Posts

Showing posts with the label Lakshmi

கார்மேனி செல்வம் - திரை விமர்சனம்

Image
கார் டிரைவராக தன் மனைவி மகனோடு எளிமையான வாழ்வை வாழ்ந்து வரும் சமுத்திரக்கனி நாமும் பணக்கார வாழ்வை வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆசையின் அளவில் எதார்த்தம் நிறைந்திருந்தால் பெருந்துன்பம் நேராது. ஆசையின் அளவு எதார்தத்தை மிஞ்சும் போது வாழ்வும் நம்மை சூனியமாக்கி விடுகிறது. தன் தேவைகளைப் பற்றி யோசிக்காமல், தன் ஆசைகளை நோக்கிப்பயணப்படுகிறார் சமுத்திரக்கனி. அதனால் கடன்களை வாங்கிக்குவிக்கிறார். அதுவே அவர் வாழ்வில் சிக்கலாக மாறுகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை சில கேரக்டர்களுக்கு இவரை விட்டால் வேற ஆளில்லை என்போம் அல்லவா! அந்த கேட்டகிரியிலுள்ள நடிகர் சமுத்திரக்கனி. அப்படியான சாமுத்திரிகா லட்சணத்தோடு இக்கேரக்டரில் நடித்து சிறப்பு செய்துள்ளார். அவரது மனைவியாக வரும் லெட்சுமி பிரியா சந்திரமெளலி அழகாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தலைவியின் மனநிலையை நம் கண்முன் நிறுத்தியுள்ளார். கரன் சக்ரவர்த்தி, கெளதம் வாசுதேவ் மேனென், அபிநயா உள்ளிட்ட ஏனைய கேரக்டர்களும் படத்தின் பில்லர்களாக உதவியுள்ளனர் இசை படத்தின் ஆன்மாவாக ஆங்காங்கே ஒலித்துள்ளது. இசை பொறுப்பை Music as a serv...