விஷ்வாநாதன் & சன்ஸ் - விமர்சனம்
கதை சுருக்கம் துப்பாக்கி சுடும் போட்டியில் பெரும் சாதனைகளை நிகழ்த்தும் 42 வயது பேச்சுலர் பிஸ்னெஸ்மேன் சூர்யா. அவருக்கு அம்மா ராதிகா என்றால் உயிர். ராதிகாவின் ஒரே ஆசை சூர்யாவிற்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது. But சூர்யா திருமணம் வேண்டாம் என்ற முடிவில் தீர்மானமாக இருக்கிறார். அதற்கு ஒரு வேல்யூ ரீசனும் இருக்கிறது. அதனால் அம்மா ஆசைக்காக சூர்யா தனது உயிரணுவை வேறோர் பெண்ணின் கருமுட்டையில் வைத்து ஒரு மகனை தருவித்து தன் அம்மாவிற்கு தருகிறார். சூர்யாவின் மகனை வயிற்றில் சுமந்து பெற்ற பெண்… சாட்சாத் நம்ம மமிதா பைஜு தான். வாடகைத் தாய் ஒரிஜினல் தாய் ஆக நடக்கும் முயற்சியும் முடிவும் தான் படத்தின் மீதிக்கதை சூர்யா ஆகச்சிறப்பான நடிப்பால் நம் மனதில் நீக்கமற நிறைகிறார். ராதிகா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் சூர்யாவின் எமோஷ்னல் நடிப்பு நம் கண்களை குளமாக்குகிறது. மமிதா பைஜு படத்தை தன் துறுதுறு நடிப்பால் தூக்கிச் சுமக்கிறார். அவரின் க்யூட்னெஸ் தான் படத்தின் பெரு எனர்ஜி எனலாம். நம் தாய்கிழவி ராதிகா காட்டியிருக்கும் அனுபவ நடிப்பு படத்தின் உயிர்த்துடிப்பு. ரவிபாண்டன் உள்ளிட்ட பல கேர...