Posts

Showing posts from June, 2026

அனந்தன் காடு - விமர்சனம்

Image
சுயநல அரசியல்வாதி மற்றும் காவல் அதிகாரி இருவரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறு கூட்டம் படும்பாடு தான் இந்த அனந்தன் காடு படத்தின் ஆரம்பத்தில் சுனிலை கன் பாயிண்டில் நிறுத்தி ஒரு கதை சொல்கிறார் ஒரு இளைஞர். அந்தக்கதைப்படி 1989-ல் இலங்கை ராணுவத்தால் தன் குடும்பத்தை இழந்த இளைஞன் ஆர்யா கேரளா (தமிழ்நாடுன்னும் வச்சிக்கலாம்) வருகிறார். அவர் வந்து அங்கு அரசியல்வாதி ஒருவருக்காக கொலைகள் செய்யும் குட்டி கூலிப்படை ஒன்றோடு இணைகிறார். அந்தக்கூலிப்படைக்கு அரசியல்வாதி இன்னொரு அசைன்மெண்ட்-ஐ கொடுக்கிறார். அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார். அதன்பின் அந்த அரசியல்வாதி ஆர்யா உள்ளிட்டோரையே கொலை செய்ய திட்டம் தீட்ட அடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை நாயகனாக ஆர்யா இருந்தாலும் மலையாள நடிகர்கள் பலரும் நாயகர்களாக வருகிறார்கள். சண்டைக்காட்சிகளில் ஆர்யாவின் துடிப்புமிக்க உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. எமோஷ்னல் காட்சிகளில் வழக்கம் போல திணறுகிறார். சுனில் மிரட்டியுள்ளார். சில கொடூரங்களை படத்தில் அவர் நிகழ்த்தும் போது நமக்கே பதறுகிறது. ரெஜினா கஜண்ட்ரா, அக்சயகுமார், முரளி கோபி, தேவ்மோஹன், இந்திரன்ஸ், போஸ் வெங்க...

அங்கீகாரம் - விமர்சனம்

Image
ஒடுக்கப்பட்ட பின்னணியிலுள்ள ஒரு அத்லெட் வீரர், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நடத்தும் சட்டப்போராட்டமே இந்த அங்கீகாரம் சென்னையில் மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ளார் அத்லெட் வீரரான நாயகன் KJR. அவரின் அம்மா தூய்மைப் பணியாளர். தங்கை வழக்கறிஞர் ட்ரைனிங்கில் இருப்பவர். ஹீரோ KJR அத்லெட்டில் ஜெயித்தால் மட்டும் தன் குடும்பம் மீளும் என்ற நிலைமை. ஆனால் அதிகார மையமும், சாதிய அடக்குமுறையும் KJR-ஐ காமன்வெல்த்தில் கலந்துகொள்ள விடாமல் சூழ்ச்சி செய்கிறது..அந்த சூழ்ச்சிக்கு எதிராக நீதிமன்ற படியேறுகிறார் ஹீரோ! அவருக்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் கதை KJR சில காட்சிகளில் நன்றாக பெர்பாமன்ஸ் செய்துள்ளார். ஒருசில காட்சிகளில் சற்று மிகையான நடிப்பு வெளிப்படுத்துவதைத் தவிர்த்திருக்கலாம். இது அவருக்கு முதல்படம் என்பதால் அடுத்தடுத்து பெரிதாக ஜொலிப்பார் என நம்புவோம். விஜி வெங்கடேஷ், ரங்கராஜ பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான் உள்பட எல்லாக் கேரக்டர்களும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர். ஜிப்ரான் இசையில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. பின்னணி இசை கதையிலுள்ள கனத்தை நமக்கு கடத்துகிறது. ஒளிப்பதிவாளர்...

கான் சிட்டி - விமர்சனம்

Image
ஏமாந்த நிலையிலுள்ள நால்வர் ஏமாற்றும் நிலைக்குள் செல்வதே இந்த கான்சிட்டி ஓப்பன் பண்ணா கர்நாடக மாநிலத்தில் கணவன் அர்ஜுன் தாஸ், மனைவி அன்னாபென், அண்ணன் யோகிபாபு, அம்மா வடிவக்கரசி அர்ஜுன் தாஸ் அன்னாபென் ஜோடியின் மகன் அகிலன் ஐவரும் ஹோட்டல் நடத்தி வாழ்ந்து வருகிறார்கள். டைட்டில் கார்ட் முடிவதற்குள் இவர்கள் வாழ்வு காட்டப்பட டைட்டில் கார்டிற்குப் பின் அர்ஜுன் தாஸ் மகன் அகிலன் கடத்தப்படுகிறான். பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற விசாரணையில் தான் இவர்களின் உண்மையான பின்னணி தெரியவருகிறது. இந்த ஐவரும் ஒரு குடும்பமே இல்லை என்பதும், ஐவரும் போலீஸ் ஸ்டேசனிலிருந்து தப்பித்து வந்தவர்கள் எனவும் தெரியவருகிறது. அதன்பின் இவர்களின் கடந்த காலம் என்ன? என்ற கேள்விக்கும் எதிர்காலம் என்ன? என்ற கேள்விக்கும் மீதிப்படம் பதில் சொல்கிறது ஹீரோவாக அர்ஜுன் தாஸ் பிரமாதமாக நடித்துள்ளார். படத்தின் இயல்பிலே அவருக்கு மாஸ் காட்டும் காட்சிகள் அமைந்துள்ளன. அதைச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். மலையாள நடிகை அன்னாபென் ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யோகிபாபு காமெடியில் கலக்கியுள்ளார் என்றால் எமோஷ்னல் காட்சிகள...

சிங் கீதம் - விமர்சனம்

Image
94 வயதுக்கு மேல் ஒரு படைப்பாளி வித்தியாசமான படம் ஒன்றைத் தந்திருக்கிறார். யெஸ் சங்கீதம் சீனிவாச ராவ் படைத்தருளியுள்ள படமிது. நம்மூர் கமல்ஹாசனை வைத்து அன்றைய காலத்தில் பேசும்படம், மைக்கேல் மதன காம ராசு எடுத்தவர், தற்போது இளம் நடிகர்களை வைத்து பாடும் ஒன்றை எடுத்துள்ளார் கோல்ட் மைன்ஸ் எனும் ஒரு நிலத்தில் தங்கம் இருக்கிறது என தெரிய வந்ததால் அந்நிலத்தை 100 கோடி ரூபாய்க்கு விற்க முடிவெடுக்கிறார்கள் ஷாலினி கொண்டெபுடியும் அவரது அப்பாவும். நிலத்தை வாங்க வந்த வெளிநாட்டு வியாபாரி , தங்கத்தை தோண்டி எடுத்துக்காட்டச் சொல்கிறார். அச்சூழலில் அந்நிலத்தின் இன்னொரு உரிமையாளரான ஹீரோ அயான் கே அங்கு வருகிறார். அவர் நிலத்தில் ஷேர் கேட்கிறார். நிஜ உரிமையாளர் அவர் என்பதால் அவரை தட்டிக்கழிக்க முடியவில்லை. அந்த நிலத்தில் ஒரேயொரு மரம் மட்டுமே இருக்கிறது. அந்த மரத்தி வெட்டிவிட்டு தோண்டினால் தங்கம் என முடிவெடுக்கிறார்கள். ஆனால் நாயகி அஹில்யா பம்ரூவிற்கு அந்த ஒற்றை மரம் தாய்போல. அதனால் அவர் அதை வெட்ட தடை போடுகிறார். அவரின் தடையை மீறி மரம் வெட்டப்படுகிறது. அதன்பிறகு ஊரிலுள்ள அனைவரும் பேசுவதற்கு பதில் பாடு...

அந்தரன் - விமர்சனம்

Image
சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு  ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் பிரஜனுக்கு இந்த அந்தரன் கை கொடுக்குமா? நாயகி இவானா வருணை திருமணம் செய்யவிருக்கும் சில இளைஞர்கள் வரிசையாக கொல்லப்படுகிறார்கள். கொலைகளைச் செய்தவர் யார் என கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியான நாயகன் பிரஜன் வருகிறார். அவரது விசாரணையில் பல அதிர்ச்சிகள் அவருக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்குமே ஏற்படுகிறது. இந்த இன்வெஸ்டிகேசனின் என்ட் என்ன என்பதே மீதிக்கதை நாயகனாக பிரஜன் ரொம்பவே மெச்சூட் ஆக நடித்துள்ளார். அவரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பெரும்பலம். அறிமுக நாயகி இவானா வருண் இன்னுமே நல்ல நடிப்பை வழங்கியிருக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஓரளவு தேறியுள்ளார். அனுபமா குமார், செந்தில்குமாரி, ஐஸ்வர்யா கண்ணன், ஆதிரன், தண்டபாணி என ஏனைய கேரக்டர்களும் ஒகேவாக நடித்துள்ளனர் இசையமைப்பாளர் ஹரி ஆர்.எஸ் பின்னணி இசையில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். பாடல்களும் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன் மினிமலான பட்ஜெட்டிலும் குவாலிட்டியான விஷுவலை கொடுத்துள்ளார் படத்தில் ஒரு புதுமையான விசயத்தை முயற்சித்துள்ளார் இயக்குநர் சந...

ஹார்டின் - விமர்சனம்

Image
கதை  ஹீரோ சனத் ஜெய்ப்பூரில் தனது நண்பர் மணியின் ஹோட்டலில் Cook-ஆக வேலை செய்கிறார். அங்கு அவரை எதார்த்தமாக சந்திக்கும் நாயகி இனியா அவரோடு நட்பாகிறார். அந்த நட்பை எமயா காதலாக்க முயற்சிக்கும் போது ஹீரோ சனத் அதை மறுக்கிறார். அதற்கான காரணம் ப்ளாஸ்பேக்கில் மடோனோ செபாஸ்டியனோடு அவருக்கு ஒரு காதலும் பிரிவும் இருக்கிறது. அதைத்தாண்டி எமயா தன் காதலை சனத்திற்கு புரிய வைக்கும் போது ஒரு விபத்தில் சனத்திற்கு மடோனாவை காதலித்த காலம் மட்டுமே நினைவில் இருக்கிறது. ஆக கதையில் மறுபடியும் மடோனோ என்ட்ரியாக, அதன்பின் எமயாவின் காதல் என்னனானது? சனத்திற்கு ஆறு வருட நினைவுள் மீண்டும் வந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை சனந்த்குமார் இயல்பாக நடிக்க எல்லா முயற்சியையும் எடுத்துள்ளார். சில இடங்களில் மட்டுமே அது எடுபட்டுள்ளது. நாயகி எமயா நல்ல நடிப்பால் கவர்கிறார். மடோனோ செபாஸ்டின் வழக்கம் போல அழகிலும் நடிப்பிலும் ஹார்ட்டீனை அள்ளுகிறார். ஹீரோவின் நண்பராக வரும் வாட்சப் மணி இயல்பாக ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் நல்ல ஷாட்களால் வசீகரிக்கிறார். படத்தில் விஷுவல்ஸ் சூப்பர். இசையமைப்பாளர் இன்னுமே உருக்கமான பின்னணி இசையை ...

மம்மட்டியான் ஸ்டார்ஸ் - விமர்சனம்

Image
2000- கால கட்டத்தில் டிவியில் கிரிக்கெட் பார்ப்பது என்பது கடவுள் தரிசனம் போன்ற அபூர்வமானது. கிராமங்களிலிருந்து பக்கத்திலுள்ள நகரங்களுக்குச் சென்று கிரிக்கெட் பார்த்த காலமெல்லாம் உண்டு. அப்படி கிரிக்கெட் பார்க்கும் போது சில மூட நம்பிக்கைகள் உண்டு. அதாவது கிரிக்கெட் பார்க்கச் செல்லும் போது நாம் ஏதேனும் ஒரு சட்டை அணிந்திருப்போம். அன்று இந்தியா வென்றுவிட்டால் அதே சட்டையைத் தான் அடுத்த மேட்ச் பார்க்கச் செல்லும் போதும் அணிவோம். இந்த மம்மட்டியான் வெப்தொடரில், “இந்த ஜென்ஸி காலத்திலும் அது தொடர்கிறது” என்பதைப் பதிவு செய்துள்ளனர் சரி கதைக்கு வருவோம். தென் மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வர் (ஒருபெண் உள்பட) சென்னைக்கு வந்து ஐபிஎல் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக ஊரில் ஒரு திருட்டு வேலையைச் செய்து பணத்தை உஷார் செய்கிறார்கள். பணத்தை கையகப்படுத்திவிட்டு சென்னை வரும் இந்த நால்வரின் ஆசை நிறைவேறியதா? என்பதே நால்வரி கதை ஜென்ஸி கிட்ஸின் உடல்மொழியை அப்படியே பிரதிபலித்து நடித்துள்ளனர் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி, ஜகா ஆகிய நால்வரும். க...

‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

Image
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்   நடிகர் மதன்  பேசியதாவது..,  “வணக்கம் நண்பர்களே. ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். மேடைக்கு வருவதற்கு முன்பே எனக்கு நிறைய பில்ட்அப் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பில்ட்அப் எல்லாமே இந்தப் படத்திற்குத் தகுதியானதுதான். ஏனென்றால் இது அப்படியொரு நல்ல திரைப்படம். இந்தப் படத்தின் கதையிலும், அதில் சொல்லப்படும் கருத்துகளிலும் நிறைய புத்திசாலித்தனமான விஷயங்கள் இருக்கின்றன. டிரைலரையே நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எவ்வளவு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். ஆனால் படம் அதைவிட இன்னும் சிறப்பாகவும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும். சுமாரான படங்களுக்குக் கூட பத்திரிகையாளர்கள் ம...

நூறு சாமி - திரை விமர்சனம்

Image
42 வயதில் ஒரு விதவை தாய் மறுமணம் செய்துகொள்ளும் சசியின் நூறு சாமி  இரு பையன்களை கஷ்டப்பட்டு ஆளாக்கும் விதவையான ஸ்வாசிகாவிற்கு “நாம் ஒரு மறுமணம் முடித்தால் என்ன” என்ற ஆசை எழுகிறது. முதலில் முதலாமாண்டு கல்லூரி படிக்கும் தன் மகன் அஜயிடம் தெரிவிக்கிறார். மகன் பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்க அவர் அதிர்ந்து போகிறார். பின் நான்காண்டுகள் கழித்து மனம் மாறும் மகன் தன் அம்மாவிற்கு மறுமணம் செய்துவைக்க முயற்சிக்கிறான். இளையமகனும் அதற்கு ஒத்திசைகிறான். ஆனால் சுற்றமும் சொந்தமும் அதை எதிர்க்கிறது. எதிர்ப்பை மீறி இரு இளைஞர்கள் தங்கள் அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்தார்களா என்பதே படத்தின் மீதி திரைக்கதை இந்த வருடம் சிறந்த நடிகைக்கான தேசியவிருதை இப்போதே ஸ்வாசிகாவிற்கு எழுதி வைத்துவிடலாம். அந்தளவிற்கு நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். விஜய் ஆண்டனியின் கெஸ்ட் அப்பிரியன்ஸ் ஓரளவு நல்லபலனை தந்துள்ளது. அஜய் இன்னுமே ஆழமான நடிப்பைக் கொடுத்திருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை. பாலாஜி சக்திவேல் அமர்க்களமாக நடித்துள்ளார். கருணாஸ் உள்ளிட்ட பிற கேரக்டர்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள...

கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல் வெளியானது

Image
புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLPஇணைந்து தயாரித்திருக்கும்  “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது! மனித மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும்பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.   “ஒவ்வொருவரின் மனதிற்குள்ளிருக்கும் சாத்தான் வேதம் சொன்னால் என்னவாக இருக்குமென்ற?” சிந்தனையை மையக் கருவாக  உருவாகியுள்ள இந்த பாடல், கோபத்தையும்,வஞ்சத்தையும் நேர்மறை சக்தியாக மாற்றி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உன்னத கருத்தை பொட்டில் அடித்தாற் போல் பேசுகிறது. “வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்” என்ற மையக் கருத்து, பாடலின் ஒவ்வொரு காட்சியிலும், வரிகளிலும் வலிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புஷ்பநாதன் ஆறுமுகம் எழுதி, இயக்கியுள்ள இந்த பாடல், வாழ்க்கையில் சந்திக்கும் அவமானங்களும், வலிகளும், நிராகரிப்புகளும் நம்மை பழிவாங்க இயக்குபவையல்ல. மாறாக, வெற்றி பெற்று வாழ்ந்து காட்டுவதுதான் உண்மையான பதில் என்ற வலுவா...

முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது

Image
தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ள கூட்டணிகளில் ஒன்றான, சூர்யா நடிப்பிலும் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் உருவாகியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம், 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிளான “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” பாடலை படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் முறை கேட்கும்போதே மனதை கவரும் இனிமையான மெட்டும் புத்துணர்ச்சியூட்டும் உணர்வும் கொண்ட இந்தப் பாடல், இந்த சீசனின் மிகவும் நம்பிக்கைக்குரிய இசை வெளியீடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆரம்பகட்ட வரவேற்பைப் பார்க்கும்போது, வரும் நாட்களில் இசை ரசிகர்களின் மிகப்பெரிய விருப்பப் பாடலாக இது உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெலடி பாடல்களை சிறப்பாக உருவாக்குவதில் ஜி.வி. பிரகாஷ் குமார் எப்போதும் தவறுவதே இல்லை. இந்த முறையும் அவர் தனது மாயாஜாலமான இசையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் அவரது...

எங்கள் தங்கம் - திரை விமர்சனம்

Image
சாதுவாக இருக்கும் குடும்ப பெண் சமந்தா பேமிலிக்காக எடுக்கும் ஆக்சன் அவதாரம் தான் எங்கள் தங்கம் நாயகி சமந்தா தன் கணவர் திகந்த் மஞ்சாலேயை காதலித்து கரம்பிடித்தவர். அதனால் திகந்த் மஞ்சாலே வீட்டில் சமந்தாவை யாருக்கும் பிடிக்காத ஒரு சூழல். இருந்தாலும் தான் சமர்த்துப் பெண்ணாக இருந்து வீட்டில் நல்லபெயர் வாங்குகிறேன் என கணவரிடம் சொல்கிறார் சமந்தா. அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் சம்ந்தாவின் பழைய வாழ்வில் சம்பந்தப்பட்ட சிலர் அவரை கொலைசெய்ய முயற்சிக்கின்றனர். அவர்களை ஒற்றை வுமனாக சமந்தா எப்படி எதிர்கொண்டார் என்பது படத்தின் கதை ஒன்வுமன் ஆர்மியாக சமந்தா படத்தை தன் நடிப்பால் தாங்கியுள்ளார். சர்வ நிச்சயமாக சமந்தாவின் சண்டைக்காட்சிகளை நாம் பாராட்டியே தீரவேண்டும். தன் உடல் ரணங்களை பொறுத்துக்கொண்டு அவர் காட்டியிருக்கும் மாஸ் பெர்பாமன்ஸ் வேறரகம். திகந்த் மஞ்சாலே சமந்தா கணவராக மட்டுமல்ல சமத்தான கணவராகவும் நன்றாக நடித்துள்ளார். கெளதமி, ஆனந்த், ஸ்ரீ லக்ஷ்மி, குல்ஷன் உள்ளிட்ட பலரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலமாக அமைந்துள்ளது. சண்ட...

தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் #D55 “ஓம்” பட தலைப்பு அறிவிப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது!

Image
தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.  R Take Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படைப்பாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில்  Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது..,  “முதலில் இயக்குநருக்கும் தனுஷ் சாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் உங்களிடம் நன்றிக்கடன்பட்டவனாக இருக்கிறேன், சார். இந்த திரைப்படம் திரையுலகில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாகும். என் திரைப்பயணத்தில் இதுவே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்று நான் நினைக்கிறேன்...