மை லார்ட் - திரை விமர்சனம்


 
திரைமொழி வழியாக மீண்டும் ஒரு சமூகக் குரலை ஒலிக்கச் செய்துள்ளார் இயக்குநர் Raju Murugan. அந்தக் குரலின் பெயர் – மை லார்ட்.

கோவில்பட்டியில் வாழும் எளிய மனிதன் சசிகுமார். “வாடிய பயிரைக் கண்டதும் வாடும்” மனசு. அவரது மனைவி சைத்ராவின் வாழ்க்கை லட்சியம் – ஒரு ரேஷன் கார்டு வாங்குவது. அந்த சாதாரண கனவு நிறைவேறுவதற்குள் சில துயரங்கள் நடக்கின்றன.

அதே நேரத்தில், மத்திய அமைச்சர் Asha Sarath நடித்திருக்கும் கதாபாத்திரம் கிட்னி பிரச்சினையால் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை அவசியம். அந்த மேட்ச் ஆகும் கிட்னி — சசிகுமாருடையது.
இந்த இடத்தில் கதையை நிறுத்திக் கொண்டால், திரையரங்கில் அது எப்படி விரிகிறது என்பதை பார்க்கும் அனுபவம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

சும்மாவே பல படங்களில் கர்ணனாகத் தோன்றும் Sasikumar, இந்தப் படத்தில் கர்ணனாகவே வாழ்ந்துள்ளார். இது அவருக்கே தைக்கப்பட்ட சட்டை; அவர் தான் அணிய முடியும்.

நாயகி Chaitra எளிய பெண்ணாக இயல்பாக நடித்தும், பல இடங்களில் வலிமையாக ஸ்கோர் செய்கிறார்.
ஆச்சர்யப்படுத்தும் நடிகர்கள் பட்டியல் நீளமானது. அதில் கவிஞர் Vasumithra தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். இணை நாயகன் ரேஞ்சில் வரும் Guru Somasundaram செம்ம செம்ம.

 இயக்குநர் Gopi Nainar நடித்திருக்கும் கதாபாத்திரமும் சிறப்பு. ஆஷா சரத் வழக்கம்போல திரையில் ஆளுமை செலுத்துகிறார்.

ஒளிப்பதிவாளர் Nirav Shah தனது கேமரா கோணங்கள் மூலம் காட்சிகளின் ஆழத்தை அழகாக நமக்கு கொண்டு சேர்த்துள்ளார். இசையில் Sean Roldan தொடர்ச்சியாக ஸ்கோர் செய்து வருகிறார். பாடல்களும் பின்னணி இசையும் திரைக்கதைக்கு பெரிய பலம்.
கிட்னி திருட்டு சம்பந்தமான காட்சிகள் தமிழ்நாடு மக்களிடம் பலமாக கனெக்ட் ஆகும். அது படத்திற்கு பெரும் ஆதாரம். சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருப்பினும், “காசு இல்லாதவன்லாம் ஏன் கவர்மெண்ட் ஆஸ்பத்திரி பக்கம் வர்றான்?” போன்ற வசனங்கள் நச் நச் என தாக்குகின்றன.

நாம் எதிர்பார்த்த முடிவை, எதிர்பாராத தருணத்தில் தந்து ‘வாவ்’ ஃபேக்டரை உருவாக்குகிறார் ராஜு முருகன். எளிய மனிதனின் சர்வைவலை மையமாக வைத்து, அரசியல் அடுக்குகளையும் பேசிச் செல்லும் திரைக்கதை, மனிதத்தை பேசும் க்ளைமாக்ஸுடன் முடிகிறது.
மை லார்ட் — சமூகமும், அரசியலும், மனிதமும் கலந்த ஒரு பாசிட்டிவ் தீர்ப்பு.

மதிப்பீடு: 3/ 5 ⭐

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்