Posts

Showing posts from April, 2025

நவீன் சந்திராவின் ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

Image
*திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட நவீன் சந்திரா நடிக்கும் 'லெவன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்* *'லெவன்' டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்* ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ' லெவன் ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லெவன்' திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 'லெவன்' டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில...

NTR - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ஜூன் 25, 2026ல் வெளியீடு!

Image
நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘என்.டி.ஆர்.நீல்’ திரைப்படம் ஜூன் 25, 2026 அன்று உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் இயக்குநர் பிரஷாந்த் நீல், என்.டி.ஆருடன் இணைந்து இந்த ஆக்‌ஷன் பேக்ட் படத்தை உருவாக்குகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறும் இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர்களாக கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி, ஹரி கிருஷ்ணா கோசரராஜு ஆகியோர் பணியாற்ற, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்கிறார். ரவி பஸ்ரூர் இசையமைக்க, சலபதி தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். தொழில்நுட்ப குழு: எழுத்து & இயக்கம்: பிரஷாந்த் நீல் ஒளIPPதிவு: புவன் கவுடா இசை: ரவி பஸ்ரூர் தயாரிப்பு வடிவமைப்பு: சலபதி தயாரிப்பாளர்கள்: கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி, ஹரி கிர...

சென்னை ஏரோஹப் மாலில் நடிகர் விஜய் விஷ்வாவின் வி.வி. எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Image
‘ஃப்யூச்சர் ஐகான் விருதுகள்’, ‘பிசினஸ் ஐகான் விருதுகள்’, ‘சோஷியல் விருதுகள்’, ‘வுமன் விருதுகள்’ மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கான விருதுகள் என 200-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில், ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த நவீன் அவர்களுக்கு ‘வீர தமிழன்’ விருது வழங்கப்பட்டது. மேலும், நவீன் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக நடிகர் விஜய் விஷ்வாவின் ஜே.எஃப்.சி. டிரஸ்ட் மூலம் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதிய நிறுவனமான பி.ஒய். ஒல்லிவ் மற்றும் மைண்ட் கஃபே ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் சென்னை மேயர், பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன், நடிகர்கள் மைம் கோபி உள்ளிட்ட பல திரைப்பட பிரபலங்கள், பல நாடுகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Image
தாயப்பசுவாமி பிலிம்ஸ் சார்பில் தா. ராஜசோழன் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கிய ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஏப்ரல் 28 அன்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. பிரின்ஸி நாயகியாகவும், தா. ராஜசோழன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள இப்படத்தில் ஆட்டுக்குட்டி புரூஸ்லி, கோவை ஆறுமுகம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அரவிந்த் பாபு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு கேசவன், படத்தொகுப்பு ராம்நாத், கலை இயக்கம் பழனிவேல், சண்டை பயிற்சி கபிலன், நடனம் நிரோஷான். விழாவில் இயக்குநர் பேரரசு, “முன்னேறும் ஒவ்வொரு பெண்ணும் பாரதியின் கண்ணம்மா.  இன்று கல்லூரிகளில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் படிக்கின்றனர். போதைப்பழக்கம் ஒரு நாட்டை அழிக்கும்,” என்றார். நடிகை கோமல் சர்மா, “பெண் கல்வி, போதைப்பழக்க தடுப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவை படத்தின் மையம். பெண்களுக்கு கல்லூரி வரை இலவச கல்வி வழங்க வேண்டும்,” என்றார். தா. ராஜசோழன், “பேருந்து நடத்துநராக இருந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இப்படத்தை உருவாக்கினேன்,” என்றார். விழாவில் பி.ஆர்.ஓ. வி...

"கிஸ் மீ இடியட்" படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் நடிகை ஸ்ரீ லீலா

Image
தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலா நடித்த " கிஸ் "  இளமை ததும்பும் காதல் கதை ஸ்ரீ லீலா நடிக்கும் " கிஸ் மி இடியட் "  நாகன் பிக்ச்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க ஸ்ரீ லீலா நாயகியாக நடிக்கும் படம் " கிஸ் மீ இடியட் "  ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்த " கிஸ் " படம் தமிழில் " கிஸ் மீ இடியட் " என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். மற்றும் ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஜெய்சங்கர் ராமலிங்கம்  இசை - பிரகாஷ் நிக்கி  பாடல்கள் - மணிமாறன்  கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய A.P.அர்ஜுன் தமிழிலும் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 23-04-2025 அன்று பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஸ்ரீ லீலா தெலுங்கு,கன்னடம் , இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தாலும் தமிழுக்கு இதுவே முதல் படம். இவர் நடித்த புஷ்பா 2 சினிமா வரலா...

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்*

Image
இயக்குநர் பூரி ஜெகன்னாத்- 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  தற்போது இந்தத் திரைப்படத்தில் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய்குமார் இணைந்திருக்கிறார். 'வீர சிம்ஹா ரெட்டி' படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது.‌ இவர் திரை தோற்றத்திலும் .. தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர். விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகை தபு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்கிறார். இவர்களுடன் விஜய் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான இவர் .. தன்னுடைய புதிய தோற்றத்தில் மின்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதால்... பல அற்புதமான தருணங்களை...

டூரிஸ்ட் ஃபேமிலி' ப்ரீ-ரிலிஸ் விழா: சசிகுமார்-சிம்ரன் நடித்த படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு!

Image
நடிகர் சசிகுமார் - சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத...

வேம்பு’ திரைப்படம் அகமதாபாத் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றது

Image
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’.  அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்க, டூலெட், மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.    மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை படங்களில் நடித்த ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  தனுஷ் நடித்த தங்கமகன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த A. குமரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், அதோ முகம், GV.பிரகாஷ் நடித்த ரபேல் படத்திற்கு இசை அமைத்த மணிகண்டன் முரளி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார், மிருதன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த KJ . வெங்கட்ரமணன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார், துணிவு, வலிமை போன்ற முன்னணி படங்களில் பணிபுரிந்த ராம்ஜி சோமா இப்படத்திற்கு ஒலிக்கலவை செய்துள்ளார் . பெண் தன்னையே பாதுகாத்துக் கொள்தல், கூடவே அரணாக நிற்கும் சரியான ஆண்துணை பற்றிய நிகழ்வுகளுடன் இப்ப...

கலைப்புலி ஜி. சேகரன் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்!

Image
  சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க செயலாளராக இருந்த கலைப்புலி ஜி. சேகரன் மறைவையொட்டி, அவருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த நினைவஞ்சலி கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் கே. ராஜன், பி. அந்தோணி தாஸ், எஸ். நந்தகோபால், யு. தருண்குமார், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய கலைப்புலி எஸ். தாணு, “என் உடன் பிறவா சகோதரர் கலைப்புலி ஜி. சேகரன். 1973 காலக்கட்டத்தில் இருந்தே அவருடன் எனக்கு பழக்கம் உண்டு. அவருடன் பல நல்ல நினைவுகளும் சம்பவங்களும் உள்ளன. பல நேரங்களில் என் அலுவலகத்தில் மதிய உணவு சேர்ந்து சாப்பிட்டுள்ளோம். அவரது கதைகளைக் கேட்டு மெய்சிலிர்த்திருக்கிறோம். சேகரன் கதை சொன்னால் யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு திறமையானவர். ரஜினி, கமல், பிரபுதேவா, க...