Posts

Showing posts with the label Angigaaram

"அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

Image
முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது.., “அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த வசனங்களைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் இந்த ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், அவர்களின் போராட்டங்களையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. குறிப்பாக விளையாட்டில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இப்படம் அவர்களுக்கு நிச்சயம் ஒரு உ...

அங்கீகாரம் - திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து எந்த வகையான சான்றிதழ் பெற்றுள்ளது

Image
ட்ரைலர், வசனங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் கவனம் ஈர்த்த அங்கீகாரம் திரைப்படம் அனைவருக்குமான திரைப்படமாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு U சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின், டிரெய்லரும், முதல் பாடலான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜிப்ரான் இசையில், கவிஞர் கார்த்திக் நேத்தா வரிகளில் உருவான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஆழமான கருத்துகளுடன் அமைந்துள்ள இந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள வீரர்கள் சந்திக்கும் போராட்டங்களையும் அங்கீகாரத்திற்கான அவர்களின் பயணத்தையும் பேசும் படமாக “அங்கீகாரம்” உருவாகியுள்ளது. மறுக்கப்பட்ட தனது உரிமைக்காக நீதிமன்றம் ஏறி போராடும் ஒரு தடகள வீரரின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர...

“அங்கீகாரம்” படத்தின் முதல் சிங்கிள் ‘சட்ட சட்ட சட்ட சான்றோரே’ வெளியானது

Image
மனதை உலுக்கும் பாடல் ரசிகர்களை கவர்கிறது ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. டிரெய்லர் மூலம் ஏற்கனவே கவனம் ஈர்த்திருந்த இப்படம், தற்போது தனது வலுவான பாடல் மூலம் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘Contempt of Time’ என்ற தலைப்பில் வெளியான இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  சமூக நீதி, சட்டம் மற்றும் மனித வாழ்வின் போராட்டங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தப் பாடலின் வரிகளை கவிஞர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். தனது தனித்துவமான குரலாலும் உணர்வுபூர்வமான பாடல்களாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள வைக்கம் விஜயலட்சுமி, இந்தப் பாடலை உருக்கமாகப் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியும் சமூகத்தின் பல்வேறு கேள்விகளை முன்வைத்து, அங்கீகாரம் பெற போராடும் மனிதர்களின் வலியை பிரதிபலிக்கிறது. வாழ்க்கை, நீதி மற்றும் சமூக அமைப்புகள் குறித்த சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடல் உருவாகியிருப்பது ரசிகர்களிடையே பாராட்டைப் ...