உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டுவிழாவில் கங்கை அமரன் அனல் பறக்க பேச்சு


டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டெயின்மெண்ட் சார்பில், தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு தயாரிப்பில் உருவாகியுள்ள “உறவுகள்” திரைப்படத்தின் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னை நகரில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநரும் பாடலாசிரியருமான கங்கை அமரன், இசையமைப்பாளர்கள் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலிதன் ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய கங்கை அமரன் கூறியதாவது:

“தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு அவர்களின் நல்ல எண்ணமே இந்த படைப்பின் முக்கிய பலம். அருமையான சமூக உறவுகளை மையமாகக் கொண்டு, AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடிகர்களை உருவாக்கி ஒரு புதிய கதையை வழங்கியுள்ளார்.

எங்கள் அண்ணன் இளையராஜா அவர்களின் இசையில்தான் நாங்கள் பலரும் வளர்ந்தோம். எங்கள் குழந்தைகளையும் அவரிடமே இசை கற்க அனுப்புவோம். அப்படிப்பட்ட குருமார்களுடன் வளர்ந்தது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். ஆனால் இன்றைய தலைமுறைக்கு அது கிடைக்கிறதா என்பது தெரியவில்லை.

முன்பெல்லாம் ஒரு பாடலை முழுமையாக உணர்ந்து பாடுவோம். இன்று ஒவ்வொரு வரியையும் தனித்தனியாக பதிவு செய்து, AI-இல் feed செய்து பாடல்கள் உருவாக்கப்படுகின்றன. அதில் நம்முடைய தனிப்பட்ட பெருமை எங்கே? உண்மையாகச் சொன்னால், AI தொழில்நுட்பம் மனித சிந்தனையை மெல்ல பாதிக்கத் தொடங்கியுள்ளது.

ஒரு கருவை AI-க்கு கொடுத்தாலே அது பாடல் எழுதிவிடுகிறது. அப்படியிருக்கையில் அதில் நம்முடைய பெயரை எப்படி பெருமையுடன் சேர்ப்பது? வருங்கால குழந்தைகள் தாங்களே சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். எழுதவும், படைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அவர்களுள் இருக்கும் தனித்துவமான திறமைகள் வெளிப்பட வேண்டும் என்பதே என் மனமார்ந்த ஆசை.

50 ஆண்டுகளாக இசைத்துறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களை தொடர்ந்து நேசித்து ஆதரிக்க வேண்டும். கனவாக இருந்தாலும், நினைவாக இருந்தாலும், இசையே எங்கள் மூச்சு” என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்