ஸ்வீட்டி நாட்டி கிரேசி - திரை விமர்சனம்
“சில கதைகளைச் சொன்னா புரியாது.
சில கதைகளைச் சொல்லவே கூடாது” — இந்த இரண்டுக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட படம் இது. கூடாத சமாச்சாரங்களை எல்லாம் கூட வைத்து கும்மி அடித்துள்ளார் இயக்குநர் Rajasekar.
இந்தப்படத்தின் வசனங்களை உண்மையிலேயே பேனாவால் எழுதினாரா என்ற சந்தேகம், பக்கத்தில் படம் பார்க்கும் ரசிகருக்கும், பக்கத்து இருக்கை காரருக்கும் ஒரே நேரத்தில் எழும்.
கதை என்ன?
சதைகளே கதைகளாகும் போது விளக்கம் தேவையா? இருந்தாலும் லைட்டா சொன்னால்…
ஹீரோ Thrigun பெயருக்கேற்றபடி மூன்று பேரை கில்மா பண்ணுகிறார். அதன் விளைவாக ஒரு காதல் புட்டுக்கொள்கிறது. ஆனால் அதில் திருப்தி அடையாமல் மீண்டும் காமமரம் ஏறி இன்னொரு பெண்ணை உசார் செய்து கல்யாணம் செய்கிறார்.
பின்னர் தெரிகிறது — அந்த மனைவியின் அம்மாவும் அக்காவும் ஏற்கெனவே ஹீரோவுடன் டீல் முடித்தவர்கள் என்று! அதன்பின் கதை முழுக்க “மூடு” பிடிக்கிறது. எதை மூடி வைக்கிறது என்ற கேள்விக்கு இயக்குநர் எல்லாவற்றையும் ஓப்பனாகவே காட்டுகிறார். முடிவு எப்படி இருந்தாலும் பரவாயில்லை — காட்டும் வரைக்கும் கம்பெனிக்கு லாபம் என்பதே நோக்கமோ என தோன்றுகிறது.
நடிப்பில் த்ரிகுண் பக்கா பாஸ் மார்க் வாங்குகிறார். எம்மாங் குத்தாக இருந்தாலும் அது கும்மாங்குத்தாக இருக்க வேண்டும் என்ற உறுதி அவரது நடிப்பில் தெரிகிறது.
Sreejita De, Ineya, Radha — இந்த மூவரணி ஆடை அலங்காரத்தை மறந்தே திரிவது வரமா, சாபமா என்பது தெரியவில்லை.
Thambi Ramaiah அவ்வப்போது “தம்பி தம்பி” என பேசும் நடிகர். ஆனால் இங்கே தம்பியை வேறுவிதமாக டீல் செய்கிறார். Sathyan உடன் வரும் காம்போ சில இடங்களில் வேலை செய்கிறது.
இசையில் Arunagiri ஓரளவு ஆறுதல் தருகிறார். ஆனால் ஒளிப்பதிவாளர் Vijay Sri கேமராவை கதையைச் சுற்றி அல்ல, குறிப்பிட்ட இடையைச் சுற்றியே அதிகம் வலம் வரவிட்டிருக்கிறார்.
காமக் கதைகள் இயல்பானவை. தேவையானவையும் கூட. ஆனால் இங்கே அது எல்லை மீறி, நம் கலாச்சாரத்தையும் பெண்களையும் அநியாயமாக இழிவுபடுத்தும் வகையில் செல்கிறது.
ஒரு அழகான ஆணைக் கண்டால், கணவனை வைத்துக்கொண்டே அவனிடம் குழையுமாம் பெண்.
மருமகனிடம் மாமியார் இஷ்டத்திற்கு இறங்கி ஆடுவாராம்.
இப்படியான சிந்தனைகள் சினிமா சலசலப்பை தரலாம்; ஆனால் ஒவ்வாமையையும் தருகின்றன.
ஆனால் ஒரு விஷயம் — படத்தை இன்ட்ரஸ்டிங்காக நகர்த்தும் வேலையை இயக்குநர் கச்சிதமாகச் செய்துள்ளார். கில்மா பட ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.
மற்றவர்களுக்கு? இது ஒரு சோதனை.
மதிப்பீடு: 2 / 5 ⭐
Comments
Post a Comment