LSS திரை விமர்சனம்

காதலர் தினத்தைக் கடந்து வந்த LSS காவியம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்! 

கல்லூரி மாணவரான ஆதவ் கிருஷ்ணா படிப்பில் கெட்டிக்காரன். அவரின் நல்ல குணங்களை பார்த்து சிம்ரனுக்கு காதல் மலர்கிறது. பூத்த காதல் விரைவில் தீவிரமாகி இருவரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.

இந்நிலையில், தனது கணவரை விட்டு தனியாக வாழும் அம்மாவை பார்க்க ஹீரோவுடன் ஹீரோயின் செல்கிறார். ஆனால் அங்கு சென்று ஹீரோயின் திடீரென காணாமல் போகிறார். அவளை தேடி ஹீரோ அலைகிறார்.

ஹீரோயின் எங்கு சென்றார்? அவர் காணாமல் போனதற்குப் பின்னால் என்ன மர்மம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

அறிமுக நாயகன் ஆதவ் கிருஷ்ணா இன்னும் கொஞ்சம் வலுவான நடிப்பை வழங்கியிருக்கலாம். சில காட்சிகளில் மட்டும் நல்ல முயற்சி தெரிகிறது. சிம்ரன் ஓரளவு நன்றாக நடித்துப் கவனிக்க வைக்கிறார்.

ஹீரோவின் அம்மாவாக வரும் வினோதினி வழக்கம்போல் தனது இருப்பை உறுதியாக பதிவு செய்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்துள்ளனர்.

இசை ஓரளவு பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் அழுத்தம் தேவைப்பட்டது. காசியில் நடக்கும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் இயல்பாக பதிவு செய்துள்ளார்.

 எடிட்டிங் பகுதியில் சிறிது நீளம் குறைத்திருக்கலாம்.
ஜாலியான காதல் கதையாக தொடங்கும் படம், இரண்டாம் பாதியில் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக மாறுகிறது. 

ஆனால் குடும்ப வில்லன்களின் நடிப்பும், மேக்கிங்கும் சுமாராகவே அமைந்திருக்கிறது.

அட்லீஸ்ட் மேக்கிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், இந்த படத்தை நாமே “லவ், ஷேர், சப்ஸ்கிரைப்” செய்திருப்போம் 

மதிப்பெண்: 2.75 / 5 

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்