Posts

Showing posts from February, 2026

ஆழி திரைவிமர்சனம்

Image
நாகர்கோவிலில் கப்பல் மெக்கானிக் என்ற போர்வையில் போதை மருந்து கடத்தும் கொள்ளையர் சரத்குமார். அவரின் ஒரே மகள் தேவிகா. தேவிகா மீது எளிய குடும்பத்தைச் சேர்ந்த இந்திரஜித் ஜெகஜித் காதல் கொள்கிறார். அந்தக் காதலை மூர்க்கமாக எதிர்க்கும் சரத்குமார் இந்திரஜித் ஜெகஜித்-ஐ கடத்திக்கொண்டு கடலுக்குள் செல்கிறார். கடலில் இருந்து அப்பாவி காதலன் காதலியின் அப்பாவிடமிருந்து கரை வந்தாரா.. காவு வாங்கப்பட்டாரா என்பதே படத்தின் மீதிக்கதை. ரவுடித்தனம் நிரம்பிய மிரட்டல் வில்லனாக அசத்தியுள்ளார் சரத்குமார். அறிமுகமான காலத்திலே வில்லனாக நடித்த அனுபவம் அவரது நடிப்பில் பளீச்சிடுகிறது.  படத்தின் வில்லன் சரத்குமார் என்பதால் கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சில் வருகிறார் இந்திரஜித் ஜெகஜித். பெரும் போராட்டத்தைச் சந்திக்கும் சூழலில் இன்னும் ஆழமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம். நிறைய இடங்களில் வீக்-ஆக இருக்கிறார். நாயகி தேவிகா அழகாக இருக்கிறார். கிடைத்த சின்னச் சின்ன காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார். படத்தின் மற்றொரு ஹீரோவாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் ஆனந்த் நாயர். கடல் சார்ந்த காட்சிகளில் நல்ல காட்சியனுபவம் கிடை...

போர்த் ஃப்ளோர் திரைவிமர்சனம்

Image
ஒரு அபார்ட்மெண்ட்டின் நான்காவது மாடியில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஹாரர் – எமோஷ்னல் படம் தான் போர்த் ப்ளோர். காதல், குற்ற உணர்வு, தந்தை–மகள் பாசம் போன்ற உணர்ச்சிகளை ஹாரர் பேக்கேஜில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் L.R.சுந்தரபாண்டி. கதை & திரைக்கதை மும்பையில் ஐ.டி. வேலை செய்து வரும் ஆரி அர்ஜுனன், முன்னாள் காதலியின் அழைப்பால் சென்னை வருகிறார். அவர் தங்கும் “ராயல் டவுன்” அபார்ட்மெண்ட் போர்த் ப்ளோரில் சில மர்ம சம்பவங்கள் நடக்க தொடங்குகின்றன. அந்த அமானுஷ்யங்களின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதே கதை. கதை ஒரு நல்ல ஐடியாவை கொண்டிருந்தாலும், திரைக்கதை பல இடங்களில் தளர்ச்சி அடைகிறது. குறிப்பாக ஹாரர் build-up சில காட்சிகளில் மட்டுமே வேலை செய்கிறது. ட்விஸ்ட்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், அவற்றுக்கு முன் ஏற்படுத்தப்படும் emotional depth கொஞ்சம் குறைவாகத் தோன்றுகிறது. நடிப்பு ஆரி அர்ஜுனன் கதைக்கு தேவையான அளவில் நிதானமான நடிப்பை வழங்கியுள்ளார். காதலனாகவும், கோபம் கொண்ட மனிதராகவும், தந்தையாகவும் பல பரிமாணங்களில் இயல்பாக நடித்துள்ளார். வில்லனாக வரு...

பிப்ரவரி 27 வெளியாகும் “ஏ படம்”

Image
மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜகணபதி தயாரிப்பில் உருவாகியுள்ள சமூகப் பொருள் கொண்ட திரைப்படம் “ஏ படம்”, வரும் பிப்ரவரி 27 அன்று திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை  கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கி உள்ளார்  இசை – ஜோஸ் பிராங்கிளின் ஒளிப்பதிவு – சதீஷ் ✨ பர்ஸ்ட் லுக் வெளியீடு “ஏ படம்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொல் திருமாவளவன் அவர்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இது படக்குழுவுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 🎬 கதை & மையக்கருத்து இந்த திரைப்படம் விவசாய புரட்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளை எவ்வாறு ஏமாற்றுகின்றன என்ற தீவிரமான சமூக பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராஜகணபதி – கதாநாயகன் மேகா ஸ்ரீ – கதாநாயகி சந்திர போஸ் கேஷ்லெஸ் ஷிவாகோ மஸ்காரா அஸ்மிதா சுஷ்மிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  படப்பிடிப்பு 1.சென்னை 2.ஏலகிரி 3.ஏற்காடு பகுதிகளில் நடைபெற்றது. 🎙 தயாரிப்பாளர் ராஜகணபதி கூறுகையில்… “நாங்கள் திரைப்படத்தை மிகவும் அழகாக உருவாக்கினோம். ஆனால் தணிக்கைச் சான்றித...

அறிவான் - திரைவிமர்சனம்

Image
அறிவான் – தொடர்கொலைக்கும் திரில்லர் விசாரணைக்கும் இடையிலான முயற்சி தொடர்ச்சியான கொலைகளும் அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையும் மையமாகக் கொண்ட திரில்லர் படம் தான் அறிவான். ஹீரோ ஆனந்த் நாக் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி. சஸ்பென்ஷனில் இருந்த அவர், ஒரு நல்ல நாளில் மீண்டும் பணியில் சேருகிறார். அவர் பொறுப்பேற்கும் இடம் நெய்வேலி. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணைச் சுற்றி நிகழும் இரட்டை கொலை சம்பவங்கள் வழக்கை சிக்கலாக்குகின்றன.  அந்தக் கொலைகளை விசாரிக்கும் ஆனந்த் நாக், விசாரணையின் போக்கில் பல திருப்பங்களை சந்திக்கிறார். அவற்றே படத்தின் மையக் கதையை நகர்த்துகின்றன. ஆனந்த் நாக் கதாநாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் போலீஸ் யூனிஃபார்ம் அவருக்கு சற்றே பொருந்தாதது போல் தோன்றினாலும், கதை நகர்ந்தபின் அது இயல்பாகிறது.  பிக்பாஸ் ஜனனி ஒரு மீடியா நபராக தோன்றி இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கான வேலையைச் செய்துள்ளனர்; பெரிதாக குறை சொல்ல முடியாது. யஸ்வந்தின் ஒளிப்பதிவு இன்னும் தனித்துவம் காட்டியிருக்கலாம். இருப்பினும் ட்ரோ...

LSS திரை விமர்சனம்

Image
காதலர் தினத்தைக் கடந்து வந்த LSS காவியம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்!  கல்லூரி மாணவரான ஆதவ் கிருஷ்ணா படிப்பில் கெட்டிக்காரன். அவரின் நல்ல குணங்களை பார்த்து சிம்ரனுக்கு காதல் மலர்கிறது. பூத்த காதல் விரைவில் தீவிரமாகி இருவரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். இந்நிலையில், தனது கணவரை விட்டு தனியாக வாழும் அம்மாவை பார்க்க ஹீரோவுடன் ஹீரோயின் செல்கிறார். ஆனால் அங்கு சென்று ஹீரோயின் திடீரென காணாமல் போகிறார். அவளை தேடி ஹீரோ அலைகிறார். ஹீரோயின் எங்கு சென்றார்? அவர் காணாமல் போனதற்குப் பின்னால் என்ன மர்மம்? என்பதே படத்தின் மீதிக்கதை. அறிமுக நாயகன் ஆதவ் கிருஷ்ணா இன்னும் கொஞ்சம் வலுவான நடிப்பை வழங்கியிருக்கலாம். சில காட்சிகளில் மட்டும் நல்ல முயற்சி தெரிகிறது. சிம்ரன் ஓரளவு நன்றாக நடித்துப் கவனிக்க வைக்கிறார். ஹீரோவின் அம்மாவாக வரும் வினோதினி வழக்கம்போல் தனது இருப்பை உறுதியாக பதிவு செய்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்துள்ளனர். இசை ஓரளவு பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் அழுத்தம் தேவைப்பட்டது. காசியில் நடக்கும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் இயல்பாக ப...

உலகமே ஆடும் “Yethu”! – Hypers Kids Africa ரீமேக்குக்கு A. R. Rahman பாராட்டு

Image
Moonwalk திரைப்படத்தின் “Yethu” பாடல் உலகளவில் வைரலாகி வருகிறது. வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள இந்த பாடல், இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய டான்ஸ் ட்ரெண்டாக மாறியுள்ளது. ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் “Yethu” பாடலை வைத்து செய்யப்பட்ட ரீல்ஸ் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 🎶 Hypers Kids Africa ரீமேக் – ரஹ்மானின் ரியாக்ஷன்! ஆப்பிரிக்காவின் பிரபலமான குழந்தைகள் இசைக்குழு Hypers Kids Africa “Yethu” பாடலுக்கு நடன ரீமேக் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த வீடியோவை பார்த்த A. R. Rahman, “Thank you for the love. You guys are terrific” என்று கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதற்கு பதிலளித்த குழந்தைகள் குழு, “Happy to see your com...

பூக்கி – திரை விமர்சனம்

Image
காதலர்கள் பிரிவதும், பிரிந்தபின் இணைவதும் உலக வழக்கம். ஆனால் காலத்துக்கு காலம் பிரிவுகளை எதிர்கொள்ளும் பாணி மாறிக்கொண்டே தான் இருக்கிறது. அந்த மாற்றங்களை நாயகனும் நாயகியும் எப்படி சந்திக்கிறார்கள் என்பதே பூக்கி படத்தின் மையக் கருத்து. நாயகனாக Ajay Dishan நடித்துள்ளார். அவரிடம் எந்த “மீட்டர்” தேவையோ அதை துல்லியமாகப் பிடித்து நடிப்பை வாங்கியுள்ளார் இயக்குநர் Ganesh Chandra. ஹீரோவும் முழு ஒத்துழைப்புடன் நல்ல ரிசல்ட் கொடுத்துள்ளார். நாயகி Thanusha தனது நடிப்பில் ஒரு மெச்சூரிட்டி காட்டியுள்ளார். சில காட்சிகளில் அவரது எமோஷனல் எக்ஸ்பிரஷன்கள் கணிசமாக ஸ்கோர் செய்கின்றன. Adithya Kathir அடிக்கும் பன்ச்கள் ஜென்சி கிட்ஸை சிரிக்க வைக்கும் வகையில் இருக்கின்றன. Vivek Prasanna தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஒரு எமோஷனல் சீனில் Pandiarajan சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும் செயல்பட்டுள்ளார் கணேஷ் சந்திரா. நல்ல லைட்டிங் சென்ஸ் கொண்டவர் என்பதைக் காட்டும் விதமாக, குட்டி குட்டி காட்சிகளுக்கே க்யூட்டான ஷாட்ஸை கம்போஸ் செய்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் அதிக தாக்கத்...

மை லார்ட் - திரை விமர்சனம்

Image
  திரைமொழி வழியாக மீண்டும் ஒரு சமூகக் குரலை ஒலிக்கச் செய்துள்ளார் இயக்குநர் Raju Murugan. அந்தக் குரலின் பெயர் – மை லார்ட். கோவில்பட்டியில் வாழும் எளிய மனிதன் சசிகுமார். “வாடிய பயிரைக் கண்டதும் வாடும்” மனசு. அவரது மனைவி சைத்ராவின் வாழ்க்கை லட்சியம் – ஒரு ரேஷன் கார்டு வாங்குவது. அந்த சாதாரண கனவு நிறைவேறுவதற்குள் சில துயரங்கள் நடக்கின்றன. அதே நேரத்தில், மத்திய அமைச்சர் Asha Sarath நடித்திருக்கும் கதாபாத்திரம் கிட்னி பிரச்சினையால் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை அவசியம். அந்த மேட்ச் ஆகும் கிட்னி — சசிகுமாருடையது. இந்த இடத்தில் கதையை நிறுத்திக் கொண்டால், திரையரங்கில் அது எப்படி விரிகிறது என்பதை பார்க்கும் அனுபவம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். சும்மாவே பல படங்களில் கர்ணனாகத் தோன்றும் Sasikumar, இந்தப் படத்தில் கர்ணனாகவே வாழ்ந்துள்ளார். இது அவருக்கே தைக்கப்பட்ட சட்டை; அவர் தான் அணிய முடியும். நாயகி Chaitra எளிய பெண்ணாக இயல்பாக நடித்தும், பல இடங்களில் வலிமையாக ஸ்கோர் செய்கிறார். ஆச்சர்யப்படுத்தும் நடிகர்கள் பட்டியல் நீளமானது. அதில் கவிஞர் Vasu...

ஸ்வீட்டி நாட்டி கிரேசி - திரை விமர்சனம்

Image
“சில கதைகளைச் சொன்னா புரியாது.  சில கதைகளைச் சொல்லவே கூடாது” — இந்த இரண்டுக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட படம் இது. கூடாத சமாச்சாரங்களை எல்லாம் கூட வைத்து கும்மி அடித்துள்ளார் இயக்குநர் Rajasekar. இந்தப்படத்தின் வசனங்களை உண்மையிலேயே பேனாவால் எழுதினாரா என்ற சந்தேகம், பக்கத்தில் படம் பார்க்கும் ரசிகருக்கும், பக்கத்து இருக்கை காரருக்கும் ஒரே நேரத்தில் எழும். கதை என்ன? சதைகளே கதைகளாகும் போது விளக்கம் தேவையா? இருந்தாலும் லைட்டா சொன்னால்… ஹீரோ Thrigun பெயருக்கேற்றபடி மூன்று பேரை கில்மா பண்ணுகிறார். அதன் விளைவாக ஒரு காதல் புட்டுக்கொள்கிறது. ஆனால் அதில் திருப்தி அடையாமல் மீண்டும் காமமரம் ஏறி இன்னொரு பெண்ணை உசார் செய்து கல்யாணம் செய்கிறார். பின்னர் தெரிகிறது — அந்த மனைவியின் அம்மாவும் அக்காவும் ஏற்கெனவே ஹீரோவுடன் டீல் முடித்தவர்கள் என்று! அதன்பின் கதை முழுக்க “மூடு” பிடிக்கிறது. எதை மூடி வைக்கிறது என்ற கேள்விக்கு இயக்குநர் எல்லாவற்றையும் ஓப்பனாகவே காட்டுகிறார். முடிவு எப்படி இருந்தாலும் பரவாயில்லை — காட்டும் வரைக்கும் கம்பெனிக்கு லாபம் என்பதே நோக்கமோ என தோன்றுகிறது. நடிப்பில் த்ரிக...

🎬 சீதா பயணம் – திரை விமர்சனம்

Image
“நன்றி மறப்பது நன்றன்று” என்ற எளிய ஆனால் ஆழமான கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் சீதா பயணம். நாயகியாக Aishwarya Arjun கல்யாணத்தை விரும்பாத, தனிமையை விரும்பி வாழும் பெண்ணாக வருகிறார். ஒரு நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து மதுரைக்குப் பயணிக்கும் அவர், வழியில் லிப்ட் கேட்டு காரில் ஏறும் நாயகன் Niranjan உடன் பழக ஆரம்பிக்கிறார். பயணத்தின் போது பல மனிதர்களை சந்திக்கும் இந்த இருவரின் நட்பு மெதுவாக உருவாகிறது. அந்தச் சந்திப்புகள் காரணமாக, ஐஸ்வர்யா செல்ல வேண்டிய இடத்திற்கு தாமதமாகச் செல்கிறார். ஆனால் அந்த தாமதமே அவரது உயிரைக் காப்பாற்றுகிறது. அந்த உணர்ச்சிப் பெருக்கில், தனது உயிர் பிழைப்பிற்கு காரணமான அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், ஹீரோவுடன் மீண்டும் ஒரு பயணத்தை தொடங்குகிறார். அந்த நன்றி தேடும் பயணமே படத்தின் மையக்கரு. நடிப்பில், ஐஸ்வர்யா சில இடங்களில் தடுமாறினாலும், பல காட்சிகளில் ஓரளவு நன்றாகவே நடித்துள்ளார். அதேபோல் நிரஞ்சனும் சராசரி அளவில் தன் வேலையை செய்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் Arjun அசத்தலாக ஸ்கோர் செய்கிறார். அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸ்...

மைலாஞ்சி – திரை விமர்சனம்

Image
எழுத்தாளர் Ajayan Bala மற்றும் இசைஞானி Ilaiyaraaja இணைந்திருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்போடு திரைக்கு வந்த படம் மைலாஞ்சி. ஆனால் அந்த எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றியதா என்பது கேள்விக்குறியே. நாயகன் ஸ்ரீராம் ஒரு புகைப்படக் கலைஞன். குன்னூருக்கு வருகிறார். அங்கு நாயகியை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். ஆனால் நாயகியின் மனதில் வேறொருவர் இருக்கிறார். இது நாயகனுக்கு வேதனை தருகிறது. அதிலும் மேல், “என் காதலுக்கு நீயே உதவணும்” என்று நாயகி கேட்பது கதையை வழக்கமான பாதைக்கு இட்டுச் செல்கிறது. ஹீரோ தனது காதலியின் இன்னொரு காதலுக்கு உதவ ஆரம்பித்தவுடன், இந்தக் கதை எங்கே போய் முடியும் என்பதை பார்வையாளர்கள் முன்கூட்டியே ஊகிக்க முடிகிறது. அதனால் திரைக்கதையில் சஸ்பென்ஸோ, சுவாரஸ்யமோ பெரிதாக உருவாகவில்லை. நாயகனாக நடித்துள்ள Sriram நல்ல நடிப்பை வழங்க வேண்டும் என்ற ஆர்வம் தெரிகிறது. ஆனால் அவரது கதாப்பாத்திரம் அவருக்கு பெரிய ஸ்கோப் தரவில்லை. நாயகிக்கும் அதே நிலைதான்.  முக்கிய கதாப்பாத்திரங்களே மனதில் பதியாதபோது, துணை கதாப்பாத்திரங்கள் நினைவில் நிற்பது எப்படி? இப்படத்தில் Singampuli மட்டும் அவ்வப...

கப்பிள் பிரண்ட்லி – திரை விமர்சனம்

Image
நீண்ட நாட்கள் கழித்து திரையில் ஒரு காதல் வேர் பிடித்து, கிளை விரித்து, நிழல் தந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. சமீபத்திய பல காதல் படங்கள் தராத ஒரு நிறைவை இந்த படம் நமக்குத் தருகிறது என்பதே உண்மை. வீடுகளுக்கு இன்டீரியல் (Interior) வேலைகள் எடுத்து முன்னேற வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வருகிறான் நாயகன். வாழ்க்கை அவனை வறுமையால் சோதிக்கிறது. அதே சமயம், ஐடி துறையில் வேலை பெற்று வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற கனவுடன் வேலை தேடி அலைகிறாள் நாயகி. இருவரும் ஒரு இக்கட்டான சூழலில் சந்திக்கிறார்கள். நாயகியின் வருகைக்குப் பிறகு நாயகனின் வாழ்க்கை மேல்நோக்கி நகரத் தொடங்குகிறது. கனவுகள் வேரூன்றி நிம்மதியின் நிழல் பரவத் தொடங்கும் நேரத்தில் திடீரென ஒரு இருள்மேகம் அவர்கள் வாழ்க்கைக்குள் புகுந்து விடுகிறது. அந்த இருள் கலைந்ததா? காதல் வென்றதா? என்பதே மீதிக் கதையின் கரு. கதையின் நாயகனாக Santhosh Shoban தனது கதாபாத்திரத்தில் முழுமையாக வாழ்ந்துள்ளார். தெலுங்கு நடிகர் என்றாலும் சில காட்சிகளிலேயே நம்மூரு பையன் போல மனதில் ஒட்டிக்கொள்கிறார். நாயகியாக Manasa Varanasi அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ...

பூக்கி – சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு

Image
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பூக்கி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இளைஞர்களை கவரும் ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜய் திஷான் நாயகனாகவும், அஸ்வரா நாயகியாகவும் நடித்துள்ளனர். படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கியுள்ளார். புதிய நடிகர்கள் மற்றும் புதிய படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்கும் முயற்சியாக ‘பூக்கி’ உருவாக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்தார். கதையும் திரைக்கதையும் தான் இப்படத்தின் முக்கிய பலம் என்றும், கன்டென்ட் அடிப்படையிலான படங்களை தொடர்ந்து தயாரிப்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார். ‘பூக்கி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என படக்குழு தெரிவித்தது. ‘பூக்கி’ குறித்து விஜய் ஆண்டனி பேச்சு ‘பூக்கி’ படம் ஒரு எளிமையான ஆனால் வித்தியாசமான கதை கொண்ட திரைப்படம். புதிய சிந்தனைகளுடன் வரும் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது தான் எனக்கு பிடித்த விஷயம். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குநர் கணேஷ் சந்திராவை ஒளிப்பதிவாளராக ...

ரசிகர்களை நேரில் சந்தித்த “மை லார்ட்” படக்குழு

Image
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,   மை லார்ட் ரசிகர்களுக்கு  ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும்.  ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு  என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோல தான் இந்த மை லார்ட் திரைப்படம்.   சாப்பாட்டில் சுவை முக்கியம் தான், ஆனால் உடம்புக்கு கெடுதல் என்றால் சுவையாக இருந்தால...

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ – இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது

Image
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஒரு கிரைம் திரில்லராக தயாராகியுள்ளது. ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. படம் பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இசை வெளியீட்டு விழாவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் ரவி கொட்டரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ.ஜெ., ஹரி உத்ரா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரவி கொட்டரக்கரா ப...

இந்தியாவின் முதல் Visual-Only Station நெட்வொர்க் – Impressn அறிமுகம்

Image
சென்னை, 9 பிப்ரவரி 2026:  நகரங்களில் ஆஃப்லைன் மார்க்கெட்டிங் தற்போது புதிய கட்டத்தை அடைந்து வருகிறது. மக்கள் தினமும் காணும் காட்சிகள் அவர்களின் நினைவில் இடம் பிடிக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு, Impressn Visual-Only Station என்ற புதிய மார்க்கெட்டிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. Visual-Only Station என்றால் என்ன?  Visual-Only Station என்பது ஒலியில்லாமல், தொடர்ந்து காணப்படும் சிறிய LED திரை. மக்கள் அங்கு இருக்கும்போது இயற்கையாகக் கவனிக்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைகள் தகவல், பொழுதுபோக்கு மற்றும் குறைந்த அளவு விளம்பரங்களை இயக்குகின்றன.  Impressn-ன் பங்கு  Impressn Visual-Only Station ஐ இந்தியாவில் ஒருங்கிணைந்த நெட்வொர்க் வடிவத்தில் செயல்படுத்தும் முதல் நிறுவனம். ஒவ்வொரு திரையும் தனித்தனியாக இல்லாமல், ஒருங்கிணைந்த முறையில் இயக்கப்படும்.  Visual-Only Station களில் உள்ளடக்கம்: 70% தகவல் மற்றும் பொழுதுபோக்கு 30% விளம்பரங்கள் இதனால் பார்வையாளர்கள் விளம்பரங்களால் சிரமப்படுவதில்லை, பிராண்டுகளுக்கு நினைவாற்றல் அதிக...

OTT யில் இப்போது காணுங்கள் பராசக்தி

Image
இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொலிடிகல் ஆக்ஷன் டிராமாவான "பராசக்தி" திரைப்படத்தை 2026 பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராக வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், Dawn Pictures நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ்நாட்டின் சமூக-அரசியல் வரலாற்றிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அத்தியாயத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது. 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பராசக்தி, அடையாளம், சுயமரியாதை மற்றும் எதிர்ப்புப் போராட்டம் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டு, அந்த காலகட்டத்தின் முக்கிய இயக்கத்தில் இழுத்துச் செல்லப்படும் இரண்டு சகோதரர்களின் உணர்ச்சிபூர்வமான கதையை சொல்லுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடும், கொள்கைநிலையுள்ள இளைஞரான செழியன் என்ற கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தின் பின்னணி குறித்து பகிர்ந்த இயக்...

வித் லவ் – விமர்சனம்

Image
‘வித் லவ்’ படம் இன்றைய இளம் தலைமுறையின் காதல், பழைய உறவுகளை மீண்டும் சந்திக்கும் தருணங்கள், அவற்றில் உருவாகும் குழப்பங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ஒரு சிம்பிள் காதல் கதை. இயக்குநர் மதன், பெரிய திருப்பங்கள் இல்லாமல், உணர்ச்சிகளை முன்னிலைப்படுத்தி கதையை நகர்த்த முயற்சி செய்துள்ளார். அபிஷான் ஜீவித் தனது கதாபாத்திரத்தை அமைதியான, இயல்பான நடிப்பில் வெளிப்படுத்துகிறார். சில காட்சிகளில் அவரது body language நன்றாக வேலை செய்கிறது. அனஸ்வரா ராஜன் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான முதிர்ச்சியையும் உணர்ச்சியையும் அளிக்கிறார்.  இருவருக்கிடையேயான கெமிஸ்ட்ரி சில இடங்களில் இயல்பாக இருந்தாலும், அந்த காதல் உறவு பார்வையாளரின் மனதில் ஆழமாக பதிய வேண்டிய அளவுக்கு வளரவில்லை. திரைக்கதை படத்தின் முக்கிய குறையாக தெரிகிறது. முதல் பாதி மெதுவாக நகர்வதால் சில இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது. இரண்டாம் பாதியில் உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் இருந்தாலும், அவை எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கதையின் போக்கு பெரும்பாலும் முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாக உள்ளது. சீன் ரோல்டனின் இசை படத்திற்...

மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ் – லெஜெண்ட் சரவணன் இப்போது ‘லீடர்’

Image
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் R.S. துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் இந்த படம், முழுக்க முழுக்க மாஸ்-ஆக்ஷன்-திரில் அனுபவமாக உருவாகியுள்ளது. நிழல் உலகத்துக்கும் காவல் துறைக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில், ஒரு சாமானியன் சிக்கிக்கொள்கிறான். அந்த தீவிரமான சூழலில் இருந்து, தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அவன் எவ்வாறு காப்பாற்றிக் கொள்கிறான் என்பதே ‘லீடர்’ படத்தின் மையக் கரு. இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்று, சென்னையில் நிறைவடைந்துள்ளது. மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப்...

ஏகனின் “ஹைக்கூ” – படப்பிடிப்பு துவக்கம்

Image
‘ஜோ’ திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றுமொரு தரமான முயற்சியாக உருவாகும் நடிகர் ஏகன் நடிப்பிலான “ஹைக்கூ” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சிறப்பாக துவங்கியுள்ளது. யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படம், கதையின் மையமாக பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில், கதாநாயகனாக ஏகன் நடிக்க, அவருடன் ‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ போன்ற படங்களில் கவனம் பெற்ற நடிகை பெமினா ஜார்ஜ் மற்றும் ‘கோர்ட்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முக்கியமான கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இரு நடிகைகளுக்கும் கதையை முன்னெடுக்கும் வகையில் ஆழமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பெண் கதாபாத்திரங்களின் உணர்வுகள், வாழ்க்கை பார்வை மற்றும் சமூகச் சூழலை நுணுக்கமாக வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, ‘ஜோ’ திரைப்படத்தை இயக்கிய ஹரி ஹரன்ராம் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். இதன் மூலம் நடிகைகளின் கதாபாத்திரங்கள் மேலும் வலுவாக உருவெ...

ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வரும் லக்கி திரைப்படம் எந்த OTT தளத்தில் வெளியாகிறது தெரியுமா?

Image
நேரடி ஓடிடி ஒரிஜினல் திரைப்படமான 'லக்கி', Hotstar Specials-ஆக பிப்ரவரி 20, 2026 அன்று, பிரத்யேகமாக JioHotstar-ல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை JioHotstar வெளியிட்டுள்ளது. JioHotstar சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் முதன்முறையாக 'லக்கி' திரைப்படத்தின் தனித்துவமான உலகம் அறிமுகப்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு அப்பாவியான நாய்க்குட்டி ஒன்று அரசியல் அதிகார மையங்களின் கவனத்தை ஈர்க்கும் போது உருவாகும் குழப்பங்கள்தான் மையக்கரு என்பதை 'லக்கி' டீசர் வெளிப்படுத்துகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், நகைச்சுவை, குழப்பம் மற்றும் உணர்வுப்பூர்வமான குடும்ப பொழுதுபோக்கு படமாக 'லக்கி' இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. உதய் மகேஷ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, இவர்களுடன் நடிகை தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவை, அரசியல், ஆக்‌ஷன் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் அப்பாவித்தனமும் அதிகாரமும் மோதும் போது கட்ட...

சென்சார் மீது குறை சொல்ல ஒன்றும் இல்லை: அப்படி என்னபா ஆச்சு?

Image
சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் 'ட்ரீம் கேர்ள்'. இப்படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குநர் எம். ஆர். பாரதி பேசும்போது, " இது ஒரு காதல் கதை.கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு.கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு. இப்படி இருவரும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.மற்றபடி இருவருமே ஜாலியாக வாழ்க்கையை, அதன் போக்கில் போகவிட்டு மகிழ்ச்சியின் தருணங்களை ஒரு சொட்டு கூட வீணடிக்காமல் வாழத் துடிப்பவர்கள் .  நவீன உலகத்தின் சமகாலப்பிரதியாகவும் பிரதிநிதியாகவும் அந்த இருவரும் இருக்கிறார்கள்.அவர்களுக்குள் காதல் வருகிறது. கனவைத் துரத்தும் அவர்களுக்குள் ஒரு கனவும் வருகிறது.அது சில மாயங்களைச் செய்கிறது.அதன் வர்ணஜால விளைவுகளைச் சொல்வதுதான் 'ட்ரீம் கேர்ள்' படம். இது மசாலா கலப்பி...

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப்சீரிஸ்

Image
(Movie Scroll) மூவி ஸ்க்ரோல் சார்பில் SD.சோமு தேவ் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ (He is pregnant). ஷங்கர் நாகதேவன் இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ரஞ்சனா கதாநாயகி நடிக்க, தீபா சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்துரு, வசந்த், சிரில், வேலு, பவி, மணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஷ்ணுமணி வடிவு ஒளிப்பதிவு செய்ய, வசந்த் தருண் இசையமைத்துள்ளார்.. படத்தொகுப்பை இயக்குநர் ஷங்கர் நாகதேவனே மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பையும் ஆச்சர்யத்தையும் பெற்றுள்ளது.. இயக்குநர் சங்கர் நாகதேவன் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இவர் இயக்கிய ‘அவள் பெயர் ஐட்டம்; என்கிற குறும்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது.  யூ ட்யூப்பிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த வெப்சீரிஸ் குறித்து இயக்குநர் ஷங்கர் நாகதேவன் கூறும்போது, “க...

ஜென் இஷின்ரியு கராத்தே வரலாற்றுச் சாதனை நிகழ்வு

Image
சென்னை, பிப்ரவரி 1, 2026, புகழ்பெற்ற கராத்தே மாஸ்டர் கேரிபாலாவின் வழிகாட்டுதலின் கீழ் சென்செய்ஸ் எஸ். ரோஷன், பி. பிரணவ், பி. பத்மநாபன் தீரஜ் ஆகியோரால் மெய் சிலிர்க்கும் கராத்தே சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இந்த நிகழ்வு ஒழுக்கமான கலையான, கராத்தே மற்றும் குருவின் மீதான மிகுந்த மரியாதை, நன்றியுணர்வு மற்றும் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் நோக்கதுடன் மறைந்த மாபெரும் குருவான ஷிஹான் ஹுசைனி - ஹு (இந்திய இஷின்ரியு கராத்தேயின் தந்தை) அவர்களின் நினைவாக மற்றும் அவரை பெருமை படுத்தும் விதமாக நடத்தப்பட்டது. எங்கள் ஜென் இஷின்ரியு கராத்தே மாணவர்கள் - 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சென்செய் பி. பத்மநாபன் தீரஜின் மார்பின் மீது 101 பாராங்கற்கள் உடைக்கப்பட்டன., சென்செய்ஸ் பி. பிரணவ் மற்றும் எஸ். ரோஷன் ஆகியோர் தலா 101 தொகுப்பு ( sets) நெருப்பு ஓடுகளை உடைத்து சாதனை படைத்துள்ளனர். சென்னை, மயிலாப்பூரில் உள்ள மான்ட்ஃபோர்ட் அரங்கில் நடைபெற்ற இந்த சாதனை, ஹன்ஷி கேரிபாலா என பிரபலமாக அறியப்படும் புகழ்பெற்ற மாஸ்டர் டி. பாலமுருகனின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்த்தப்பட்ட இந்த ச...