பூக்கி – திரை விமர்சனம்



காதலர்கள் பிரிவதும், பிரிந்தபின் இணைவதும் உலக வழக்கம். ஆனால் காலத்துக்கு காலம் பிரிவுகளை எதிர்கொள்ளும் பாணி மாறிக்கொண்டே தான் இருக்கிறது. அந்த மாற்றங்களை நாயகனும் நாயகியும் எப்படி சந்திக்கிறார்கள் என்பதே பூக்கி படத்தின் மையக் கருத்து.

நாயகனாக Ajay Dishan நடித்துள்ளார். அவரிடம் எந்த “மீட்டர்” தேவையோ அதை துல்லியமாகப் பிடித்து நடிப்பை வாங்கியுள்ளார் இயக்குநர் Ganesh Chandra. ஹீரோவும் முழு ஒத்துழைப்புடன் நல்ல ரிசல்ட் கொடுத்துள்ளார்.

நாயகி Thanusha தனது நடிப்பில் ஒரு மெச்சூரிட்டி காட்டியுள்ளார். சில காட்சிகளில் அவரது எமோஷனல் எக்ஸ்பிரஷன்கள் கணிசமாக ஸ்கோர் செய்கின்றன.

Adithya Kathir அடிக்கும் பன்ச்கள் ஜென்சி கிட்ஸை சிரிக்க வைக்கும் வகையில் இருக்கின்றன. Vivek Prasanna தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஒரு எமோஷனல் சீனில் Pandiarajan சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார்.

இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும் செயல்பட்டுள்ளார் கணேஷ் சந்திரா. நல்ல லைட்டிங் சென்ஸ் கொண்டவர் என்பதைக் காட்டும் விதமாக, குட்டி குட்டி காட்சிகளுக்கே க்யூட்டான ஷாட்ஸை கம்போஸ் செய்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் அதிக தாக்கத்தை உருவாக்கும் லாவகம் அவருக்கு நன்றாகவே வருகிறது.

இசையில் Vijay Antony இன்னும் தனது எனர்ஜியை இழக்கவில்லை என்பதைக் காட்டுகிறார். பாடல்களில் இளமை துள்ளுகிறது. பின்னணி இசையில் எனர்ஜி அள்ளுகிறது. அதேசமயம், ஷார்ப்பான எடிட்டிங்கிலும் சிக்ஸ் அடித்துள்ளார். “ஒரு பெரிய ஹார்ட்டீன் பிக்ஸ் பண்ணி வச்சிருக்கோம் சாரே!” என்ற மனநிலை முழு படத்திலும் தெரிகிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் Puthiya Parithi இக்கதையை மிகத் திறமையாக அணுகியுள்ளார். காமெடியான ஒன்லைன்களும், எமோஷனல் வசனங்களும் படத்திற்கு பெரும் பலம். எழுதிய காட்சிகளை உயிரோட்டமாக ஸ்டேஜிங் செய்துள்ளார் இயக்குநர்.

ஹீரோயின் பெயரை “ஆழி” என்று வைத்ததும், கடற்கரையில் கதையை முடித்ததும் ஒரு க்யூட் பொயட்டிக் டச்.
“ஒருத்தரின் அன்பிற்கு ஈடாக உலகில் பெரியது ஒன்றுமில்லை” என்ற கருத்தையும், எவ்வளவு பெரிய ஈகோவாக இருந்தாலும் காதல் நினைத்தால் ஒரு நொடியில் வீழ்த்திவிடும் என்பதையும் பூக்கி கவித்துவமாகச் சொல்கிறது.
டோன்ட் மிஸ் இட் மக்களே!

⭐ மதிப்பீடு: 3.5 / 5

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்