நீளிரா - விமர்சனம்
வரலாற்றில் கொஞ்சமாக கதை இருக்கலாம். ஆனால் கதை மொத்தமும் வரலாறாக இருந்துவிடக்கூடாது. சின்னதாக அப்படியொரு பதட்ட எண்ணத்தை தந்தது நீளிரா. ஆனால் போர் குறித்த எளியவர்களின் மனநிலையை பிரதிபலித்த இப்படத்தை நாம் பார்த்தே ஆகவேண்டும் இலங்கையிலுள்ள விடுதலை இயக்கத்தை சிதைக்க, இந்திய அரசு அமைதிப்படையை அங்கு அனுப்பியது. அந்த அமைதிப்படை ஒருபுறம், விடுதலை இயக்கம் ஒரு புறம், சிங்கள படை ஒருபுறம் என தத்தம் தங்கள் நியாயங்களில் நிற்கிறார்கள். இச்சூழலில் அங்கு, ஒரு எளிய குடும்பத்தின் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. ஒரு இரவுக்குள் இந்த திருமணம் எந்தச்சுழலில் சிக்கியது… இல்லை எப்படி தப்பியது? என்பதே நீளிரா படத்தின் கதை. (நீளிரா என்றால் நீண்ட இரவு என பொருள்) இந்திய அமைதிப்படை பிரிவின் தலைமைப்பாத்திரத்தில் நவீன் சந்திரா. நல்லவராக நடித்து கவனம் ஈர்த்துள்ளார். போராளி இனக்குழுவின் அங்கமாக சனந்த் இவரின் நடிப்பும் நல்ல மைலேஜ். மேலும் கபிலவேணு, ரூபா கொடுவாயூர், விது, சித்து குமரேசன், நவயுகா, ஸ்வாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிபிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் உள்பட யாவரும் நல்ல நடிப்பால் கதைக்கு உயிர் கொடுத்துள்ளன...