” திரைப்படம் பெற்ற பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. ZEE5 இந்த ஆண்டில் வலுவான தொடக்கத்தை உறுதி செய்துள்ளது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ZEE5 தமிழ், ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடிப்பில் உருவான சிறப்பு பொங்கல் பிராண்ட் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு திகில் நிறைந்த பொழுதுபோக்கை வழங்கும் தனது வாக்...

தனுஷ் நடிப்பில் ‘கர’ – பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

Image
தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கர’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் சினிமா ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனம் மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை, டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிக்கிறார். அவரது மகள் குஷ்மிதா கணேஷ் இணை தயாரிப்பாளராக செயல்படுகிறார். 90 களின் காலகட்டத்தில் ‘கரசாமி’ எனும் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, மர்மம் கலந்த பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.  ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். திரைக்கதையை அவர் அல்ஃபிரட் பிரகாஷ் உடன் இணைந்து எழுதியுள்ளார். இவர்களின் வெற்றிகரமான கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்கிறது. அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் , படத்தின் பிரம்மாண்டம், மனநிலை மற்றும் கதை ஆழத்தை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தி, விறுவிற...

தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படம், பூஜையுடன் துவங்கியது !

Image
Pepin de Raisin Productions சார்பில், P. J. கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும், அழகான காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம், படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, விமரிசையான பூஜையுடன், இன்று கோலாகலமாக துவங்கியது.  இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இயக்குநர் I. அகமது இவ்விழாவில் கலந்துகொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற தன் அம்மா வாழ்ந்த 1990 களின் உலகை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறான் மகன்.  அதில் நடக்கும் களேபரங்கள் தான் இப்படத்தின் மையம். வயிறு வலிக்க சிரித்து மகிழும் காமெடியுடன், அனைவரும் ரசிக்கும் அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்குகிறார் ஜெய் அமர் சிங்.  இந்த படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பியோர்ன், தீபா (விஜய் டிவி) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு கட்டமாக...

ஸ்ரீநிஷா பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்!

Image
சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் " தீராப்பகை". கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான விஜயராகவேந்திரா நாயகனாக நடிக்க தென்னிந்திய மொழிகளில் பிரபலமான ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஸ்டைலான குத்து பாடலை இயக்குநர் ஆதிராஜன் எழுதியிருக்கிறார். நட்சத்திர ஹோட்டலின் பாரில் நடனமங்கை ஒருத்தி அனைத்து விதமான மதுபானங்களையும் தன் உடலோடு ஒப்பிட்டு பாடுவது போன்ற அந்த பாடல் " லக்கா லக்கா லடுக்கி நான் தான் டாஸ்மாக்கு.....பீரு பிராந்தி விஸ்கி தொட்டா பாஸ்மார்க்கு....கண்ணு ரம்மு கண்ணம் ஜின்னு நாட்டு சரக்கு நடந்து வந்தாளே.... ஸ்மைலு பிரீஸர் ஸ்டைலு வோட்கா லிப்பு ரெண்டில் ஒயினு தந்தாளே...." என்று தொடர்கிறது. இந்த பாடலை 'ஸ்டைலிஷ் தமிழச்சி' ஸ்ரீநிஷா சீனிவாசன் கிக் ஏற்றும் குரலில் பாடி இருக்கிறார்.  இவர் "அரண்மனை-4" படத்தில் தமன்னாவின் கவர்ச்சி ஆட்டத்தில் சூப்பர் ஹிட்டான ...

ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகும் - மகாசேனா

Image
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘மகாசேனா (MAHASENHA)’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, ஓடிடி தளங்களில் வெளியாக தயாராகியுள்ளது.  தினேஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கிய இந்த காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படம், ஜனவரி 13, 2026 முதல் AHA OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 23, 2026 அன்று Amazon Prime Video தளத்திலும் படம் வெளியாகிறது. இயற்கை, ஆன்மிகம் மற்றும் காட்டு புராணங்களை ஒன்றிணைக்கும் கதைக்களத்துடன், தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் மனித பேராசைக்கும் இடையிலான மோதலை வலுவான திரைக்கதையாக்கமாக படம் முன்வைக்கிறது. கூடலூர், வயநாடு, கொல்லிமலை, ஊட்டி உள்ளிட்ட இயற்கை காடுகளில் பெரும்பாலும் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம், கண்ணைக் கவரும் காட்சிகளும் ஆழமான உணர்ச்சிகளும் நிறைந்த அனுபவத்தை வழங்குகிறது. படத்தில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மகிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துகான் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், ‘சேனா’ என்ற யானை முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறுகிறது. இசையை A. பிரவீன் குமார் மற்றும் உ...

திரையரங்கில் வெளியாகி 100 நாட்களைக் கடந்த “காந்தாரா சேப்டர் 1”   தற்போது விருதுகளுக்கான களத்தில் நுழைந்துள்ளது !!

Image
“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது.  இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் ஆழமாக வேரூன்றிய இந்தத் திரைப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இன்றைய இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக  “காந்தாரா சேப்டர் 1 ” தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ரிஷப் ஷெட்டி எழுத்து இயக்கத்தில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான இப்படம், அதன் ஆழமான கதையமைப்பு, காட்சித் தன்மை மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுக்காக பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது. வெளியீட்டின் 100 நாட்களை கொண்டாடும் இந்நேரத்தில், “காந்தாரா சேப்டர் 1”  திரைப்படம் “அகாடமி அவார்ட்ஸ்”   விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது, பண்பாட்டுச் செழுமையும் உண்மையான உள்ளூர் கதையாக்கமும் கொண்ட இந்திய ...

“மூன்வாக்” படக்குழுவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் கொண்டாட்டம் !!

Image
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ரசிகர்கள், “மூன்வாக்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியும் கொண்டாட்டத்துடனும் உள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக, இசை மாமேதை ஏ.ஆர்.ரஹ்மான், மூன்வாக் ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் தானே பாடியிருப்பதுடன், இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார். நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மூன்வாக்” திரைப்படத்தின் மாபெரும் ஆடியோ வெளியீட்டு விழா, மறக்க முடியாத இசை இரவாக மாறியது. அந்த மாலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் அசத்தலான நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, ரசிகர் கூட்டத்தை பெரிதும் உற்சாகப்படுத்தியது. இயக்குநர் மனோஜ் NS, இத்திரைப்படத்தை உண்மையிலேயே நினைவில் நிற்கும் ஒன்றாக உருவாக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், மூன்வாக் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு பேரானந்தமும் மகிழ்ச்சியும் தரும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் முதல் மு...

“காந்தி டாக்ஸ்” ( ‘Gandhi Talks’ ) – A.R. ரஹ்மான் இசையில் 30 ஜனவரி 2026 அன்று வெளியாகிறது !!*

Image
Zee Studios ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வழக்கத்திற்கு மாறான திரைப் படைப்பான “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் 30 ஜனவரி 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவீன இந்திய சினிமாவில் அரிதாகக் காணப்படும் ஒரு மௌனத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ள “காந்தி டாக்ஸ்”, வசனங்கள் ஏதுமின்றி, மௌனமே கதையை சொல்லும், மிக வலுவான ஒரு துணிச்சலான படைப்பாக உருவாகியுள்ளது. சினிமா பெரும்பாலும் பிரமாண்டம் மற்றும் ஒலியால் உருவாக்கப்படும் இக்காலகட்டத்தில், “காந்தி டாக்ஸ்” அதிலிருந்து மாறுபட்டு, உணர்ச்சி மற்றும் அமைதியைத் தனது மொழியாக தேர்ந்தெடுத்துள்ளது. இந்தப் படம், தனது கருத்தை வெளிப்படுத்த சத்தமின்றி, உணர்வோடு, நிசப்தமாக பேசுகிறது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு ஒன்றிணைந்துள்ளது. இவர்கள் அனைவரும் உரையாடல்களில்லாமல், முழுமையாக நடிப்பும் வெளிப்பாடும் மட்டுமே சார்ந்த கதையாடலை ஏற்றுக்கொண்டுள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் அர...

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ரூட் ‘ROOT – Running Out of Time’ முதல் பார்வையை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Image
Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த தருணம் படக்குழுவினருக்கு மறக்க முடியாத, பெருமைமிக்க நினைவாக அமைந்தது. ‘ROOT’ படத்தின் முதல் பார்வை மற்றும் சில முக்கிய காட்சிகள் தலைவருக்கு நேரில் காண்பிக்கப்பட்டது. காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும், இப்படம் சிறப்பான வெற்றியை பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.  அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் S சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் துணை இயக்குநராக . தற்போது ‘ROOT – Running Out of Time’ படத்தின் மூலம் தனது முதல் படத்தை இயக்கியிருக்கிறார்.  ‘ROOT – Running Out of Time’ படத்தை சூரியபிரதாப் S எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனா...

99/66 – இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா

Image
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகியுள்ள 99/66 “தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எம்.எஸ். மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் சபரி, ரோகித் கதாநாயகர்களாகவும், ரக்‌ஷிதா மகாலட்சுமி, ஸ்வேதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு, “இயக்குநர் சங்க தலைவரா? இல்லை ரக்‌ஷிதா ரசிகர் மன்ற தலைவரா?” என ஆர்.வி.உதயகுமாரை நகைச்சுவையாக பாராட்டினார். நடிகை ரக்‌ஷிதா, புத்தர் குறித்து இப்படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் பெரிதாக பேசப்படும் என கூறினார். பில்டிங் தொழிலிலிருந்து சினிமாவுக்கு வந்து கலக்கும் தயாரிப்பாளர் மூர்த்தியை ஆர்.வி.உதயகுமார் பாராட்டினார். புத்த மடாலயங்களில் 500 புத்த பிக்குகளுடன் படமாக்கப்பட்ட பாடல்கள், AI-CG தொழில்நுட்ப காட்சிகள், பக்தி–எனர்ஜி கலந்த இசை ஆகியவை படத்திற்கு தனிச்சிறப்பாக பேசப்பட்டது. படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.