Posts

Showing posts with the label Ram Charan

வசூலில் புதிய சரித்திரம் படைத்த 'தந்தை' சிரஞ்சீவி - 'மகன்' ராம்சரண்

Image
பல புகழ்பெற்ற குடும்பங்களையும்.... வெற்றிகரமான தலைமுறைகளையும்... ஒரே குடும்பத்தில் இருந்து உருவான பல நட்சத்திரங்களையும்... இந்திய திரையுலகம் சந்தித்துள்ளது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் ஒரு தனித்துவமான நிகழ்வை இந்திய திரையுலகம் கண்டுள்ளது. தந்தையும், மகனும் ஒரே ஆண்டில் மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையாளராக திகழ்கின்றனர்.  முதலில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி- அவரது நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ( Mana Sangara Vara Prasad Garu) திரைப்படத்தின் மூலம் வசூலுக்கான சாதனை களத்தை அமைத்தார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. சில மாதங்களுக்கு பிறகு சிரஞ்சீவியின் மகனும், 'மெகா பவர் ஸ்டார்' என ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவருமான ராம்சரண் அந்த சாதனையை ஒரு படி மேலே கொண்டு சென்றார்.  அவரது நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாண்ட வெற்றி படமான 'பெத்தி' ( Peddi ) - 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் உலகளாவிய ஒட்டுமொத்த வசூலை...

பெத்தி - திரை விமர்சனம்

Image
ஒரு மலையடிவாரத்தில் எந்த அடையாளமும் இல்லாமல் வாழும் ஒரு சாதாரண மனிதன், எப்படி ஒட்டுமொத்த தேசத்தின் அடையாளமாக மாறுகிறான் என்ற அழுத்தமான கதைக்களமே இந்தத் திரைப்படம். ​கதைக்களம்: ​1990-களில் கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டக்கூலி  வாங்கிக்கொண்டு யாருக்காக வேண்டுமானாலும் விளையாடும் ஒரு சாதாரண வீரர் ராம்சரண். ரயில் வசதி உள்ளிட்ட எந்தவொரு அடிப்படைப் போக்குவரத்து வசதியும் இல்லாத ஒரு கிராமத்தில், அவரும் அவரது மக்களும் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை ஒரு கட்டத்தில் உணர்கிறார். தனக்கும் தன் மக்களுக்கும் ஒரு 'அடையாளம்' தேவை என முடிவெடுத்து, சிவராஜ்குமாரிடம் குஸ்தி (மல்யுத்தம்) கற்றுக்கொள்ளப் போகிறார். அதில் சாதனையின் உச்சத்துக்கே செல்லும் போது அவருக்கு ஒரு பெரும் அசம்பாவிதம் நேர்கிறது. அதிலிருந்து மீண்டு அவர் எப்படி இலக்கை அடைந்தார் என்பதே இந்த மோட்டிவேஷனல் திரைக்கதை! படத்தின் பிளஸ் (Positives): ​ ராம்சரண் - அசுர உழைப்பு:  இந்த கதாபாத்திரத்திற்காகத் தன் உடலை அசுரத்தனமாக வருத்தியுள்ளார் ராம்சரண். ஒரு பெருவீரனுக்கான மிடுப்போடு திரையில் தோன்றி, அதிரடிச் சண்டைக்காட்...

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

Image
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தலைமையிலான படக்குழு நாடு முழுவதும் தீவிரமான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பில், படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல...