Posts

Showing posts with the label Paradise

பாரடைஸ் - திரை விமர்சனம்

Image
சினிமா பாரடைஸ்னு ஒரு உலக சினிமா உண்டு! எதுக்காகச் சொல்றேன்னா… சரி, இந்த பாரடைஸுக்கு வருவோம். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தாலும், ஆந்திராவில் குறிப்பிட்ட ஒரு இன மக்களுக்கு மட்டும் விடுதலை கிடைக்கவில்லை. ஒரு சமஸ்தானத்தின் கீழ் மக்கள் பெரும் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். ஹீரோ நானியின் அம்மா, நானியை வயிற்றில் சுமந்தபடியே அந்த வல்லாதிக்கத்திற்கு எதிராகப் போராடுகிறார். ஆனால் கொடூர வில்லன் அவரை சிறுமைப்படுத்துகிறான். கடினமான சூழலில் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் நானி, வளர்ந்த பின் தாயின் சபதத்தை நிறைவேற்றினாரா? என்பதுதான் படத்தின் ஒரு முக்கியக் கதை. இதற்குள் இன்னும் பல கதைகளும் கிளைக்கின்றன. இந்தப் படத்திற்காக ஒரு பேயுழைப்பைப் போட்டிருக்கிறார் நானி. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க் அளப்பரியது. எமோஷனல் காட்சிகள் வலிமையாக இல்லாவிட்டாலும், அவரின் நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. அவரின் தாயார் கதாபாத்திரமும், அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பும் அல்டிமேட். கயாது லோஹர் நடிப்பைப் பற்றிச் சொல்லணுமா என்ன? அந்த அழகு தேவதை கணநேர ஷாட்களில் தரும் தரிசனம...

நேச்சுரல் ஸ்டார்' நானி நடித்திருக்கும் 'தி பாரடைஸ் - The Paradise ' படத்தின் டீசர் வெளியீடு!

Image
'நேச்சுரல் ஸ்டார்' நானியின் பிரம்மாண்டமான உலகளாவிய திரைப்படமான 'தி பாரடைஸ்'- இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக படிப்படியாக வளர்ந்துள்ளது. அதன் ஒவ்வொரு விளம்பர அறிவிப்பும் அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது. அதன் பிரமிக்க வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - தாக்கத்தை ஏற்படுத்தும் கிளிம்ப்ஸ்- வெற்றி பெற்ற பாடலான 'ஆயா ஷேர்' ... என  இப்படம் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தனது கற்பனையை ஒரு பிரம்மாண்டமான தளத்தில் உயிர்ப்பிக்கிறார். அதே தருணத்தில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி- எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை அதன் மிகப்பெரிய லட்சியத்திற்கு ஏற்ப அயராது உழைத்திருக்கிறார். 'நரகம் கட்டவிழ்த்து விடப்பட்டு, நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது' என்ற வாசகத்துடன் இப்படத்தின் அதிரடியான டீசரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் - அடக்குமுறை மற்றும் வன்முறையால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு கொடூரமான உலகில் பார்வையாளர்களை மூழ்கடிக்கிறது. இந்த இருளுக்கு மத்தி...