NTR - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ஜூன் 25, 2026ல் வெளியீடு!
நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘என்.டி.ஆர்.நீல்’ திரைப்படம் ஜூன் 25, 2026 அன்று உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் இயக்குநர் பிரஷாந்த் நீல், என்.டி.ஆருடன் இணைந்து இந்த ஆக்ஷன் பேக்ட் படத்தை உருவாக்குகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறும் இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர்களாக கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி, ஹரி கிருஷ்ணா கோசரராஜு ஆகியோர் பணியாற்ற, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்கிறார். ரவி பஸ்ரூர் இசையமைக்க, சலபதி தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரிகிறார்.
தொழில்நுட்ப குழு:
எழுத்து & இயக்கம்: பிரஷாந்த் நீல்
ஒளIPPதிவு: புவன் கவுடா
இசை: ரவி பஸ்ரூர்
தயாரிப்பு வடிவமைப்பு: சலபதி
தயாரிப்பாளர்கள்: கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி, ஹரி கிருஷ்ணா கோசரராஜு
ரசிகர்களுக்கு மாஸ் மற்றும் புதிய திரை அனுபவத்தை வழங்க இந்தப் படம் தயாராகிறது!
Comments
Post a Comment