Posts

ஆழி திரைவிமர்சனம்

Image
நாகர்கோவிலில் கப்பல் மெக்கானிக் என்ற போர்வையில் போதை மருந்து கடத்தும் கொள்ளையர் சரத்குமார். அவரின் ஒரே மகள் தேவிகா. தேவிகா மீது எளிய குடும்பத்தைச் சேர்ந்த இந்திரஜித் ஜெகஜித் காதல் கொள்கிறார். அந்தக் காதலை மூர்க்கமாக எதிர்க்கும் சரத்குமார் இந்திரஜித் ஜெகஜித்-ஐ கடத்திக்கொண்டு கடலுக்குள் செல்கிறார். கடலில் இருந்து அப்பாவி காதலன் காதலியின் அப்பாவிடமிருந்து கரை வந்தாரா.. காவு வாங்கப்பட்டாரா என்பதே படத்தின் மீதிக்கதை. ரவுடித்தனம் நிரம்பிய மிரட்டல் வில்லனாக அசத்தியுள்ளார் சரத்குமார். அறிமுகமான காலத்திலே வில்லனாக நடித்த அனுபவம் அவரது நடிப்பில் பளீச்சிடுகிறது.  படத்தின் வில்லன் சரத்குமார் என்பதால் கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சில் வருகிறார் இந்திரஜித் ஜெகஜித். பெரும் போராட்டத்தைச் சந்திக்கும் சூழலில் இன்னும் ஆழமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம். நிறைய இடங்களில் வீக்-ஆக இருக்கிறார். நாயகி தேவிகா அழகாக இருக்கிறார். கிடைத்த சின்னச் சின்ன காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார். படத்தின் மற்றொரு ஹீரோவாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் ஆனந்த் நாயர். கடல் சார்ந்த காட்சிகளில் நல்ல காட்சியனுபவம் கிடை...

போர்த் ஃப்ளோர் திரைவிமர்சனம்

Image
ஒரு அபார்ட்மெண்ட்டின் நான்காவது மாடியில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஹாரர் – எமோஷ்னல் படம் தான் போர்த் ப்ளோர். காதல், குற்ற உணர்வு, தந்தை–மகள் பாசம் போன்ற உணர்ச்சிகளை ஹாரர் பேக்கேஜில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் L.R.சுந்தரபாண்டி. கதை & திரைக்கதை மும்பையில் ஐ.டி. வேலை செய்து வரும் ஆரி அர்ஜுனன், முன்னாள் காதலியின் அழைப்பால் சென்னை வருகிறார். அவர் தங்கும் “ராயல் டவுன்” அபார்ட்மெண்ட் போர்த் ப்ளோரில் சில மர்ம சம்பவங்கள் நடக்க தொடங்குகின்றன. அந்த அமானுஷ்யங்களின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதே கதை. கதை ஒரு நல்ல ஐடியாவை கொண்டிருந்தாலும், திரைக்கதை பல இடங்களில் தளர்ச்சி அடைகிறது. குறிப்பாக ஹாரர் build-up சில காட்சிகளில் மட்டுமே வேலை செய்கிறது. ட்விஸ்ட்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், அவற்றுக்கு முன் ஏற்படுத்தப்படும் emotional depth கொஞ்சம் குறைவாகத் தோன்றுகிறது. நடிப்பு ஆரி அர்ஜுனன் கதைக்கு தேவையான அளவில் நிதானமான நடிப்பை வழங்கியுள்ளார். காதலனாகவும், கோபம் கொண்ட மனிதராகவும், தந்தையாகவும் பல பரிமாணங்களில் இயல்பாக நடித்துள்ளார். வில்லனாக வரு...

பிப்ரவரி 27 வெளியாகும் “ஏ படம்”

Image
மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜகணபதி தயாரிப்பில் உருவாகியுள்ள சமூகப் பொருள் கொண்ட திரைப்படம் “ஏ படம்”, வரும் பிப்ரவரி 27 அன்று திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை  கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கி உள்ளார்  இசை – ஜோஸ் பிராங்கிளின் ஒளிப்பதிவு – சதீஷ் ✨ பர்ஸ்ட் லுக் வெளியீடு “ஏ படம்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொல் திருமாவளவன் அவர்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இது படக்குழுவுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 🎬 கதை & மையக்கருத்து இந்த திரைப்படம் விவசாய புரட்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளை எவ்வாறு ஏமாற்றுகின்றன என்ற தீவிரமான சமூக பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராஜகணபதி – கதாநாயகன் மேகா ஸ்ரீ – கதாநாயகி சந்திர போஸ் கேஷ்லெஸ் ஷிவாகோ மஸ்காரா அஸ்மிதா சுஷ்மிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  படப்பிடிப்பு 1.சென்னை 2.ஏலகிரி 3.ஏற்காடு பகுதிகளில் நடைபெற்றது. 🎙 தயாரிப்பாளர் ராஜகணபதி கூறுகையில்… “நாங்கள் திரைப்படத்தை மிகவும் அழகாக உருவாக்கினோம். ஆனால் தணிக்கைச் சான்றித...

அறிவான் - திரைவிமர்சனம்

Image
அறிவான் – தொடர்கொலைக்கும் திரில்லர் விசாரணைக்கும் இடையிலான முயற்சி தொடர்ச்சியான கொலைகளும் அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையும் மையமாகக் கொண்ட திரில்லர் படம் தான் அறிவான். ஹீரோ ஆனந்த் நாக் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி. சஸ்பென்ஷனில் இருந்த அவர், ஒரு நல்ல நாளில் மீண்டும் பணியில் சேருகிறார். அவர் பொறுப்பேற்கும் இடம் நெய்வேலி. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணைச் சுற்றி நிகழும் இரட்டை கொலை சம்பவங்கள் வழக்கை சிக்கலாக்குகின்றன.  அந்தக் கொலைகளை விசாரிக்கும் ஆனந்த் நாக், விசாரணையின் போக்கில் பல திருப்பங்களை சந்திக்கிறார். அவற்றே படத்தின் மையக் கதையை நகர்த்துகின்றன. ஆனந்த் நாக் கதாநாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் போலீஸ் யூனிஃபார்ம் அவருக்கு சற்றே பொருந்தாதது போல் தோன்றினாலும், கதை நகர்ந்தபின் அது இயல்பாகிறது.  பிக்பாஸ் ஜனனி ஒரு மீடியா நபராக தோன்றி இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கான வேலையைச் செய்துள்ளனர்; பெரிதாக குறை சொல்ல முடியாது. யஸ்வந்தின் ஒளிப்பதிவு இன்னும் தனித்துவம் காட்டியிருக்கலாம். இருப்பினும் ட்ரோ...

LSS திரை விமர்சனம்

Image
காதலர் தினத்தைக் கடந்து வந்த LSS காவியம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்!  கல்லூரி மாணவரான ஆதவ் கிருஷ்ணா படிப்பில் கெட்டிக்காரன். அவரின் நல்ல குணங்களை பார்த்து சிம்ரனுக்கு காதல் மலர்கிறது. பூத்த காதல் விரைவில் தீவிரமாகி இருவரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். இந்நிலையில், தனது கணவரை விட்டு தனியாக வாழும் அம்மாவை பார்க்க ஹீரோவுடன் ஹீரோயின் செல்கிறார். ஆனால் அங்கு சென்று ஹீரோயின் திடீரென காணாமல் போகிறார். அவளை தேடி ஹீரோ அலைகிறார். ஹீரோயின் எங்கு சென்றார்? அவர் காணாமல் போனதற்குப் பின்னால் என்ன மர்மம்? என்பதே படத்தின் மீதிக்கதை. அறிமுக நாயகன் ஆதவ் கிருஷ்ணா இன்னும் கொஞ்சம் வலுவான நடிப்பை வழங்கியிருக்கலாம். சில காட்சிகளில் மட்டும் நல்ல முயற்சி தெரிகிறது. சிம்ரன் ஓரளவு நன்றாக நடித்துப் கவனிக்க வைக்கிறார். ஹீரோவின் அம்மாவாக வரும் வினோதினி வழக்கம்போல் தனது இருப்பை உறுதியாக பதிவு செய்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்துள்ளனர். இசை ஓரளவு பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் அழுத்தம் தேவைப்பட்டது. காசியில் நடக்கும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் இயல்பாக ப...

உலகமே ஆடும் “Yethu”! – Hypers Kids Africa ரீமேக்குக்கு A. R. Rahman பாராட்டு

Image
Moonwalk திரைப்படத்தின் “Yethu” பாடல் உலகளவில் வைரலாகி வருகிறது. வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள இந்த பாடல், இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய டான்ஸ் ட்ரெண்டாக மாறியுள்ளது. ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் “Yethu” பாடலை வைத்து செய்யப்பட்ட ரீல்ஸ் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 🎶 Hypers Kids Africa ரீமேக் – ரஹ்மானின் ரியாக்ஷன்! ஆப்பிரிக்காவின் பிரபலமான குழந்தைகள் இசைக்குழு Hypers Kids Africa “Yethu” பாடலுக்கு நடன ரீமேக் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த வீடியோவை பார்த்த A. R. Rahman, “Thank you for the love. You guys are terrific” என்று கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதற்கு பதிலளித்த குழந்தைகள் குழு, “Happy to see your com...