Posts

Showing posts with the label Sangeetha

காளிதாஸ் 2 - விமர்சனம்

Image
சில ஆண்டுகளுக்கு முன்பு காளிதாஸ் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு படம் மீது துளியும் எதிர்பார்ப்பில்லை. ஆனால் படம் செம்ம சர்ப்ரைஸ் கொடுத்தது. பெரிய வெற்றியும் பெற்றது. இப்போது காளிதாஸ் 2 நல்ல எதிர்பார்ப்போடு வந்துள்ளது. மெடிக்கல் மிராக்கிளாக இரண்டாம் பாகமும் ஆடியன்ஸை ஈர்க்கும் தன்மையோடு வந்திருக்கிறது. படக்குழுவிற்கு நம் வாழ்த்துகள். துப்பறியும் படங்களுக்கு கதை என்பது ஒரேயொரு சம்பவமாக இருந்தால் போதும். திரைக்கதை தான் பெரும் சம்பவங்களை நிகழ்த்த வேண்டும் இந்தப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் அரவிந்தன் ஆனந்த் அப்படியான சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார் சென்னையின் புறநகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு வயது குழந்தை மிஸ்ஸிங். அதை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் பரத். ம்ற்றொரு அதிகாரியான பவானி ஸ்ரீயும் விசாரிக்கிறார். மிஸ் ஆன குழந்தை இறந்தும் விட காவல்துறை பரபரக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளில் ஒருவரான அஜய் கார்த்தி மீது காவல்துறையின் சந்தேகப்பார்வை விழுகிறது. அவரை நீதிமன்றம் இழுத்துச்செல்லும் போது பிரகாஷ்ராஜ் அவரை காப்பாற்றி விடுகிறார். அதன்பின் இன்னொரு குழந்தை காணாம...