டார்க் - விமர்சனம்
இயக்குனர் பாக்யராஜ் இறுதியாக நடித்த டார்க் படம் எப்படி இருக்கு படம் துவங்கியதும் ஒரு இளைஞன் தன் இரு நண்பர்களை கொன்றுவிட்டு தானும் தீக்கொளுத்திக் கொள்கிறான். இது நடப்பது 2021-ல். இப்படியான சம்பவம் நடந்த வீட்டிற்கு நான்குவருடம் கழித்து நாயகன் அஜய் கார்த்தி குடிவருகிறார். வீட்டின் உரிமையாளர் பாக்யராஜ் நடந்த விசயத்தைச் சொல்லியும் அவர் குடியிருக்கிறார். ஆனால் அவருக்கும் அங்கு ஓர் அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. இந்த மர்மங்களை துப்பு துலக்க காவல் அதிகாரியாக நட்டி வருகிறார். அவரின் விசாரணை மூலம் புலப்படும் அதிர்ச்சி நிறைந்த சம்பவங்கள் தான் படத்தின் மீதி திரைக்கதை நாயகன் அஜய் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். புது நடிகர் என்ற சுவடின்றி நடித்துள்ளதை பாராட்டியே ஆகவேண்டும். நட்டி வழக்கமான நடிப்பையே கொடுத்துள்ளார். அஞ்சனா நெதுருன் இயல்பான நடிப்பால் கவர்கிறார். மறைந்த இயக்குநர் கே பாக்யராஜ் பரிதாபத்தை அள்ளுகிறார். விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்ரவர்த்தி, ஷாகுல் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் கொடுத்த வேலைக்கு குறைவைக்கவில்லை மனு ரமேசன் இசையால் ஒரு பதட்டத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார...