பிப்ரவரி 27 வெளியாகும் “ஏ படம்”
மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜகணபதி தயாரிப்பில் உருவாகியுள்ள சமூகப் பொருள் கொண்ட திரைப்படம் “ஏ படம்”, வரும் பிப்ரவரி 27 அன்று திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தை கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கி உள்ளார்
இசை – ஜோஸ் பிராங்கிளின்
ஒளிப்பதிவு – சதீஷ்
✨ பர்ஸ்ட் லுக் வெளியீடு
“ஏ படம்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை
தொல் திருமாவளவன் அவர்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இது படக்குழுவுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
🎬 கதை & மையக்கருத்து
இந்த திரைப்படம் விவசாய புரட்சி மற்றும்
கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளை எவ்வாறு ஏமாற்றுகின்றன என்ற தீவிரமான சமூக பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில்
ராஜகணபதி – கதாநாயகன்
மேகா ஸ்ரீ – கதாநாயகி
சந்திர போஸ்
கேஷ்லெஸ் ஷிவாகோ
மஸ்காரா அஸ்மிதா
சுஷ்மிதா
ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு
1.சென்னை
2.ஏலகிரி
3.ஏற்காடு
பகுதிகளில் நடைபெற்றது.
🎙 தயாரிப்பாளர் ராஜகணபதி கூறுகையில்…
“நாங்கள் திரைப்படத்தை மிகவும் அழகாக உருவாக்கினோம்.
ஆனால் தணிக்கைச் சான்றிதழ் பெறும் போது சுமார் 45-க்கும் மேற்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டன.
இதனால் 18 மாதங்கள் கோர்ட் வாசலில் அலைந்து மிகுந்த சிரமத்திற்குப் பிறகே சான்றிதழ் பெற்றோம்.
ஒரு வழியாக இப்போது படம் பிப்ரவரி 27 அன்று திரைக்கு வருகிறது.
இப்படத்தில் நான் அம்பேத்கர் வேடத்தில் நடித்துள்ளேன்.
சமுதாயத்தில் நிலவும் அவலங்களை அம்பேத்கர் பேசுவது போல் பேசிக் காட்டியது எனக்கு பெருமை அளித்தது.
எங்களின் நல்ல படைப்பை அனைவரும் திரையில் பார்த்து ஆதரவு தர வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”
Comments
Post a Comment