Posts

Showing posts from March, 2026

ஷர்வானந்த் நடிக்கும் பைக்கர் பட பத்திரிகையாளர் சந்திப்பு

Image
முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில்  படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.  இந்நிகழ்வினில்  மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி  பேசியதாவது..,  இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. ‘பைக்கர்’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், அது இன்னும் சிறப்பு பெற...

காளிதாஸ் 2’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Image
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என். யோகேஸ்வரன் மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்.., தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது.., இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம். இந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் தரும் ஆதரவும், வெளிச்சமும் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு ...

பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு!

Image
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘ பள்ளிச்சட்டம்பி ‘படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து ‘பள்ளிச்சட்டம்பி’ மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது. இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான ‘காட்டு செம்பகம்’ பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த டீசர் ஒரு காலகட்டத்தின், அதிரடி ஆக்சனை ஒரு சிறு காட்சியாக வழங்குகிறது. டொவினோவுடன் விஜயராகவன் ஒரு முக்...