ஆகாஷ் பஸ் கரன் எனக்கு தம்பி மாதிரி இதயம் முரளி திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மயில் கல் - அட்லி பாராட்டு
Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. *இன்பன் உதயநிதி* வழங்க, *ரெட் ஜெயன்ட் மூவிஸ்* இப்படத்தை உலகமெங்கும் வெளியிடவுள்ளது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு படத்தின் விளம்பர பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக முன்னணி இயக்குநர் அட்லீ கலந்துகொண்டு சிறப்பித்தோடு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வினில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியதாவது.., இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. இயக்குநர் ஆகாஷ் இந்தக் கதையை 2018-ஆம் ஆண்டிலேயே என்னிடம் கூறினார். அப்போது அவர் ஒரு இளம் படைப்ப...