உலகின் முதல் ரோபோடிக் ‘VEIL’ அறுவை சிகிச்சை: சென்னை அப்போலோ மருத்துவமனை புதிய சாதனை
சென்னை, மே 27: ரோபோடிக் உதவியுடனான புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி வகிக்கும் சென்னை அப்போலோ மருத்துவமனை, உலகிலேயே முதன்முறையாக ஹியூகோ ரோபோடிக்-அசிஸ்டெட் சர்ஜரி (RAS) அமைப்பைப் பயன்படுத்தி, பக்கவாட்டு அணுகுமுறை மூலமாக வீடியோ எண்டோஸ்கோபிக் இங்வினல் லிம்பாடெனெக்டமி (VEIL) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு மருத்துவ உலகில் புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை 40 வயதுடைய ஆண்குறி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு எந்தவித பெரிய பக்கவிளைவுகளும் இன்றி நோயாளி மிக விரைவாக குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆண்குறி, பெண்குறி வெளிப்பகுதி மற்றும் யோனி போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கள் இடுப்பு இடுக்குகளில் உள்ள நிணநீர்முடிச்சுகளுக்குப் பரவும்போது, இங்வினல் நிணநீர்முடிச்சு அகற்றும் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. இதுவரை இந்த சிகிச்சை பெரும்பாலும் பெரிய கீறல்களுடன் திறந்தநிலை அறுவை சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் சரும சேதம், காயம் ஆறுவதில் தாமதம் மற்றும் நிணநீர் கசிவு போன்ற சிக்கல...