மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ் – லெஜெண்ட் சரவணன் இப்போது ‘லீடர்’


லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் R.S. துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் இந்த படம், முழுக்க முழுக்க மாஸ்-ஆக்ஷன்-திரில் அனுபவமாக உருவாகியுள்ளது.


நிழல் உலகத்துக்கும் காவல் துறைக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில், ஒரு சாமானியன் சிக்கிக்கொள்கிறான். அந்த தீவிரமான சூழலில் இருந்து, தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அவன் எவ்வாறு காப்பாற்றிக் கொள்கிறான் என்பதே ‘லீடர்’ படத்தின் மையக் கரு.
இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்று, சென்னையில் நிறைவடைந்துள்ளது. மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, அறந்தாங்கி நிஷா, குழந்தை நட்சத்திரம் இயல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், லெஜெண்ட் சரவணனின் நடிப்பில் உருவாகும் ‘லீடர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் வெளியீட்டு தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன.

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்