ஏகனின் “ஹைக்கூ” – படப்பிடிப்பு துவக்கம்



‘ஜோ’ திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றுமொரு தரமான முயற்சியாக உருவாகும் நடிகர் ஏகன் நடிப்பிலான “ஹைக்கூ” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சிறப்பாக துவங்கியுள்ளது. யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படம், கதையின் மையமாக பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில், கதாநாயகனாக ஏகன் நடிக்க, அவருடன் ‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ போன்ற படங்களில் கவனம் பெற்ற நடிகை பெமினா ஜார்ஜ் மற்றும் ‘கோர்ட்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முக்கியமான கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இரு நடிகைகளுக்கும் கதையை முன்னெடுக்கும் வகையில் ஆழமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பெண் கதாபாத்திரங்களின் உணர்வுகள், வாழ்க்கை பார்வை மற்றும் சமூகச் சூழலை நுணுக்கமாக வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, ‘ஜோ’ திரைப்படத்தை இயக்கிய ஹரி ஹரன்ராம் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். இதன் மூலம் நடிகைகளின் கதாபாத்திரங்கள் மேலும் வலுவாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் குறிப்பிடத்தக்க விஷயமாக, “ஹைக்கூ” திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே டிஜிட்டல் உரிமைகள் கைப்பற்றப்பட்டிருப்பது, இந்த படத்தின் கதைக்கும், குறிப்பாக நடிகைகள் மையமாக அமைந்த கதைக்களத்துக்கும் கிடைத்த பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
பெண் கதாபாத்திரங்களுக்கு உரிய மரியாதையும், முக்கியத்துவமும் வழங்கும் ஒரு தரமான படமாக “ஹைக்கூ” ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்