துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் நான்காவது படமன DV4 படத்தின் பூஜை!
இந்தியா முழுவதும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு திரையுலகத்துடன் மட்டும் நின்று விடாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தங்களது நான்காவது தமிழ் திரைப்படத்தை இன்று பூஜையுடன் ஆரம்பித்துள்ளனர் . மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் #MythriTamil04 #DV4 படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு மற்றும் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சசி- 'ஹாய் நானா' சௌர்யுவ்- ஆதிக் ரவிச்சந்திரன்- ஆண்டனி பாக்யராஜ் - ராஜா - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இப்படத்தின் பாரம்பரியமான முகூர்த்த தருண படப்பிடிப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் #DV 4 படத்தில் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.ஷபி மற்றும் கரண் அரவிந்த் குமார் கதை எழுதி இருக்கும் ...