99/66 – இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகியுள்ள 99/66 “தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எம்.எஸ். மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் சபரி, ரோகித் கதாநாயகர்களாகவும், ரக்ஷிதா மகாலட்சுமி, ஸ்வேதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு, “இயக்குநர் சங்க தலைவரா? இல்லை ரக்ஷிதா ரசிகர் மன்ற தலைவரா?” என ஆர்.வி.உதயகுமாரை நகைச்சுவையாக பாராட்டினார். நடிகை ரக்ஷிதா, புத்தர் குறித்து இப்படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் பெரிதாக பேசப்படும் என கூறினார். பில்டிங் தொழிலிலிருந்து சினிமாவுக்கு வந்து கலக்கும் தயாரிப்பாளர் மூர்த்தியை ஆர்.வி.உதயகுமார் பாராட்டினார்.
புத்த மடாலயங்களில் 500 புத்த பிக்குகளுடன் படமாக்கப்பட்ட பாடல்கள், AI-CG தொழில்நுட்ப காட்சிகள், பக்தி–எனர்ஜி கலந்த இசை ஆகியவை படத்திற்கு தனிச்சிறப்பாக பேசப்பட்டது. படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.




Comments
Post a Comment