இதயம் முரளி - திரை விமர்சனம்
கதை சுருக்கம் நாயகன் அதர்வா காதலைச் சொல்வதற்கு தயக்கம் காட்டும் 90 காலத்தில் பிறந்த பையன். முதல் காதல் ஸ்கூல் மிஸ்ஸில் துவங்கி அடுத்து ப்ரீத்தி முகுந்தனை லவ் பண்ணுகிறார்..அந்த லவ்வையும் அவர் சொல்லாமல் தவறவிடுகிறார். அடுத்து கயாடுலோகரை காதலிக்கிறார். அதையும் சொல்லாமல் மிஸ் செய்கிறார். கிஸ் செய்தால் குழந்தை பிறந்துவிடும் என நம்பும் 90ஸ் பாய் மிஸ் செய்த காதலை பின் மீட்டெடுத்தாரா என்பதே மீதிக்கதை இதயாவாக அதர்வா. அவரின் அப்பா முரளி நடித்த இதயம் படத்தின் ரி கிரியேட் காட்சியில் நம் இதயத்தை அள்ளுகிறார். ப்ரீத்திமுகுந்தன் அழகாலும் நடிப்பாலும் நம்மை கவர்கிறார். நட்டி அப்பா அம்மா இல்லாத அதர்வாவை பொறுப்புள்ள மாமாவாக இருந்து பார்த்துக்கொள்ளும் காட்சிகளில் மிளிர்கிறார். தமன், சுதாகர், டிராவிட் உள்ளிட்ட ஏனைய நட்சத்திரங்கள் அனைவருமே அசத்தியுள்ளனர். கயாடு லோகேர் கியூட்டோ கியூட்! பகத்பாசிலின் கேமியோ படத்திற்கு பெரும்பலம். சேட்டா பின்னிட்டார் பின்னணி இசை பாடல்கள் இரண்டிலுமே தமன் டச். என்ன இருந்தாலும் ரயில்வேஸ்டேசனில் ஒலிக்கும் இளையராஜாவின் இதயம் படத்திலுள்ள, “பொட்டு வைத்த ஒரு...