‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
தாயப்பசுவாமி பிலிம்ஸ் சார்பில் தா. ராஜசோழன் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கிய ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஏப்ரல் 28 அன்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. பிரின்ஸி நாயகியாகவும், தா. ராஜசோழன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள இப்படத்தில் ஆட்டுக்குட்டி புரூஸ்லி, கோவை ஆறுமுகம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அரவிந்த் பாபு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு கேசவன், படத்தொகுப்பு ராம்நாத், கலை இயக்கம் பழனிவேல், சண்டை பயிற்சி கபிலன், நடனம் நிரோஷான்.
விழாவில் இயக்குநர் பேரரசு, “முன்னேறும் ஒவ்வொரு பெண்ணும் பாரதியின் கண்ணம்மா.
இன்று கல்லூரிகளில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் படிக்கின்றனர். போதைப்பழக்கம் ஒரு நாட்டை அழிக்கும்,” என்றார். நடிகை கோமல் சர்மா, “பெண் கல்வி, போதைப்பழக்க தடுப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவை படத்தின் மையம். பெண்களுக்கு கல்லூரி வரை இலவச கல்வி வழங்க வேண்டும்,” என்றார். தா. ராஜசோழன், “பேருந்து நடத்துநராக இருந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இப்படத்தை உருவாக்கினேன்,” என்றார்.
விழாவில் பி.ஆர்.ஓ. விஜயமுரளி, ஜான், இயக்குநர் ராகேஷ், நடிகர் விஜய் பிரசாத், இயக்குநர் ஐயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம் மே 9 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Comments
Post a Comment