Posts

Showing posts with the label Shrutihaasan

கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன'- ஸ்ருதிஹாசன்

Image
முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் ( Rugby Premier League) தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்று அந்த விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தார். தேசிய கீதம் - ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான சஞ்சாரி ( Sanchari) பாடல் ஆகியவற்றை அவர் மிகச் சிறப்பாக பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.  இந்நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், '' இந்த ரக்பி பிரீமியர் லீக் தொடருக்கான நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைதானம் முழுவதும் நிலவிய சூழல் அற்புதமாக உள்ளது.. இங்கிருந்த உற்சாகம் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் இருந்தது.  ரக்பி விளையாட்டு ஆகட்டும் அல்லது நீங்கள் விரும்பும் வேறு எந்த வகையான விளையாட்டாக இருக்கட்டும்.. அதில் எப்போதும் சவால்கள் இருக்கத்தான் செய்யும். அது இயல்பான ஒன்றுதான். ஆனால் ஒன்றை நீங்கள் உண்மையாக நேசித்து, அதைத்தான் உங்கள் வாழ்க்கையில் செய்திட வேண்டும் என்று உறுதியாக நம்பும்போது... கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக மாறுகின்றன. அதே சமயத்தி...