Posts

Showing posts with the label Jayaram

பரிமளா & கோ விமர்சனம்

Image
மலையாளத்தில் வந்த த்ரிஷ்யம்  படத்து கதையில் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஷை வைத்து ஒன்றை முயற்சி செய்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ் இரண்டு மகள்கள் மற்றும் மனைவி ஊர்வசியுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஜெயராம். இரண்டு மகள்கள் மீதும் காதல் மற்றும் காமக்கண் வைக்கிறார் ஏரியா ரவுடியான சாண்டி. தனது இரு மகள்களுக்கும் கொடைச்சல் கொடுக்கும் சாண்டியை கொலை செய்துவிடலாமா என்ற திட்டத்தை ஜெயராம் குடும்பத்தினர் தீட்டுகின்றனர். மறுநாளே சாண்டி கொல்லப்படுகிறார். குடும்பத்தில் ஒருவர் தான் கொலை செய்ததாக குடும்பத்திற்குள்ளே விசாரணை நடைபெறுகிறது. அதன்பின் ஏரியா இன்ஸ்பெக்டர் மிஸ்கின் களம் இறங்குகிறார். அதன்பின் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் படத்தின் கதை பாபநாசம் படம் தான் இன்ஸ்பிரேசன் என்பதை உணர்ந்துகொண்ட ஜெயராம் அதற்கேற்ற பாடிலாங்குவேஜை ஆங்காங்கே ஸ்பூப் செய்கிறார். அது ஒருசில இடங்களில் வொர்க்கவுட் ஆகிறது. ஊர்வசி செய்யும் ரணகள காமெடிகள் தியேட்டரில் சிரிப்பலையை வரவைக்கிறது. “ஒரு கொலை கேசுக்கு 300 ரூபா செலவு பண்ண மாட்டீங்களா” என அவர் கேட்பதெல்லாம் அல்லுசில்லு ரகம். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா ...